அத்தியாயம் 4 (லீவ் திஸ் ரூம் ஜித்து)

33 1 0
                                    

காலை நேரம்.... கட்டிலிலிருந்து உருண்டு கார்ப்பெட்டில் பொத்தென்று விழுந்து.... கார்பெட் மீதே தன் முகத்தைப் புதைத்து..... குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் சேண்டி....
நேற்று  அடித்த சரக்கு அவ்வளவு ஸ்ட்ராங் போல.... முகமெல்லாம் வீங்கி.... ஹேங்க் ஓவராகி இருந்தது சேண்டிக்கு.... கார்பெட்டில் தன் கன்னத்தை உரசியவாறே.....
ம்.... ம்.... ம்மா... காபி... காபி.... என்று ஏதோ சொல்லியவன்... மீண்டும் உறங்க தொடங்கி விட்டான்....
அவன் தலை மாட்டில் வந்து நின்ற இந்தரஜித்தை கூட கண்டு கொள்ளவில்லை அவன்.... அவன் தலைமாட்டில் குத்துக் காலிட்டு அமர்ந்த இந்தரஜித்... அவனை ஆழமாகப் பார்த்தான்.... 
கவலை இல்லாத முகம்... குழந்தை போல் ஒரு கன்னத்தை கார்பெட்டில் அழுத்தியவாறும்...  மறு கன்னத்தை கையால் மூடியவாறும் உறங்கிக் கொண்டிருந்தான் சேண்டி....
ஹேய்..... பாய்.... வேக் அப்.... என்று அவனை தோள் தொட்டு உலுப்பினான் இந்தரஜித்....
ஷ்ஷு.... ஷ்ஷு.... நான் தூங்குறேன்.... டோண்ட் டிஸ்ட்ரப் மீ.... என்று கொசு விரட்டுவது போல் கையை அசைத்தவன்.... மீண்டும் உறங்க..... இந்தரஜித்தின் விழிகளில் ஒரு சீற்றம் உருவாகியது....  அவன் விழிகள் சிவக்க.... கை நரம்புகள் எல்லாம் ஆத்திரத்தில் புடைக்க துவங்கியது.... அவனது பார்வை.... அங்கு வைக்கப்பட்டிருந்த பழக் கூடையையும்.. அதினுள்ளிருந்த கத்தியையும் குரூரமாய் பார்க்க..... திடிரென அவனுக்குள் ஒரு தடுமாற்றம்.....
நோ.... நோ..... லீவ் திஸ் ரூம் ஜித்து.... என்று அவனது ஆழ்மனதில் யாரோ ஒருவர் கத்தும் சத்தம் அவனது காதுகளை அடைய.... வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தான் இந்தரஜித்..... அடுத்த நொடி அந்த கதவிலிருந்த ஒரு சிகப்பு பொத்தானை அழுத்த அந்த கதவு பூட்டிக் கொண்டது....
சில நொடிகளுக்குள் அந்த அறையே அதிரும் வண்ணமாக ஆக்ரோஷமாக கத்த தொடங்கினான் இந்திரஜித்.,.
ஆ..... ஆ..... ஆ..... எல்லாரும் சாகனும்..... என்னோட சேர்ந்து எல்லாரும் சாகனும்.... என்று அரக்கன் போல் கர்ஜிதவன்.... சேண்டி இருந்த அறையின் கதவை ஆக்ரோஷமாக உதைக்க தொடங்கினான்..... அவனது ஆக்ரோஷத்தை எல்லாம் தவிடு பொடியாக்கவே..... வலிமையாக உருவாக்கப்பட்டிருந்தது அந்த கதவு., சேண்டியின் கதவை உடைக்க முயற்சித்து தோற்றவன்...... சாயா இருந்த அறை பக்கமாக ஓடி.... வெறித்தனமாக அந்த கதவை உடைக்க முற்பட்டான்.....
