அத்தியாயம் 3(ஐ அம் சாரி)

49 1 0
                                    

கையில காசுல இல்ல.. அதனால மனசுல ஆசை இல்ல.... பொண்ணோட காதலும் தேவை இல்ல...
போதை ஏத்த நீ இருக்கையில...  என் டார்லிங்..... என் அம்மு... என் புஜ்ஜி..... ஐ லவ் யூ.... யூ ஆர் மை லவ்...  யூ ஆர் மை எவ்ரிதிங் பேபி..... நீ எப்போதும் என்ன விட்டு போயிட கூடாது..... நீ இல்லாம ஒரு நொடி கூட என்னால இருக்க முடியாது..... என ஆசை... என் கனவு.... எல்லாமே நீ தான்.... என் உசுரே  நீ தான்.... இச்.... இச்.... என்று தன் கையிலிருந்த தன் விஸ்கி பாட்டிலுக்கு உம்மா கொடுத்துக் கொண்டிருந்தான் சேண்டி... பிறந்ததிலிருந்தே சிங்கிள் பையனாக  சிங்கம் போல் சுற்றித் திரிகிறான்...  அதினாலேயே இவன் நன்பர்கள் வட்டாரத்தில் சிங்கில் சேண்டி என்று அழைக்கப்படுகிறான்....
வீட்டிற்கு போயும் மற்றொரு டவுண்டை அடித்தவன்..... கட்டிலில் படுத்தவாறே உளறிக் கொண்டிருக்க..... அவனது ஃபோன் மட்டும் அவனுக்கான நேரத்தை எண்ணிக் கொண்டிருந்தது.....
சாயாவுக்கு நான்கு மணி நேரத்தை நியமித்த டெத் டைமர்  சேண்டிக்கு 6 மணி 45 நிமிடங்களை கொடுத்திருந்தது.... நான்கரை மணி நேரங்கள் கடந்திருக்க.... தற்போது இரண்டரை மணி நேரங்கள் மட்டுமே அவனுக்கு இருந்தது.... ஆனால் போதையில் திழைத்துக் கொண்டிருக்கும் சேண்டிக்கு அதையெல்லாம் கண்டு கொள்ள நேரமில்லை.... சாயாவுக்கு பெற்றோர் இருந்தாலும் இருவரும் அவளோடு இல்லை.... ஆனால் சேண்டிக்கு அப்படியில்லை... அவனது பெற்றோர் அவனோடு இருந்தாலும் அவர்களிடமிருந்து எந்த அரவணைப்பும் கிடைக்காமல் போகவே.... போதையின் பிடியில் சிக்கிக் கொண்டான் சேண்டி... அவனது தனிமை விரட்டும் ஒரே ஒரு வழியென்றால்.... அது போதையில் மிதந்து தன்நிலை மறப்பது தான்.... ஆனால் பார்ட்டி நேரங்களை தவிர.. நன்பர்களுடன் இருக்கும் போது எப்போதும் குடிக்க மாட்டான்... ஏனென்றால் அப்போது அவனுக்கு தனிமை உணர்வு ஏற்படாதல்லவா.....
அவ்வ்வ்வ்..... என்ன சூடு... என்ன சூடு... அப்படியே கதகதப்பா இருக்குடா.... என்று பெட்டில் மல்லாக்க படுத்து தன் கைகளையும் கால்களையும் மெத்தையில் தேய்த்தவாறே படுத்திருந்தவனின் ஃபோனில் அவனுக்கான நொடிகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தது....
மல்லாக்க படுத்தவன்... ஏதோ உளறியவாறே இருந்தான்.... நேரம் செல்ல செல்ல... உள்ளே சென்ற சோம பானங்களின் உபயத்தால் கண்கள்  சொக்க... அப்படியே பெரும் குறட்டை ஒலியுடன் உறங்க தொடங்கி விட்டான் சேண்டி... அந்த அறையெங்கும் அவனது குறட்டை எதிரொலித்தது..... ஊரை கூட்டும் அளவுக்கு அவனது குறட்டை வலிமையானதாக இருக்கும் போல.... ஆனால் அவனது பெற்றோர் மட்டும் எழ வாய்ப்பில்லாமல் போனது....
நேரம் கடந்தது.... இரண்டு மணி நேரம் தான் இன்னும் மிச்சம் இருந்தது.... நிமிடங்கள் நிற்காமல் ஓட.... ஒரு மணி நேரம் கரைந்து விட்டது.. மீதம் இருப்பதோ இன்னும் ஒரு மணி நேரம் தான்......
அய்ய.. அவ்வு.... வேணாம்... வேணாம்... இச்சு தராத.... போ.. போடி... என்று எதையோ புலம்பினான் சேண்டி.....
அடித்த போதையாலும் தூக்கத்தாலும்,  மெத்தையின் நடுவில் படுத்திருந்தவன்.... சில முறை புரண்டு.... கார்பெட் மீது பொத்தென விழுந்தான்....
சேஃப் லேண்டிங்.... என்று சிரித்தவன்... தன் கைகளையும் கால்களையும் விரித்து வைத்து... மல்லாக்க படுத்து மீண்டும் உறங்க துவங்கி விட்டான்... கூடவே காதை கிழிக்கும் அவனது குறட்டை சத்தமும் அறையின் சுவர்களில் எதிரொலிக்க தொடங்கியது.....
