இந்திரஜித்தின் கார் அவனது கம்பனிக்குள் நுழைந்தது. எப்போதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றித்திரியும் மனிதர்களால் நிரம்பி வழியும் அந்த வணிக வளாகம் என்று திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. இது தன்னுடைய கம்பெனி தானா! என்று ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப் போனான் இந்திரஜித். புதிதாய் வெளி உலகை காணும் குழந்தை ஒன்று, மக்கள் கூட்டத்தை அதிசயித்து பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
கார் நின்றதும், அவனது பாடி கார்ட் வேகமாக வந்து காரை திறந்தார். வழக்கம் போல் ஆளுமையும் கம்பீரமுமாய் வந்திறங்கிய இந்திரஜித்தை கண்ணியரின் கண்கள் கவனமாய் அளவு எடுத்துக் கொண்டிருக்க, அந்த மோகப் பார்வையின் அர்த்தம் அறியாதவனாய் ஒரு மெல்லிய புன்னகையோடு லிஃப்ட்டுக்குள் நுழைந்தான் இந்திரஜித்.
அவனை தொடர்ந்து அனைவரும் லிஃப்டினுள் ஏறினர். இந்திரன் சேண்டி மட்டும் இந்திரஜித்தை பெருமை பொங்கும் விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தான். சேண்டியின் பார்வையை இந்திரஜித்தும் கவனித்து விட்டான்.
"சேண்டி ஏன் என்னை இப்படி அதிசயமா பார்க்குற?" என்று லேசான புன்னகையுடன் கேட்டான் இந்திரஜித்.
"அண்ணா, நீங்க ரொம்ப ஹேண்ட்ஸம். உங்க கம்பெனியில வேலை பார்க்குற லேடிஸ் எல்லாம் உங்கள வச்ச கண்ணு வாங்காம பார்க்குறாங்க." என்று சேண்டி உற்சாகமாய் கூற, தன்னை பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருக்கும் பெண்களை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் இந்திரஜித்.
சீனி மிட்டாயை மொய்க்கும் எறும்புகள் போல் தன் மாநிற மேனியையும், கட்டுக் கோப்பான உடலையும் பார்வையால் மேய்ந்த பெண்களை கண்டவனுக்கு அருவருப்பாக இருந்தது.
"ஷிட்." என்று வாய்க்குள் பற்களை அரைத்தவன், சீற்றமான பார்வையோடு ஜெரியை நோக்கினான். அவ்வளவு தான் அல்லு விட்டு போனது ஜெரிக்கு. செல்ல பிராணிகளில் கூட ஆண் இனத்தை மட்டுமே வளர்ப்பவனுக்கு பெண்களின் இத்தகைய விழி வழி தூண்டில் பார்வை பிடிக்காதென்று அவனுக்கு தெரியாதா என்ன?
"சாரி பாஸ். இப்போதே எல்லாரையும் க்ளியர் பண்ணுறேன்." என்று கூறிய ஜெரி கோபமாய் அந்த பெண்கள் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தான். இரண்டே நிமிடத்தில் அந்த தளம் முழுவதும் காலியாகி இருந்தது.
இந்திரஜித் நேராக தன் கேபினுக்குள் நுழைய, சுற்றுலா வந்திருப்பது போல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர் ஐவரும். இந்திரஜித்தோ இன்று தன் கம்பனியில் நிலவும் அசாதரண நிகழ்வுகளை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்.
தன் தம்பிகளும் தங்கையும் எதையோ தன்னிடம் மறைப்பதை உணர்ந்தான் இந்திரஜித்து. ஆனாலும் பொறுமை காத்தான். இறுதியில் அவர்கள் என்னதான் செய்யப் போகிறார்கள் என்பதை காண ஆவலாக இருந்தான் இந்திரஜித். தன் மேஜையில் மலைபோல் குவிந்து கிடந்த ஆவணங்களை ஒவ்வொன்றாக எடுத்து சரிபார்க்க துவங்கினான். வேலைகளில் தன்னை புகுத்திக் கொண்டவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. சரியாக மணி 11 ஆகியிருந்தது. சரியாக அந்நேரம் இந்திரஜித்தின் அறைக் கதவைத் திறந்துகொண்டு திடுதிப்பென ஓடிவந்தான் சேண்டி.
