சாலையில் சீராக பயணித்துக் கொண்டிருந்த காரில் ஒரு கனரக வாகனம் மோத..... பல முறை உருண்டு கார் நொறுங்க.... அதில் பயணித்த சாயாவும் உள்ளேயே நசுங்கி இரத்த வெள்ளத்தில்.... உயிருக்கு போராடுவது போல் அவள் கண்ட காட்சியில்.....
நோ.... நோ..... என்று கத்தியவாறே அவள் கண்களை திறக்க..... கற்பனையில் தன்னை இரத்த வெள்ளத்தில் கண்டவளோ.... நிஜத்தில் வியர்வை வெள்ளத்தில் இருந்தாள்...... வேகப் பெருமூச்சுக்களை எடுத்து தன்னை சமன்செய்தவள் முன்னே ட்ரைவரைப் பார்க்க... அவனும் மிரர் வழியாக இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்...
மேம்.... ஆர் யூ ஒகே..... என்று அவன் அவளது நலனை உறுதிபடுத்திக் கொள்ளும் எண்ணத்தில் கேட்டார் அந்த ட்ரைவர்.....
எ...... எஸ்... ஐ அம் ஃபைன்.... என்றவாறே தன் கைகுட்டையால் தன் நெற்றி வியர்வையை துடைத்தாள் சாயா......
ஆமா..... போய் சேர சார் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..... என்று சாயா கேட்க....
ஒரு ஃபைவ் மினிட்ஸ் மேம்..... என்று ட்ரைவர் சொன்னது மட்டுமல்லாமல்.... ஐந்து நிமிடத்தில் அவளை வீடு கொண்டு போய் சேர்த்தும் விட்டார்...
டாக்ஸிக்கு பணம் கொடுத்து அனுப்பியவள்.... நேராக வீட்டுக்குள் நுழைந்தாள்...... வழக்கம் போல் யாரும் இல்லாத வீடு மங்கிய வெளிச்சத்தில் மூழ்கியிருந்த அங்கு அவளை வரவேற்க யாரும் இல்லை தந்தை தாய் தங்களது அறைக்குள் முடங்கிக் கொள்ள உடன்பிறப்புகள் இல்லாத சாயா பக்க மீண்டும் தனிமை...... பணத்தின் பின்னால் அலையும் பெற்றோரின் பாசம் பாசம் நேசம் அறியாத சாயாவுக்கு.... தனிமையின் பாசமும்.... ரோகித்தின் நேசமும்.... நட்புகளின் பாசமும் மட்டுமே ஆறுதல்....
வீடே இருளில் மூழ்கியிருக்க.... ஹாலின் லைட் ஸ்விட்சை ஆன் செய்து விட்டு சோபாவில் தொப்பென விழுந்தவளின் கண்கள் தானாக கடிகாரத்தைப் பார்த்தது..... இன்னும் ஒன்றரை மணி நேரம் தான் மீதம் இருந்தது...
ஷிட்..... எனக்கு என்ன ஆச்சு.... தேவையில்லாத பயம் இது.... முதல்ல இத மறக்கனும்..... என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் தனது ஃபோனை கையில் எடுத்து... முதல் வேலையாக ரோகித்துக்கு தகவல் அனுப்பினாள்....
சாயா : பேப்.... வீட்டுக்கு வந்துட்டேன்... வாட் அபௌட் யூ.....
குஞ்செய்தி அனுப்பியவள்... ஃபோனை கீழே வைக்காமல்... தன் ஃபோனால் தன் நெற்றியை தட்டிக் கொண்டே இருந்தாள்.... இரண்டு நிமிடம் கழித்து.... ரோகித்திடமிருந்து பதில் வந்தது...
ரோகித்: ஒகே பேப்.... குட் நைட்.. டுமாரோ காலேஜ்ல பார்க்கலாம்.... லவ் யூ
என்று சில சிரிக்கும் எமோஜியையும் அனுப்பி விட.... சாயாவின் முகத்திலும் புன்னகை படர்ந்தது..... சிவந்த முகத்துடனேயே.. அவனுக்கு பதில் மெசேஜை டைப் செய்ய துவங்கினாள்...
