❤After கல்யாணம் what next ❤
❤part 8
என்னங்க நீங்க இன்னைக்கு ஆடி ஒன்னாச்சே...... என் மகள நான் வீட்டுக்கு அழைச்சிட்டு போவதற்காக தான் வந்தேன்
என்று தேவ்வின் மாமியார் சொல்ல.......
தேவும் சைத்ராவும் ஒருவரை ஒருவர் பரிதாமாக பார்த்துக் கொள்ளசைத்ரா - என்னம்மா சொல்றீங்க ஆடி மாசமா
ஆமா மா...என்ன மறந்துட்டியா உங்க கல்யாண தப்பவே பேசுனது தானே.. நான்தான் அப்பவே சொன்னேன் ஆடி மாசம் முடிஞ்சதுக்கு அப்புறம் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு..உங்க அப்பா தான் கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு தானே ஆடி மாசம் வருது ஆடி மாசத்துக்கு முன்னாடியே கல்யாணத்தை வச்சுக்கிட்டா நம்மளும் ஆடிப்பெருக்கு அப்ப தாலிப் பிரிச்சு கோக்கலாம்னு ஐடியா கொடுத்தாரே...என்னம்மா மறந்துட்டியா
என்று சைத்ராவின் அம்மா கேட்க..தேவ் தன் மாமனாரை முறைத்துக் கொண்டிருக்க
ஜெயா - சரி சரி நல்ல நேரம் முடிய போகுது நீங்க பண்ண வேண்டிய சடங்குகளை பண்ணி சைத்ராவை உங்க கூட அழைச்சுக்கிட்டு போங்க
தேவ் - அம்மா என்னம்மா சொல்றிங்க....சைத்து ஏன் அங்க போகணும் ஏன் ஆடி மாசம்னா அம்மா வீட்டுக்கு போகணும்னு சட்டம் இருக்கா என்ன
ஜெயா - ஏய் என்னடா நீ பெரியவங்க எதிர்க்க இப்படி பேசுற...ஆமாடா இதெல்லாம் ஒரு சடங்கு....ஆடி மாசம் அப்ப ஒரு மாசம் சைத்ரா அவங்க அம்மா வீட்டுல தான் இருக்கணும்.. சம்மந்தி நீங்க ஆக வேண்டிய வேலையை பாருங்க
என்று சொன்னபடி ஜெயா சமையலறைக்கு செல்ல
கண்ணம்மா - என்னடா பேராண்டி கல்யாணம் முடிஞ்சு ஒரே வாரம் தானே ஆச்சு..அதுக்குள்ள நம்ம பொண்டாட்டிய நம்ம கிட்ட இருந்து பிரிச்சிட்டு போறாங்கன்னு கவலைப்படுறியா.. கவலைப்படாத ஒரு மாசம் கண்ணை திறந்து மூடறதுக்குள்ள ஓடிடும்
தேவ் - கிழவி இப்ப நான் கண்ண திறந்து மூடறதுக்குள்ள நீ ஓடிப் போயிடு... இல்லையா தாத்தா போன இடத்துக்கே உன்னை நான் அனுப்பி வைத்து விடுவேன்
STAI LEGGENDO
AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️
Narrativa generale🧡❤️🤎🖤💜💙💚💛🤍 Its not me 😁Just 4 jolly Small script