அவனது வெறித்தனத்தால்..... அவனது சக்திகள் எல்லாம் வெளியேறி விட..... அரக்கனாய் இருந்தவன்.... கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை அடைந்தவனாய்.... தரையில் மயங்கி சரிந்தான்...
*************
காலை ஒன்பது மணியாகியும் வகுப்புக்கு செல்லாமல் கல்லூரி வாசலயே பார்த்துக் கொண்டிருந்தான் ரோகித்... காரணம் வழக்கமாய் எட்டு மணிக்கே வந்து விடும் சாயாவும்..... காலையில் சாயா கூட குடிக்காமல் தன் வீட்டுக்கு காரில் தன்னை பிக் அப் செய்ய வரும் சேண்டியும் இன்னும் வரவில்லை....
தனது ஃபோனில் தொடர்ந்து சாயாவை அழைத்துக் கொண்டே இருந்தான் .....இத்தோடு முப்பத்தி இரண்டாவது முறை அழைத்து விட்டான்.....  ஆனால் அவள் பதில் அளிக்கவே இல்லை....
காதலி தான் தன் அழைப்பை ஏற்க வில்லை என்றால்.... காதலியை விட மோசமாக....  மணிக்கு ஒரு முறை கால் செய்து.... தன்னை தொந்தரவு செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் இந்த சேண்டி ஏன் தன்னை அழைக்கவில்லை என்று குழம்பிப் போயிருந்தான் ரோகித்.....
கொஞ்சம் கொஞ்சமாக வெயில் ஏற... ஏற.... அவனது நெற்றியில் வியர்வை ஆறாய் வழிய துவங்கி விட்டது,..... தன் இடுப்பில் கைகளை வைத்தவனாக.... தன் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு கட்டத்தில் கடுப்பாகி விடவே...... தனது ஃபோனை பாக்கெட்டில் திணித்து விட்டு..... சாயாவின் வீட்டை நோக்கி தன் இயந்திர குதிரையை பறக்க விட்டான் ரோகித்..... அடுத்த இருபதாவது நிமிடத்தில் சாயாவின் வீட்டின் முன் நின்றிருந்தான் அவன்...
சாயா தனியாக இருப்பதால்... அவளது வீட்டின் சாவி ஒன்று ரோகித்திடமும் இருந்தது.... எனவே அவள் வீட்டின் கதவில் சாவியை நுழைத்து உள்ளே சென்றவனை வரவேற்றதோ.... ஆளில்லாத வீடு தான்..... 
பேபி..... ஆர் யூ தேர்..... என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தவனின் கண்ணில் விழுந்தது இரத்தம் படிந்த தரை.... அவனது கால்கள் அதற்கு மேலும் நகர மறுக்க... அவனது கண்கள் மாடிப்படிகளில் அங்கும் இங்குமாக தெரித்திருந்த இரத்த துளிகளை ஒரு வித நடுக்கத்துடன் பார்த்தது......
அவன் மனம் ஏதேதோ விபரீதங்களை கற்பனை செய்ய..... அவன் மூளை உறைந்து போவது போல்.... செயலற்றுப் போனவனாய் நின்றிருந்தான் ரோகித்....
இல்ல.... இல்ல.... என் சாயாவுக்கு எதுவும் ஆகியிருக்காது.... என்று பல முறை கூறி தன்னை தான் சம்மாளித்தவனாக......
சாயா.... சாயா.... என்று கத்தி கத்தி அழைத்தவாறே.....  படிக்கட்டில் ஏறி வேகமாக அவளது அறைக்குள் நுழைந்தவனுக்கு கிடைத்தது ஏமாற்றமே......
ஷிட்.... சாயா.... வேர் ஆர் யூ பேபி.... ப்ளீஸ்... என்னை இப்படி தவிக்க விடாதடி.... என்று பைத்தியம் போல் புலம்பியவன்... தன் தலை முடியை அழுந்த கோதிக் கொண்டான்....