சாயா: லவ் யூ டூ ரோகித்.. குட் நைட்...
ரோகித்துக்கு பதில் அனுப்பிய பின் வழக்கம் போல்.. அவன் ஆஃப் லைன் செல்லும் வரை காத்திருந்தாள்.... அவளது இந்த காத்திருப்பை அறிந்தவனாய்.... அவளை காக்க வைக்க மனம் இல்லாமல்......
சில்லி கேர்ல்.... என்று கூறி சிறித்தவாறே ஆஃப் லைன் சென்று விட்டான் ரோகித்.........
அவன் ஆஃப் லைன் சென்றதும்.... லேசாக புன்னகைத்த சாயா.... அவனது ப்ரொஃபைலை பெரிது படுத்தி.... அதில் புன்னகைத்துக் கொண்டிருந்த தன் காதலன் ரோகித்துக்கு.... தன் உதடுகளை குமித்து ஒரு முத்தத்தை பறக்கவிட்டாள்..,....
உடல் சோர்வும் குடித்ததால் ஏற்பட்ட லேசான கிறக்கமும் அவளது உடலை சற்று அதிகமாக சோதித்துக் கொண்டிருந்தது..... சுடு நீரில் குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே..... தன் ஃபோனை சோபாவில் வீசி விட்டு தனது அறையை நோக்கி நடந்தாள் சாயா..... அன்ன நடையிட்டு நடந்தவாறே தன் சிகையை கலைக்க..... கருநாகமாய் அவளது தோளிலிம் முதுகிலும் படர்ந்தது அவளது கருங்கூந்தல்.... மெதுவாக தன் ஜாக்கெட்டை கழற்றியவள்... அதை சோபாவில் வீசி விட்டு... குளியல் துண்டையும் ஒரு பைஜாமாவையும் எடுத்துக் கொண்டு.... நேராக குளியலறைக்குள் புகுந்தாள்.... அவளின் பயம் ஓரளவுக்கு அடிமனதில் புதைந்திருக்க.... பாத் டப்பில் வெது வெதுப்பான சுடுநீரை நிரப்பி அதனுள் அமிழ்ந்தாள் சாயா.... நீரின் கதகதப்போடு சேர்ந்து கொண்ட அவளின் உடலின் கதகதப்பும்... அவளது மனதை ஆசுவாசப்படுத்தவில்லை...... இன்னும் ஏதோ ஒரு பதட்டம்... இன்னும் சிறிது நேரத்தில் உலகை விட்டு விட்டு சென்று விடுவோமோ என்ற தவிப்பு....
குளிக்கும் நேரம் நீருக்குள் வழக்கமாய் விளையாடும் அவளது கைகள் அமைதியாக இருந்தன.... அவளது இதயம் துடிக்கும் சத்தம் அவளது காதுக்கே கேட்டது.... அசுர வேகத்தில் துடித்துக் கொண்டிருந்த இதய துடிப்புகளை கட்டுப்படுத்தும் வழி அறியாமல்... மெதுவாக தன் கைகளை நகர்த்தி.... தன் இதயத்தின் மேல் வைத்து அழுத்திக் கொண்டு.... ஆழமாக மூச்செடுத்தாள்.....
சாயா.... இது ஒரு கேம்... அவ்ளோ தான்.... ஜெஸ்ட் ரிலாக்ஸ்..... அவ்ளோ தான்..... என்று தனக்கு தானே கூறிக் கொண்டவள்.... ஆழமான மூச்சை விடுவித்தாள்...... சில நொடிகளில் ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்.... வேக வேகமாக குளித்து விட்டு.... பஜாமாவை அணிந்து கொண்டு தலையை துவட்டியவாறே குளியலறையை விட்டு வெளியே வந்தாள்.....
எத்தனை தான் அவளுக்கு அவளே ஆயிரம் சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும்... தன்னிச்சையாக அவளது கண்கள் கடிகாரத்தை நோக்கியது....
இன்னும் ஒரு மணி நேரம் தான் இருந்தது.....