"அண்ணா, அந்த ஃபைல எல்லாம் அப்படியே போட்டுட்டு என்னோடு வாங்க." என்று இந்திரஜித்தின் கையைப் பற்றி வாசல் பக்கமாய் அவனை இழுத்துக் கொண்டு சென்றான் சேண்டி.
"சேண்டி நீ என்னை எங்கே அழைச்சிட்டு போற?" என்று இந்திரஜித் கேட்டதை எல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை.
"அண்ணா நம்ம இப்போ பார்ட்டி ஹாலுக்கு போறோம். அங்க ஒரு மீட்டிங் அரேஜ் பண்ணியிருக்கோம். உங்களோட எம்ப்ளாயீஸ் எல்லாரும் தங்களோட ஃபேமிலி மெம்பர்ஸோட வந்திருக்காங்க. சோ நீங்க அந்த மீட்டிங்ல பேசனும்." என்று சொல்ல வேண்டியதையெல்லாம் சுருக்கமாக சொல்லி இந்திரஜித்தை அழைத்து சென்றான். இந்திரஜித்தோ நடக்கிறது என்பது புரியாமல் சேண்டி இழுப்பிற்க்கு சென்றான்.
அங்கே 50000 பேர் அமர வேண்டிய பார்ட்டி ஹால் மொத்தமும் நிறைந்திருந்தது. அந்த ஹாலின் அலங்காரமும் ஆங்காங்கே ஓடி திரிந்த குழந்தைகளின் சேட்டையும் அந்த ஹாலின் அழகை கூட்டியிருந்தது.
இந்திரஜித் உள்ளே நுழையவும் அவனது கம்பனி வேலைக்காரர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். கம்பனியின் போர்ட் மெம்பர்ஸ் அனைவரும் ஏற்கனவே வந்திருந்தனர். மீட்டிங் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்கில் வேலையாட்களுக்கு நன்மை தரும் திட்டங்களை வெளியிட்டது இந்திரன் க்ரூப்ஸ் ஆஃப் கம்பனிஸ். வேலையாட்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். பலத்த கரகோஷங்களை கொடுத்து இந்திரஜித்தின் திட்டங்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். அவர்களது முகத்தில் இருந்த சந்தோஷத்தை கண்ட இந்திரஜித்துக்கு மனம் நிறைந்தது போல் இருந்தது. உண்மையில் இந்தத் திட்டங்கள் எதுவும் இந்த இந்திரஜித்திற்கு சொந்தமானது அல்ல. பல நாட்கள் கலந்தாலோசித்து, சில நாட்கள் உறங்காமல் இருந்து இத்தகைய திட்டங்களை உருவாக்கியது சேண்டியும் சாயாவும் தான்.
மீட்டிங் முடிந்ததும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அனைவரும் சந்தோஷமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்க இந்திரஜித்தும் அவர்களுக்கு சரிசமமாய் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தங்களது முதலாளி தங்களுடன் அமர்ந்து சாப்பிடுவதையே பெரிய விஷயமாய் கருதிய கம்பெனி வேலையாட்களின் மனதில் இந்திரஜித்தின் மீதான மரியாதை அதிகமாகியது. இத்தனை நாளும் தங்களது முதலாளி ஒரு உணர்ச்சியற்ற, அன்பற்ற, இரக்கமற்ற நபர் என்று தங்கள் மனதில் வரைந்து வைத்திருந்த இந்திரஜித்தின் ஓவியங்களை எல்லாம் அழித்துவிட்டு இந்திரஜித்தின் இந்த இனிமையான பக்கத்தை ஓவியமாய் வரைந்து வைத்துக் கொண்டனர் அனைவரும்.