அவனால் யோசிக்க கூட முடியாத அளவிற்கு.... அவனது மூளை ஸ்தம்பித்து போயிருக்க... அவன் நினைவில் வந்தவன் சேண்டி மட்டுமே......
சேண்டி.... எஸ்... சேண்டியால மட்டும் தான் இப்போ எனக்கு உதவ முடியும்..... என்று தனக்கு தானே கூறிக் கொண்டவன்... அடுத்த நொடியே சேண்டியின் அப்பார்ட்மெண்டை நோக்கி பறந்தான்......
சாலையின் செல்லும் வாகனங்களை எல்லாம் வேகமாக முந்தி சென்று கொண்டிருந்தான் ரோகித்.... அவன் மனதில் இருந்ததெல்லாம்...
சாயா... சாயா... சாயா.... மட்டுமே..  அவளது நிலையை பற்றி அறியாமல்... பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது ரோகித்துக்கு....
ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தவன்..... விளக்கு கம்பத்தில் எரியும் சிகப்பு விளக்கையும்.... அதின் அருகில் டிஜிட்டல் பலகையில் ஓடிக் கொண்டிருக்கும் எண்களையும்... பொறுமையற்றவனாய் பார்த்துக் கொண்டிருந்தான் ரோகித்...
கமான்.... கமான்...... என்று பற்களை கடித்தவாறு முனுமுனுத்துக் கொண்டிருந்தவனின் கைகளோ.... ப்ரேக்கை அழுத்தி பிடித்து.... ஆஸ்குலேட்டரை தாறுமாறாய் முறுக்கிக் கொண்டிருந்தது.....
தன் மரணம் தன்னை நெருங்க வெறும் 35 நிமிடங்களே இருக்கிறது என்பதை அறியாதவனாய்... ரோகித் காலில் வெண்ணீரை ஊற்றியவன் போல் துடித்துக் கொண்டிருக்க... அவனுக்கு பின்னால் நான்கடி தூரத்தில் ஒரு காரினுள் அமர்ந்தவனாக... அவனையே உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் ஒரு மர்ம மனிதன்... 
சிக்னல் பச்சை விளக்காக மாற.....
ட்ர்ர்ர்ர்ர்..... என்று வேகமாக ஆஸ்குலேட்டரை முறுக்கி சாலையில் பறந்தவனை.... விடாமல்  துரத்தி சென்றான் அந்த மர்ம மனிதன்....
மரணத்தோட கண்ணியில இருந்து தப்பலாம்ன்னு நினைக்குறீயா மை டியர் யங் பாய்..... உன்னோட மரணம் உன்ன தேடி வந்துட்டு இருக்கு...... என்று குரூரமாக கூறினான் அந்த மர்ம மனிதன்....
உன்ன விட மாட்டேன்..... நீயும் எனக்கு வேணும்..... உனக்கு ஒரு அழகான மரணத்தை நான் கொடுக்கனும்.... அதுவும் என்னுடைய கைகளாலேயே கொடுக்கனும்...... என்று சிலாகித்துக் கொண்டவனின் கண்கள்... அந்த காரின் பின் சீட்டில் மயங்கியவர்களாய் அமர்ந்திருந்த இருவரைப் பார்த்தது.....
அவர்கள் இருவரும் வேறு யாருமல்ல... ரோகித்தின் நன்பர்களான ஜெரோமும் ஜோயலும் தான் அவர்கள்.... ரோகித்துக்கு முன்னமே அந்த மர்ம மனிதனின் பிடியில் சிக்கியிருந்தனர் இருவரும்.....  
ஜெரோமின் வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருக்க... போதையின் பிடியில் சிக்கியவனாக புத்தி பேதலித்தவன் போல் அமர்ந்திருந்தான் அவன்.... ஜோயலோ.... கை கால்கள் கட்டப்பட்டவனாய்.... ஒரு பக்கமாக சரிந்து கிடந்தான்..... அவனது கண்களும் வாயும் கட்டப்பட்டிருக்க..... இருவரும் சுயநினைவில்லாமல் கிடந்தனர்....
