இந்த கதையின் நாயகன் தேவாவின் வீடு முழுதும் பூக்களால் ஜோடிக்கப்பட்டு கல்யாண கலை கட்டி இருந்தது
நாயகி சைத்ராவின் குடும்பத்தில் அம்மா அப்பா தங்கை என்று அனைவரும் நம் மகள் திருமணம் நல்ல முறையில் நடந்த மகிழ்ச்சியில் இருந்தனர்..
தேவா பெரிய கம்பனியில் மேனேஜர் ஆக பணி புரியும் நபர்....
தேவாவின் அம்மா ஜெயா தன் கணவன் இறந்ததும் அவளுடைய உழைப்பால் தன் ஒரே மகனை படிக்க வைத்து நல்ல உத்தியோகத்தில் அமர்த்தி அழகு பார்த்த நடமாடும் தெய்வம்.... அம்மா பேச்சுக்கு மறுப்பு சொல்லாத அன்பான மகன் தான் தேவா ....
அதனால் தான் அவன் பள்ளி பருவம் காலேஜ்....ஏன் பணி புரியும் அலுவலகம் என்று சில பெண்கள் தன் காதலை வெளிப்படுத்தினாலும் அவன் தன் அம்மா கை காட்டும் பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல...
இன்று ஊர் போற்றும் வகையில் தேவாக்கும் சைத்ராவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.....
சைத்ரா படிப்பில் கெட்டிகாரி ...அழகான பெண்... அவளும் நல்ல அலுவகத்தில் மேனேஜர் ஆக பணி புரிந்து வருகிறாள்...சைத்ராவின் தங்கை ஆதிரா ...அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி
சைத்ராவின் அப்பா retire போஸ்ட் மாஸ்டர்
அம்மா குடும்ப தலைவி....
(தேவா) @ தேவ்வின் சொந்த காரர் ஒருவர் சைத்ராவின் புகை படத்துடன் அவளின் குடும்பத்தை பற்றிய நல்ல தகவல்களை சொன்னதால்.. தேவாவின் அம்மாவிற்கு சைத்ராவை பிடித்து போனதால் இறு வீட்டாரின் சம்மததோடு இன்று திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது ....
சைத்ராவின் வீட்டில் தேவ்க்கும் சைத்ராவுக்கும் இன்று முதல் இரவு ஏற்பாடு செய்து இருக்க....இவர்கள் இருவரும் ஜெயா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியவர்கள சைத்ராவின் வீட்டிற்கு சென்றனார்...
வாங்க மாப்பிளை உள்ள வாங்க..
மாமா உள்ள வாங்க என்று ஆதிரா அழைக்க...தேவ் தயக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்
YOU ARE READING
AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️
General Fiction🧡❤️🤎🖤💜💙💚💛🤍 Its not me 😁Just 4 jolly Small script