💞After கல்யாணம் next என்ன💞
சைத்ரா - யாரு தேவ் அந்த பாட்டி
தேவ் - நான் தான் சொல்றேனே அவங்க பேரு கருத்து கண்ணம்மா என் அப்பாவோட அம்மா சரியான வாயாடி கிழவி என்ன பண்ணாலும் 1008 நோட்டம் சொல்லிக்கிட்டே இருக்கும்
S - சரி அவங்களுக்கு பயந்து நம்ம ஏன் இங்க ரூமுக்குள்ள வந்து மறஞ்சிக்கணும்
D - இல்ல.. அம்மா இந்த கல்யாணத்துக்கு அவங்கள கூப்பிடல
S - என்ன சொல்றிங்க ஏன் கூப்பிடல
D - அவங்க பொண்ணு வயத்து பொண்ண எனக்கு கட்டி வைக்க அவங்க என் அம்மா கிட்ட கேட்டாங்க அம்மாவால முடியாதுன்னு சொல்லிட்டாங்க அதனால பிரச்சனை வரப்போகுதுன்னு அவங்கள கல்யாணத்துக்கு கூப்பிடல
S - சரி அதுக்காக நம்ம ஏன் பயப்படனும் நீங்க கீழே இறங்கி வாங்க
D - சைத்து சொன்னா கேளு.. அந்தப் பாட்டி பெரிய தலைவலி புடிச்சது
S - எப்பேர்பட்ட தலைவலியையும் நான் சரி பண்ணுவேன் நீங்க கீழே இறங்கி வாங்க
சைத்ரா கோவமாக கீழே போக கருத்து கண்ணம்மா என்றழைக்கப்படும் கண்ணம்மா பாட்டி கால் மேல் கால் போட்டு சோபாவில் உட்கார்ந்து இருக்க ஜெயா பயந்தபடி அவர் எதிரில் நின்று இருக்க
ஜெயா - இல்ல அத்த அவசர அவசரமா பண்ண கல்யாணம்.. அதான் உங்கள அழைக்கல
கண்ணம்மா - போதும் நிறுத்து அவசரமா பண்றதுக்கு என்ன அவசியம் எதனால நீ என் பேரன் கல்யாணத்தை என்கிட்ட சொல்லல என்ன குளிர் விட்டு போச்சா.. இல்ல நான் இந்த சமாச்சாரத்தை விட மாட்டேன் நான் உடனே போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்.. இப்பதான் தெரியுது நீ என்னோட புள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி என் பேரனையும் பிரிக்க பாக்குற
ஜெயா - அப்படியெல்லாம் இல்ல அத்த
கண்ணம்மா - இல்ல நான் உன்ன சும்மா விடமாட்டேன் இதோ இப்பவே போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்

ВЫ ЧИТАЕТЕ
AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️
Художественная проза🧡❤️🤎🖤💜💙💚💛🤍 Its not me 😁Just 4 jolly Small script