இருவரையும் சுமந்து கொண்டு ரோகித்தை விடாமல் துரத்தியது அந்த மர்ம மனிதனின் கார்......
ஐந்து நிமிடம் கடக்க..... ரோகித்தின் ஃபோன் அலறியது..... ஆனால் சாலையில் பறந்து சென்று கொண்டிருந்தவனின் காதில் அந்த சத்தம் விழவே இல்லை....
சரியாக 30 நிமிடங்கள் கடக்க..... சேண்டியின் வீட்டிற்கு செல்லும் சாலைக்குள் நுழைந்த ரோகித்தை.... அதிவேகத்தில் வந்த கார் ஒன்று கண் இமைக்கும் நொடியில் அடித்து தூக்கியது.... கார் மோதிய வேகத்தில்..... ரோகித்தின் பை ஒரு பக்கமாக தூக்கி வீசப்பட.... மற்றொரு பக்கம் தூக்கி வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த ரோகித்தை......  யாரும் காணும் முன்னமே அள்ளிச் சென்றது மற்றொரு கார்......
ஆள் நடமாட்டம் இருந்தும்.... யாரும் கவனிக்காத வண்ணம் கச்சிதமாய் ரோகித்தையும் கடத்திச் சென்றான் அந்த மர்ம மனிதன்.... அவன் தான் மரணத்தை பெயராயும் கொலையை தொழிலாயும் கொண்டவன்...
********
விண் விண்ணென்று வலித்த தலையை ஒரு கையால் தாங்கியவாறே எழுந்தாள் சாயா..... உருண்டு புரண்டு சில முயற்சிகளுக்குப் பின் எழுந்தவளுக்கு கண்களை தான் திறக்க முடியவில்லை.... கடினப்பட்டு இமைகளை பிரித்தவளுக்கோ பார்வை மங்கலாக தெரிந்தது.... சில முறை கண்களை கசக்கியவள்....  சற்றே தெளிவடைந்த பார்வையோடு... அந்த அறையை சுற்றிப் பார்த்தாள்..... நிச்சயம் இது தன்னுடைய அறை இல்லை என்பதை உணர்ந்தவள்.... அடித்து பிடித்துக் கொண்டு கட்டிலை விட்டு கீழே இறங்க...  நெற்றிக் காயத்தில் வலி எடுக்க.... தலையை தாங்கிக் கொண்டு மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள்.....
அவ்ச்..... என்று முகத்தை சுருக்கியவள்.... அந்த அறையை சுற்றிலும் ஆராய்ந்தாள்.... நேர்த்தியான இண்டீரியர் அலங்காரத்துடன்... மிகவும் அழகாக முழுவதும் நீல நிறத்தால் அமைக்கப்பட்டிருந்தது அந்த அறை..... டிம் லைட் வெளிச்சத்தில் அந்த அறையின் சுவர்கள் தங்கம் போல் மின்னிக் கொண்டிருந்தது..... ஒரு இனிமையான நறுமணம் அந்த அறையை நிரப்பியிருந்தது.... எல்லாவற்றையும் விழிகளால் நோட்டமிட்டவள்... தனக்கு தானே பல கேள்விகள் கேட்டுக் கொண்டாள்.....
நான் எப்படி இங்க வந்தேன்..... இது என்ன இடம்.... ஓ..... காட்..... என்று  தலையை பிடித்துக் கொண்டவளுக்கு...... ஒன்றன் பின் ஒன்றாக நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்தது....
எல்லாவற்றையும் நினைத்து பார்த்தவள்....
நோ..... என்று கத்தியே விட்டாள்.... சில நொடிகள் முன் வரை அழகாக தெரிந்த அறை தற்போது அவளுக்கு பயத்தை வருவித்தது...