அரை மணி கடந்தது...
திடிரென ஒரு விநோத சத்தம்... சாயாவை நடுங்க வைத்த அதே சத்தம்... அவனது ஃபோனையும் அலற வைக்க...  சேண்டியோ அசராமல் உறங்கிக் கொண்டிருந்தான்.... 
அவன் குறட்டை சத்தமே அவன் காதில் விழாது என்னும் போது... இந்த அலாரம் சத்தம் மட்டும் அவன் காதில் விழுமா என்ன... கும்பகர்ணன் போல் உறங்கிக்கொண்டிருந்த சேண்டியை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது அந்த மர்ம உருவம்....
தன்னை ஒருவன் குறுகுறுவென்று பார்ப்பதை கூட அறியாமல் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான் சேண்டி...
சில நிமிடங்களுக்குள் கன்னத்தில் கை வைத்து... ஜன்னல் அருகில் வரை நீண்டு வளர்ந்திருந்த மரக்கிளையில் அமர்ந்திருந்தது அந்த மர்ம உருவம்....
இன்னும் நேரம் வரவில்லை.... என்பதால் காத்துக் கொண்டிருந்தான் அந்த மர்ம மனிதன்....  அரை மணி நேரமாக அபாய ஒலி அலறிக் கொண்டிருக்க.... கொஞ்சமும் அசறாமல் உறங்கிக் கொண்டிருந்த சேண்டியின் அருகில் வந்தான் அந்த மர்ம மனிதன்.... கார்பெட்டில் கைகளை விரித்து கால்களை ஒடுக்கி... சிலுவையில் இயேசு நாதர் அறையப்பட்டது போன்ற பொஸிஷனில் கிடந்த சேண்டியின் தலைமாட்டில் குத்துகாலிட்டு அமர்ந்தவனாய்.... சேண்டியின் கவலையற்ற முகத்தை ஆழமாக பார்த்தான்....
உன்னோட  மரணம் உன்ன நெருங்கி வருது... அது உனக்கு தெரியலையா.... ரப்பிஷ்.... என்று முனுமுனுப்பாக கூறியவன்..... தன் முன்னே கிடந்த மாமிச மலையை தூக்கி தன் தோளின் மேல் போட.....
அம்மா..... நான் கு.....குளிக்க வர மாட்டேன்..... என்ன விட்டுடுங்க..... என் செல்ல குட்டி அம்மால்ல..... என்று மழலை பருவத்தின் நினைவோடு கைகளையும் கால்களையும் அடம் செய்த சேண்டி..... அப்படியே அந்த மர்ம மனிதனின் கழுத்தை கட்டிக் கொண்டும்.. கால்களால் அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டும்.... அவன் கன்னத்தின் தன் கன்னத்தை மோதிக் கொண்டும் பாலகன் போல் அடம் செய்ய.... அவனது செய்கைகளால் உள்ளுக்குள் சில அசௌகரியமான உணர்வுகள் தோன்றியது அந்த மர்ம மனிதனுக்கு....
ச்சை.... என்று எரிச்சலுற்ற அந்த மர்ம மனிதன்... அடுத்த நொடி சேண்டியை தொப்பென கார்பெட் விரிக்கப்பட்ட தரையில் தள்ளியிருந்தான்.....
ஆ..... என்ற அம்மே.... என்று அலறிய சேண்டி கண்களை திறந்து பார்க்க... அவன் முன் எமனாக வந்து நின்றான் அந்த மர்ம மனிதன்.....
அம்மா.... வலிக்குது..... என்று மழலையாய் கூறிய சேண்டி.... தன் பின்பக்கத்தை தடவிக் கொண்டே.....  உன் அவுட்ஃபிட் சூப்பர் அம்மா...  என்று பல் தெரிய சிரித்து வைத்தான்... சில நிமிடங்களுக்கு அங்கும் இங்குமாக உருண்டவன்...
குட் நைட் அம்மா.... என்று முனுமுனுத்தவாறே மீண்டும் உறங்கிப் போனான்.....
ரப்பிஷ்.... இடியட்..... என்று பல்லைக் கடித்த அந்த மர்ம மனிதன்.... சேண்டியின் ஒரு காலை பிடித்து இழுத்துக் கொண்டே.... முன்னமே தான் திட்டமிட்டிருந்த வாசல் வழியாக அவனை கடத்திச் சென்றான்.....
சேண்டியோ.... பிராந்தி கொடுத்த பிரம்மையால்... சொர்கத்தில் மிதப்பது போல் உணர்ந்தானே தவிர... கொஞ்சமும் சுரணை வரவில்லை அவனுக்கு.... எல்லாம்  பாட்டில் பாட்டிலாக வாய்க்குள் ஊற்றப்பட்ட பிராந்தியின் உபயம்.....
சேண்டியையும் சேர்த்து அள்ளிச் சென்ற மரணத்தின் அடுத்த இலக்கு யாரோ....
***********

மரணம் வரும் நேரம் எது?Where stories live. Discover now