"சேண்டி இவங்கள் சந்தோஷமா இருக்கிறத பார்க்கும்போது, எனக்கும் சந்தோஷம் வருவதுடா ஏன் என்று தெரியல." என்று கூறியவாறே நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் இந்திரஜித். அவனுக்கு ஒரு வாய் சோறு கூட தொண்டைக்குள் இறங்கவில்லை. மனதை நிரப்பியிருந்த மகிழ்ச்சி பசியை கூட மறக்க செய்திருந்தது.
"ஆமா அண்ணா எல்லாம் உங்களால தான். கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன். உங்க கம்பெனியால் தான் இத்தனை குடும்பங்கள் சந்தோஷமா இருக்காங்க. ஒருவகையில் பார்த்தால் இத்தனை குடும்பங்களை நீங்க வாழ வச்சுட்டு இருக்கீங்க அண்ணா. மற்ற கம்பெனிகள் போல வேலையாட்கள் சுரண்டாமல், நியாயமான உழைப்புக்கு நியாயமான சம்பளமும் கொடுக்குறீங்க. அவங்களோட பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கறீங்க. அவங்க சந்தோஷமா வாழ இதுவே போதும் அண்ணா." என்று சேண்டி கூற மீண்டுமாய் மக்கள் கூட்டத்தை நோக்கி தன் பார்வையை திருப்பினான் இந்திரஜித். தன் வாழ்க்கைக்கான அர்த்தம் தன் கண் முன்பே இருப்பது போல் தோன்றியது அவனுக்கு. எல்லாரையும் வேடிக்கை பார்த்தவாறே அவன் கண்கள் சுழன்று கொண்டிருக்க, ஹாலின் ஒரு மூலையில் அவன் கண்ட காட்சியில் அப்படியே மெய் மறந்து நின்றான் இந்திரஜித்.
அங்கு frozen elsa dress அணிந்த பெண் குழந்தை ஒன்று தன் கையில் இருந்த ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. உதட்டோரம் கொஞ்சமாய் ஐஸ்க்ரீம் ஒட்டிக் கொண்டிருக்க அந்த ஐஸ்கிரீமை நாவால் எடுத்து சாப்பிடும் அழகை கண்டு மெய்மறந்து நின்றான். முதல் முதலாய் இந்த உலகில் ஒரு பெண் உயிரினத்தை ரசிக்கிறான் இந்த இயந்திர மனிதன். ஏனோ தெரியவில்லை அந்த குழந்தையை தன் கைகளில் தூக்கி போட்டு விளையாட்டு காண்பிக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஐஸ்கிரீம் சாப்பிடும் போது தன் நெற்றியில் விழும் முடிகளை பின்னால் கோதிக்கொண்டே ஐஸ்கிரீமை சாப்பிட்டாள் அந்த சின்னஞ்சிறு குழந்தை. அவளை சுற்றி யாருமே இல்லை. தனி ஒருத்தியாய் அமர்ந்து தனது ஐஸ்கிரீமுடன் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் அந்த குட்டி தேவதை. சாப்பிட்டுக்கொண்டிருந்த இந்திரஜித் தனது ஃபோர்க்கை வைத்து விட்டு அந்த குழந்தையை நோக்கி நடந்தான். தங்கள் முதலாளி வருவதை கண்டு அனைவரும் வழிவிட்டு நிற்க அவனோ எவரையும் கண்டு கொள்ளாமல் அந்த குழந்தையின் அருகே சென்றான். குழந்தையின் அருகே சென்றவன் அந்த குழந்தையின் முன் மண்டியிட்டு அமர, காண்போருக்கெல்லாம் அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது. எப்போதும் தன் கடுமையான பக்கத்தை மட்டுமே பிறருக்கு காண்பிக்கும் தங்கள் முதலாளிக்கு இப்படி ஒரு பக்கமும் உண்டா என்று அனைவரும் வியந்து போய் பார்த்தனர்.
இந்திரஜித்தோ அந்த குட்டி தேவதையை மட்டுமே பார்த்திருந்தான். தன் முன்னால் இருக்கும் முகம் தெரியாத நபர் தன்னையே பார்ப்பதை உணர்ந்த குழந்தை இந்திரஜித்தை திருட்டுப் பார்வை பார்த்தது.