யார் நீங்க..... எதுக்கு என்ன கடத்துனீங்க..... பதில் சொல்லுங்க.... ப்ளீஸ்..... யாராச்சும் இருக்கீங்களா.... என்று மாறி மாறி பயத்தில் கத்தியவளுக்கு பதில் சொல்ல தான் அங்கு யாருமில்லை..... அந்த அறையின் மயான அமைதியும், யாருமில்லா தனிமையும் சாயவின் உயிர் வரை ஊடுருவிச் சென்று பயத்தைக் கொடுத்தது......
அவள் உடலில் ஒவ்வொரு அணுவையும் பயமே ஆக்கிரமித்திருக்க..... மெதுவாக கட்டிலை விட்டு எழுந்தாள் சாயா..... நெற்றிக் காயம் கொடுத்த தலைவலியோடு... அவள் முன் பூதாகராமாய் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் இப்பிரச்சனையும் சேர்ந்து கொள்ள... அவளுக்கு பூமியே தலை கீழாய் சுற்றுவது போல் இருந்தது.....
தன் கண்களை அங்கும் இங்குமாக சுழட்டியவள்.... அறையின் கதவு எங்கே இருக்கிறது என்று விழிகளாலேயே தேடினாள்... ஆனால் அவளுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில்.... அந்த அறையில் ஜன்னலும் இல்லை..... கதவுகளும் இல்லை.... நாலாப்புறமும்  சுவர்களால் சூழப்பட்டிருந்த அறையில் அடைக்கப்பட்டிருந்தாள் சாயா.....
ப்ளீஸ்.... யாராச்சும் இருக்கீங்களா..... எனக்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ்.... என்று பலமுறை கத்தியவளுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் போகவே பயத்தில் அவளுக்கு அழுகை முட்டியது......
மை காட்...... என்று நெற்றியைப் பிடித்தவளாக.... கார்பெட் விரிக்கப்பட்ட தரையில் முழங்கால் பதித்து தேம்பி தேம்பி அழுதாள்.....
அவளது கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் தரையில் விரிக்கப்பட்ட கார்பெட்டில் விழுந்தது.... பசித்த வயிறு சத்தமிட.... தன் கண்களை துடைத்துக் கொண்டவளாக சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் சாயா..... சில நொடிகள் தன் கண்களை மூடி.... சில முறை ஆழமான மூச்செடுத்து தன் கண்களை திறந்தவளுக்கு.... இப்போது கொஞ்சம் பெட்டராக இருந்தது.... ஆனால் மனதில் தாண்டவமாடிக் கொண்டிருந்த பயம் மட்டும் அடங்கிய பாடில்லை....
ஒருவாறாக மனதை ஒருநிலைப் படுத்திய சாயா.... அங்கிருந்து தப்பிச் செல்லும் வழிகளைப் பற்றி யோசிக்க தொடங்கினாள்....
இங்க வெண்டிலேஷன் நல்லா இருக்கு.... சோ.... இங்கிருந்து தப்பிக்க நிச்சயம் ஒரு வழி இருக்கனும்..... என்று தனக்கு தானே கூறிக் கொண்டவள்.... தட்டு தடுமாறி எழுந்து அந்த அறையின் சுவரை தன் விரல்களால் தடவியவாறே ஆராய்ந்தாள்....
ஆனால் கதவு இருப்பதற்கான சிறு தடுப்பு கூட தெரியவில்லை..... அதற்காக சோர்ந்து விடாமல்...  தரையின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் ஆராய்ந்தாள்.... ஆனால் அந்த ஃப்ளோர் முழுவதும் ஒரே க்ரானைட்டால் செய்யப்பட்டிருக்க.. அதில் அந்த கதவுகளும் இருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த பின்... சாயாவுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது....
ஷிட்..... என்று தரையில் காலை உதைத்தவள்..... எரிச்சலில் மேஜை மீதிருந்த நைட் லேம்பை தூக்கி சுவரில் வீசியடிக்க..... அவள் வீசிய வேகத்தில் உடைந்த நைட் லேம்  பார்ட் பார்ட்டாக தரையில் கிடந்தது.... கூடவே அவள் எதிர்பாராத ஒன்றும் நடந்தது..... அந்த அறையின் உள்ளேயே வேறொரு அறைக்கான கதவு திறந்தது...... நடப்பதையெல்லாம் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சாயா....