உஃப்.... வாட் த ஹெல்..... என்று தலையை பிடித்தவாறே அமர்ந்த சாயா.. அப்போது தான் தன் முடி இன்னும் ஈரமாக இருப்பதை உணர்ந்தாள்....
ஒ.... ஷிட்.... என்று எரிச்சலுனேயே.... ட்ராயரை திறந்து..... தலையை காய வைக்க ட்ரையரை கையில் எடுத்தாள் .... அதை ப்ளக்கில் சொருகப் போகும் நேரம்.... என்ன தோன்றியதோ தெரியவில்லை....
வேணாம்..... என்று சோம்பலாக அதை போட்டு விட்டு.... டவலை வைத்தே தலையை துவட்டினாள்..... அவ்வப்போது அவள் கண்கள் கடிகாரத்தைப் பார்க்கவும் தவறவில்லை.....
சரியாக அரை மணி நேரம் கடந்தது.....
திடிரென ஒரு விநோதமான சத்தம்...... அந்த அறையை நிரப்ப.... திடுக்கிட்டுப் போய் கட்டிலிலிருந்து குதித்தாள் சாயா...... அவள் விழிகள் வெளியே வந்து விழுந்து விடும் அளவுக்கு பெரியதாக விரிய...... கத்தி விடாமல் இருக்க... முன்னெச்சரிக்கையாக தன் வாயை இறுக்கமாக பொத்திக் கொண்டாள்..... இதய துடிப்புகள் எல்லாம் அசுர வேகமெடுக்க..... ஒரு கையால் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டாள்...... நெற்றியிலிருந்து வியர்வை துளித் துளியாக வடிய.... ஏனோ அவளுக்கு தன் நெற்றியிலிருந்து இரத்தம் வருவது போல் தோன்றியது..... வாயிலிருந்த கையை எடுத்து.... நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தவளுக்கு.... அது இரத்தமா இல்லை வியர்வையா என்று உறுதிபடுத்தும் எண்ணம் மேலோங்கவே..... நெற்றியில் இருந்த கையை இறக்கி மெதுவாக அதில் தன் பார்வையை அதற்கு முன்னமே......
ஒரு லேசான சத்தத்துடன் சீலிங் ஃபேன் தனது செயல்பாட்டை நிறுத்தியது..... தொடர்ந்து அறையின் அத்தனை விளக்குகளும் நொடியில் அணைந்து போக..... கும்மிருட்டில் கத்திய சாயா......
ஆ...ஆ.....ஆ... என்று அலறியவாறே..... ஹாலில் கிடந்த ஃபோனை எடுக்க ஓடினாள்..... அது இன்னும் மின்னிக் கொண்டிருந்தது.... அதின் திரையில்....
30 Minutes more.... ஒரு விநோதமான ஒலியுடன் என்ற வாக்கியம் ஒளிர்ந்து கொண்டிருக்க... அதைப் பார்த்த சாயாவின் முகம் பயத்தில் வெளிறிப் போனது......
நோ... நோ.... இதெல்லாம் வெறும் கனவு தான்.... என்று பைத்தியம் போல் கத்தியவள்.... ஃபோனை ஏதேதோ செய்ய முயற்சித்தாள்.... ஆனால் முடியவில்லை.... யாரோ அவளது ஃபோனை ஹேக் செய்து விட்டதை உணர்ந்தாள் சாயா....
ஷிட்.... டேம் இட்.... என்று ஆவேசமாக ஃபோனை தூக்கி சுவரில் வீசி அடிக்க.... சுவரில் மோதி ஒரு ஓரத்தில் போய் விழுந்தது அவளது ஐஃபோன்.... இன்னும் அதிலிருந்து வந்த அபாய ஒலி அடங்கவில்லை.....
இருளில் தட்டு தடுமாறியவாறே லேண்ட் லைன் ஃபோன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினாள் சாயா.... மாடியிலிருந்து கீழே இறங்கியவள் படிகளில் தாறுமாறாக இறங்க..... பாதி படியை கடக்கும் முன்னமே கால் இடறி ......
