என்ன 307

220 27 21
                                    

AUTHOR - சைத்ரா ஆதிரா and மாமியார் ஆகிய மூன்று பேர் கையிலும் ஆடி மாசம் அன்று அடி வாங்கிய மயக்கத்தில் தேவ் கீழே வெட்டத்தை பார்த்து மயங்கி இருக்க...

ஐயோ என்ன மா இது.... மாப்பிளை எப்படி இங்க..... முதல்ல ஆளுக்கு ஒரு கை குடுத்து தூக்குங்க....என்று தேவ் மாமனார் பதற........

அச்சோ தேவ் iam really sorry தேவ்.... நீங்கன்னு எனக்கு தெரியாது தேவ்.... iam really sorry தேவ்.... என்று சைத்ரா அழும் குரல் கூட கேட்காத அளவுக்கு தேவ் மயக்கத்தில் இருக்க.....

மாமா... மாமா எழுந்துடுங்க மாமா.... sorry மாமா.... தெரியாம அடிச்சிட்டோம் எழுந்துடுங்க மாமா... என்று ஆதிரா ஒரு பக்கம் பேச....

தம்பி நீங்கன்னு எனக்கு தெரியாது தம்பி... நான் திருடன்னு நினைத்து தான் கத்தினேன்.... என்னை மன்னிச்சிடுங்க
தம்பி.... என்று தேவ் மாமியார் வசனம் பேச....

சைத்ரா - ஆதிரா தண்ணி எடு.... சீக்கிரம்
வா....

Author - இந்த நேரத்துல ஏன் இந்த பொண்ணு சரக்கு கேக்குது

சைத்ரா - ஏய் குடு டி water பாட்டிலை

author - ஒ வாட்டரா... நான் குவாட்டர்ன்னு நினைச்சேன்....

ஆதிரா - இந்தா தண்ணி

சைத்ரா - சீக்கிரம் தா

என்று சொன்ன சைத்ரா தேவ் முகத்தில் water spray பண்ண.... தேவ் மயக்கத்தில் இருந்து கண் விழித்தவன்

தேவ் - குடும்பமா டி உங்களது... எம்மா என்னா அடி..... சொல்ல முடியாத இடத்துல எல்லாமா அடிப்பீங்க..... பாவிங்களா...

author - damage அதிகம் போல... துறைக்கு spare parts எல்லாம் உளுத்து போன சத்தம் கேக்குதாம்....

சைத்ரா - தேவ் என்ன... நீங்க திருடனை போல நைட்டு சுவர் ஏறி வந்துட்டு எங்களை கண்டமேனிக்கு திட்டுனா என்ன அர்த்தம்

ஆதிரா - அதானே.... ஏன் மாமா நீங்க இந்த வீட்டு மாப்பிள்ளை தானே....

Author - really... அது உங்களுக்கு அவரை படுக்க போட்டு புலக்கும் போது தெரியலையா...

ஆதிரா - மாப்பிளையா..கெத்தா வாசல் வழியா வர வேண்டியது தானே... உங்கள யாரு இப்படி வர சொன்னாங்க.. சரி வந்தவரு நேரா எங்க அக்காவையாவது கரெக்ட் பண்ணி இருக்கணும் அதை விட்டுட்டு எங்க அம்மாவை ஏன் போய் எழுப்புனீங்க...

AFTER கல்யாணம் NeXT என்ன... ⁉️Where stories live. Discover now