இது என்ன ரூம்... இது தான் வெளியே போறதுக்கான வழியா.... என்று பல முறை தனக்கு தானே கேட்டுக் கொண்டவளுக்கு உறுதியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை.....
நீரில் விழுந்த பின் நீந்த தெரியாதெனினும் நீந்தித் தானே ஆக வேண்டும்..... தப்பிக்க எந்த வழி கிடைத்தாலும் அதை பயன்படுத்த தயாராக இருந்தாள் சாயா.....
பயப்படுறதுல பிரயோஜனமே இல்ல... வேற வழியும் இல்ல..... இந்த ரூம்ல என்ன இருக்குன்னு பார்த்துட வேண்டியது தான்......  என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டவளாக தான் இருந்த அறையிலிருந்து... திறந்த வாயிலின் வழியாக மற்றொரு அறைக்குள் நுழைந்தாள் சாயா..... அவள் நுழைந்த மறுகணம் மீண்டும் சட்டென அடைத்துக் கொண்டது கதவு.....
கதவு சாத்தப்பட்ட சத்ததில் திடுக்கிட்டு திரும்பியவளுக்கு காட்சியளித்ததோ வெறும் கருப்பு நிற சுவர் தான்..... இங்கு ஒரு கதவு இருக்கிறது என்பதை அறிந்தவர்களை தவிர... அதை பார்ப்பவர்கள் யாருக்கும் அங்கு ஒரு கதவு இருப்பதே தெரியாது என்னும் அளவுக்கு கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த கதவு.....
இதையெல்லாம் பார்த்த சாயவுக்கோ தொண்டை வறண்டு.... நாக்கு மேல் வாயோடு ஒட்டிக் கொண்டது....
விடை தெரியாத மர்மங்களின் சுழலில் தான் சிக்கியிருப்பதாக உணர்ந்தாள்..... விழிகளில் மிரட்சியுடன் தான் இருக்கும் அறையை ஏறிட்டுப் பார்த்தவளுக்கோ....  கண்கள் பிதுங்கி வெளியே வந்து விடும் போல் அதிர்ச்சியாக இருந்தது....
அந்த அறை முழுவதும் கம்ப்யூட்டர்களும் சர்வர்களும் மட்டுமே இருந்தது... கம்யூட்டர்கள் எல்லாம் ஆன் மோடில் இருக்க.. அதில் தொடர்ச்சியாக பல எழுத்துக்கள் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன...
What the  fuck is this... என்று லேசாக தடுமாறியவள்.... அந்த கணினி மேஜையை பிடிமானத்துக்காக பிடிக்க... அந்த மேஜையின் மேல் கிடந்த சில புகைப்படங்கள் அவளது கண்ணில் விழுந்தது.....
ஒரு ஃபோட்டோவை கையில் எடுத்தவள்..... அதை  உற்றுப் பார்த்தாள் அதில் ஒரு ஆணின் ஒரு பக்கம் முகம் மட்டும் தெரிந்தது..... அதை நன்றாக உற்றுப் பார்த்தாள் சாயா...
இது ஜெரோம்ல.... அவனோட ஃபோட்டோ எப்படி இங்க..... என்று விரல்களால் மேஜையில் கிடந்த குப்பைகளை எல்லாம் கிளறினாள் சாயா.... இன்னும் சில ஃபோட்டோக்களும் அவளது கையில் சிக்க.... அதையெல்லாம் பார்த்த சாயவோ உடலை மின்னல் தாக்கியது போல் அதிர்ந்து நின்றாள்.....