ஆ.....ஆ.. அம்மா....... என்று அலறியவாறே... படியில் உருண்டாள் சாயா.... முட்டியிலும் நெற்றியிலும் அடிபட்டு தரை எங்கும் இரத்த துளிகள் தெறிக்க....
ஆ,...ஆ,.. என்று நெற்றியை பிடித்தவாறே..... வலியில் சுருண்டு தரையில் கிடந்து அழுதாள் சாயா....
அந்நேரம்..... மாடியில் ஏதோ ஒரு சத்தம்....
சலீரென்று கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்க..... சட்டென தன் கையால் வாயைப் பொத்திக் கொண்டாள் சாயா... அவள் விழிகளில் ஒரு பயம்.... சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் அது ஒரு மரண பயம் தான்.... அவள் இதயம் வெடித்து விடும் போல் வேகமாக துடிக்க.... உடலெங்கும் ஜன்னி வந்தது போல் நடுங்கியது.....
நோ... நோ.... நான் சாகக் கூடாது.... எப்படியாவது இங்கிருந்து நான் தப்பிக்கனும்.... என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவளாக.... வாசல் பக்கம் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்றவள் கதவில் கை வைக்கப் போகும் நேரம்.... மாடியிலிருந்து சட்டென தரை தளத்திற்கு குதித்தது ஒரு உருவம்.....
அவ்வளவு தான்... சாயாவின் ஒட்டு மொத்த தைரியமும் ஆட்டம் கண்டது....
ஆ.... ஆ.... ஹெல்ப்.. ஹெல்ப்...என்று தொண்டை கிழியும் அளவுக்கு கத்தியவள்.. கதவை திறக்க முயல... கதவோ வெளிப் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.....
ஐயோ....யாராவது வாங்க ப்ளீஸ்... ஹெல்ப் மீ.... என்று உச்ச கட்ட பயத்தில் கத்தியவளுக்கு நினைவில் இல்லை போலும்.. அவளது வீடு முழுவதும் சவுண்ட் ப்ரூஃப் என்று....
அசையாமல் நின்ற உருவத்தை விட்டு விழிகளை விலக்காமலேயே நின்றவளின் கண்களில்.... சாவை எதிர்நோக்கிய பயம் மட்டுமே தெரிந்தது..... மனதிலிருந்து பிறந்த வார்த்தைகள் எல்லாம் அவள் வாயிலிருந்து திக்கித் திணறி வெளிவந்தன.....
யா... யார்... நீ... உனக்கு என்ன வேணும்.... என்று கேட்டவாறே... லேண்ட் லைன் ஃபோன் இருக்கும் நகர்ந்தாள் சாயா..... தற்போது அவளது ஒரே நம்பிக்கை அது தான்... ஆனால் அது எத்தனை சதவீதம் சாத்தியமானது என்றால்... அது அவளுக்கே தெரியவில்லை....
யார்... நீ... உனக்கு என்ன வேணும்... பணமா.... நகையா... எதுவானாலும் நான் தரேன்... என்ன உயிரோட விட்டுடு ...... என்று கூறிய சாயாவின் குரலில் நடுக்கம் அப்பட்டமாக தெரிந்தது.....
இன்னும் அவளது ஃபோன் அபாய ஒலியை நிறுத்தவில்லை.... மெதுவாக லேண்ட் லைன் ஃபோன் இருக்கும் பக்கமாக நகர.... அவள் செய்ய போவதை அறிந்த அந்த மனிதன் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து அவளை அலட்சியமாகப் பார்த்தான்... அடுத்த நொடி... அவளை நோக்கி பாய்ந்தவன்.... அவளை தூக்கி அறையின் மறுபக்கமாக வீசியிருந்தான்..... சாயாவின் அதிஷ்ட்டம்.... தரையில் விழாமல் சோபாவில் விழுந்து தரையில் புரண்டு விழுந்தாள் சாயா.....