என்ன நினைத்தாளோ தெரியவில்லை. சட்டென தன் கையில் இருந்த ஐஸ்க்ரீமை தன் முகுதுக்கு பின்னால் மறைத்து கொண்டாள் அவள்.
"என் ஐஸ்க்ரீம் இது. நான் யாருக்கும் தரமாட்டேன்." என்றவள் இந்திரஜித்தை திருடன் போல் பார்த்து வைத்தாள். அவள் தன்னை ஐஸ்க்ரீம் திருடன் என நினைப்பதைக் கண்ட இந்திரஜித்துக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது.
"சோ ஸ்வீட்" என்று அக்குழந்தையின் கன்னம் கிள்ளி கொஞ்ச வேண்டும் போலிருந்தது அந்த அவனுக்கு.
"ஹேய் ஸ்வீட்டி. உன்னோட நேம் என்ன?" என்று இந்திரஜித் கேட்க, அவனைப் பார்த்து தன் விழிகளை உருட்டினாள் அந்த குட்டி பெண்.
"தெரியாத அங்கிள் கிட்ட நேம் சொல்ல கூடாதுன்னு மம்மி சொல்லிருக்காங்க." என்று தலையை ஆட்டி ஆட்டி, விழிகளை உருட்டி கூறினாள் அந்த சுட்டி குழந்தை. அவளது ஒவ்வொரு வார்த்தையும் மந்திர வார்த்தையாய் இந்திரஜித்தை ஜாலம் செய்தது.
"ஐயோ ஸ்வீட்டி, நான் யாரோ இல்ல. உன்னோட பேரண்ட்ஸோட பாஸ். சோ நான் உனக்கு தெரியாத அங்கிள் இல்ல." என்று அந்த குழந்தையை தாஜா செய்ய முற்பட்டான் இந்திரஜித்.
"ம்ஹூம். மம்மி சொன்னா தான் கேட்பேன். தெரியா அங்கிள் சொன்னா கேட்க மாட்டேன்." என்று மறுப்பாக தலையை அசைத்தவள் தன் முகத்தை திருப்பிக் கொள்ள இந்திரஜித்துக்கு தான் கவலையாய் போனது.
எத்தனையோ வியாபாரத் திட்டங்களை அசால்டாக கையிலெடுப்பவன். பல கோடிகளை சில மணி நேரத்தில்சம்பாதித்து விடும் திறன் பெற்றவன் இவன். ஆனால் ஒரு குழந்தையின் நம்பிக்கையை பெற முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான் இந்திரஜித். தற்போது அவனுக்கு தன் திறன் மீதே சந்தேகம் வரத் துவங்கியது. ஆனாலும் அவன் விடாக்கண்டன் ஆயிற்றே. அவனால் முடியாதது என எதுவும் இந்த உலகில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தாலும் அதை அழித்துவிடும் பராக்கிரமம் பெற்றவன் இவன். ஆனால் முதல்முறையாக ஒரு குட்டி குழந்தையிடம் கெஞ்சி கொண்டிருக்கிறான்.
இந்திரஜித் சோகமாய் அந்த குழந்தையின் முகம் பார்த்திருக்க அவன் பின்னால் சற்று பதட்டமாக கேட்டது ஒரு குரல்.
"அம்மு, நீ இங்க பண்ணுற? எப்போதும் நீ குட் கேர்ளா மம்மி கூட தான இருக்கனும்." என்று அழைத்தவாறே வந்தாள் ஒரு பெண். அந்த குரலை கேட்டதுமே சட்டென எழுந்து நின்றான் இந்திரஜித்.
இந்திரஜித்தை கண்ட அந்த பெண் திடுக்கிட்டவளாய்,
"ஐயோ சாரி சார். அவ என்னோட குழந்தை தான். அவ உங்களுக்கு ஏதும் தொந்தரவு கொடுத்திருந்தா அவளை மன்னிச்சிடுங்க." என்று கொண்ட கலவரமான முகத்துடன் பேசினாள் அந்த பெண். இந்திரஜித் முகத்தில் எந்த உணர்வையும் காண்பிக்கவில்லை.