ஆ.... ஆ.... அம்மா.... என்று அலறியவாறே விழுந்த சாயா..... நிமிர்ந்து பார்க்க... அந்த மர்ம மனிதன் அவளையே வெறித்தவாறு நின்றிருந்தான்...அவனது முகமூடி அணிந்த முகத்தில் எதுவும் தெரியவில்லை எனினும்... அவனது தோற்றமும்... அவனது ஆக்ரோஷமான நடவடிக்கைகளும்... அவளது முதுகு தண்டை சில்லிட செய்தது.... நெற்றி காயம் ஏற்படுத்திய வலி உயிரின் அடி ஆழம் வரை சென்று வேதனையை கொடுக்க.... தேம்பி தேம்பி அழுதவாறே.... தரையிலிருந்து எழுந்து அமர முயற்சி செய்தாள் சாயா....
யார்.... நீ... எதுக்காக என்ன இப்படி வதைக்குற..... யார் நீ... சொல்லுடா... யார் நீ.... என்று கேட்டவாறே குலுங்கி குலுங்கி அழுதாள் சாயா.....
அவளது கண்ணீரைக் கண்டு பரிதாபம் கொள்ள வேண்டியவனோ.... அவள் கண்ணீரில் மேலும் மேலும் ஆக்ரோஷமானான்....
ஏய்..... என்று ஆவேசமாக கத்தியவன்... அவளது முடியை கொத்தாக பற்றி அவளை தன் உயரத்துக்கு தூக்கினான்..... அவன் அணிந்திருந்த முகமூடியையும் தாண்டி அவனது கோபமான பெரு மூச்சுகள் அவளது முகத்தில் மோதி அவளை மிகுந்த பீதிக்குள்ளாக்கியது...
என்ன கேட்ட..... நான் யாருன்னு கேட்டல்ல... சொல்லுறேன்.... நல்லா கேட்டுக்கோ.... ஹான்... நல்ல கேட்டுக்கோ... நான் மரணம்.... உன்னை தேடி வந்த மரணம்.... ஆமா... உனக்கு இன்னைக்கு மரணம்..... என்று வெறி பிடித்தவன் போல் கத்தியவன்... அவளது முடியை இன்னும் இறுக்க.....
ஆ.....ஆ..... என்று மயிர் கால்கள் ஏற்படுத்திய வலியில் கத்தினாள் சாயா... அவளது கதறல்களை எல்லாம்.... சங்கீதம் போல் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தான் அந்த மர்ம மனிதன்....
தயாரா இரு... மரணத்தை சந்திக்க... என்று குரூரமாக கூறியவன்.... அவளது தலையை சுவரோடு அடிக்க.... சாயாவின் தலைக்குள் இடி விழுந்தது போல் ஒரு வலி...
அப்படியே கண்கள் இருட்ட..... தலையை பிடித்துக் கொண்டு அவன் முன்னால் விழுந்து கிடந்தாள் சாயா..... தன் முன் கிடந்தவளை.... தன் தலையை அப்படியும் இப்படியுமாக சாய்த்துப் பார்த்தவன்... தனது ஷூ அணிந்த காலால்... அவளது முகத்தை தட்டிப் பார்த்தான்....
ம்ஹூம்.... எந்த அசைவும் இல்லை... இரத்த வெள்ளத்தில் சவம் போல் கிடந்தவளை தூக்கி தன் தோள் மேல் போட்டவன்.... வீட்டின் பின் பக்கம் வழியாக அவளை கடத்திச் சென்றான்...
மரணத்தின் அடுத்த இலக்காக இருக்கும் சாண்டியோ.... பிராந்தி தந்த போதையில் மட்டையாகி இருந்தான்...
மரணம் வரும்...
அன்புடன்...
எபின் ரைடர்...
ESTÁS LEYENDO
மரணம் வரும் நேரம் எது?
Acciónமரணத்தோடு போராடி வென்ற மனிதனின் கதை இது. தன்னை ஆளும் மரணத்தை வென்று, அந்த மரணத்திற்கே ஒரு மரணத்தை கொடுத்து, தன் வாழ்க்கையை வாழத் துவங்குகிறான் நாயகன். மரணத்தை எதிர்த்து வென்ற இந்திரஜித்தின் ...