"நீ தான் இந்த குழந்தையோட அம்மாவா?" என்று ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டான்.
"ஆ......ஆமா சார். அவ என்னோட பொண்ணு ரியா." என்று கூறிய பெண்ணவளின் விழிகள் தன் குரும்புகார மகளை தொட்டு மீண்டது.
அந்த குரும்புகார தேவதையோ தன் குண்டு விழிகளை உருட்டிக் கொண்டு, தன் கையில் இருந்த ஐஸ்க்ரீமை முதுகுக்கு பின் மறைத்தவளாய் திருட்டு முழியோடு நின்றிருந்தாள்.
"உன்னோட கனவர் இங்க வேலை செய்யுறாரா?" என்று காரியமே கண்ணாய் கேட்டான் இந்திரஜித்.
"இல்ல சார். நான் தான் இங்க வேலை செய்யுறேன். நானோ டெக்னிக்கல் டிப்பார்மெண்ட்ல டிசைனரா இருக்கேன்." என்று பதில் கூறி விட்டு தன் மகளை பாவமாகப் பார்த்தாள் அவள்.
"சரி. நான் உன்னோட பொண்ணு கூட ஃப்ரண்டா இருக்க ஆசைப் படுறேன். உன்னோட பொண்ணுக்கு என்னை அறிமுகப்படுத்து." என்று கட்டளையாய் கூறிய இந்திரஜித் ரியாவை பார்த்து அழகாய் புன்னகைத்தான். ரியாவோ தன் அம்மாவை பார்த்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.
"ரியா பேபி இது தான் அம்மாவோட பாஸ். அங்கிள்க்கு ஹாய் சொல்லு." என்று தன் தாய் சொன்னதற்கு அப்படியே கீழ்படிந்தாள் ரியா.
"ஹலோ அங்கிள்." என்று கூறி அழகாய் சிரிக்க முயன்றாள் ரியா. ஆனால் தான் திருட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டதை தன் தாய் கண்டுபிடித்து விடுவாளோ என்ற பதட்டம் அவள் முகத்தை நிறைத்திருந்தது. இந்திரஜித்தும் குட்டி ரியாவின் சேட்டைகளை முன்னமே கணித்து விட்டான்.
"ஹலோ ரியா பேபி." என்று ரியாவை அணைத்த இந்திரஜித், அவள் கையிலிருந்த ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டான். இப்போது தான் ரியாவின் முகம் தெளிவடைந்தது. தனக்கு உதவி செய்த பாஸ் அங்கிளை மிகவும் பிடித்து போனது ரியாவுக்கு.
இருவரும் திருட்டு ஐஸ்க்ரீம் மூலமாய் ஒருவருக்கொருவர் நட்பாகிக் கொண்டனர். தன் தாய் அழைக்க இந்திரஜித்துக்கு பாய் சொல்லிவிட்டு நகர்ந்தாள் ரியா. போகும் போது இந்திரஜித்தையே பார்த்துக் கொண்டு ரியா செல்ல, அவன் மனமோ அந்த குட்டி தேவதையின் பிரிவால் வாட துவங்கியது.
"ஐ மிஸ் யூ ஸ்வீட்டி." என்று தன் மனதிற்குள் கூறிக் கொண்டவன், ரியாவின் எண்ணங்களை தன் மனதில் நிறைத்துக் கொண்டவனாய் தன் கேபினுக்குள் நுழைந்தான்.
அவனுக்கே தெரியவில்லை. இந்த ரியா தான் தன்னை மீட்கப்போகும் தேவதை என.
மரணம் வரும்.
அன்புடன்.
எபின் ரைடர்.
YOU ARE READING
மரணம் வரும் நேரம் எது?
Actionமரணத்தோடு போராடி வென்ற மனிதனின் கதை இது. தன்னை ஆளும் மரணத்தை வென்று, அந்த மரணத்திற்கே ஒரு மரணத்தை கொடுத்து, தன் வாழ்க்கையை வாழத் துவங்குகிறான் நாயகன். மரணத்தை எதிர்த்து வென்ற இந்திரஜித்தின் ...