ஜெரோமின் ஃபோட்டோ மட்டும் அல்லாமல்..... ரோகித் சேண்டி ஜோயல் சாயா மற்றும் அன்று பார்ட்டியில் இருந்த அனைத்து நன்பர்களின் ஃபோட்டோவும் அங்கு கிடந்தது......
இது எல்லாமே அன்னைக்கு பார்ட்டிக்கு வந்த போது எடுத்த ஃபோட்டோஸ் மாதிரி இருக்கே... இதையெல்லாம் எடுத்தது யாரு...... என்று குழம்பிய சாயாவுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.....
நடுங்கிய விரல்களோடு அதையெல்லாம் எடுத்துப் பார்த்தவளுக்கு காதில் ஏதேதோ சத்தம் கேட்க.... திடுக்கிட்டு பின்னால் திரும்பினாள் சாயா....
அங்கு ஒரு பெரிய கணினி திரையில்.....  சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் ஒரு பைக்கை காண முடிந்தது சாயாவால்.... அந்த க்ளாரிட்டியான வீடியோவில் அந்த பைக் நம்பர் மற்றும் அந்த பைக்கில் சென்று கொண்டிருந்தவனை சாயாவால் தெளிவாக காண முடிந்தது..... அது யார் என்பதை சாயா உணர்ந்த நேரம்  அவள் கையில் இருந்த ஃபோட்டோக்கள் எல்லாம் தானாக மேஜையில் விழ.... தான் கண்ட காட்சியை நம்ப முடியாதவளாய்....
ரோகித்...... என்று கத்தியே விட்டாள் சாயா.....
அப்டின்னா....... யாரோ எங்க எல்லாரையும் கடத்த  ப்ளான் பண்ணுறாங்க.... ஓ மை காட்.... ரோகித் ட்ரை டூ எஸ்கேப்.... என்று தொண்டை கிழிய கத்தினாள் சாயா... அவள் எவ்வளவு அதிகமாக கத்தினாலும் அவனுக்கு கேட்கப் போகிறதா என்ன...... ஆனால் அது எதையும் உணராதவளாய்... தன் காதலன் ரோகித்துக்கு எதாவது ஆகி விடுமோ என்ற அச்சத்தில் கதறினாள் சாயா....
ஆனால் அதையெல்லாம் வீண் என்று உணர்த்தும் வகையில்.... எங்கிருந்தோ வந்த ஒரு  கார் ரோகித்தை மோதி விட்டு மின்னலாய் கடந்திருக்க.....
ரோகித்..... என்று அலறிய சாயா.... தரையில் விழுந்து உடல் குலுங்க அழுதாள்.....  இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் உயிர் காதலனை மானிட்டரில் கண்டு.... கதறி துடித்தது அவளது காதல் மனம்......
டேய்.... யார்டா நீ.... உனக்கு என்ன வேணும்... என்  ரோகித்.... என் ரோகித் பாவம்டா.......  ஏன்.. ஏன்.... நாங்க என்ன பாவம் பண்ணினோம்..... எதுக்குடா எங்கள வதைக்குற..... என்று முகம் தெரியாத அந்த மர்ம மனிதன் தன் முன்னால் நிற்பதாய் நினைத்து அவள் கதறி அழுதாள்.....
தன் காதலனை இரத்த வெள்ளத்தில் கண்ட போது..... அவள் மனதை ஆயிரம் கத்திகள் ஊடுருவிச் சென்றது போல் வலித்ததல்லவா.... சாதரண வலியா அது.... விரும்பியவரின் வலியும் வேதனையும் உயிரின் வலியை ஏற்படுத்துமல்லவா...... இதை விட மரணமே மேல் என நினைத்தாள் சாயா.....
இல்ல... இல்ல.... என் ரோகித்துக்கு எதுவும் ஆகாது...... ஒரு வேளை அவனுக்கு எதாவது  ஆச்சி உன்ன சும்மா விடமாட்டேன்டா...... என்று கோபத்திலும் அழுகையிலும் தொண்டை கிழியும் அளவிற்கு கத்தினாள் சாயா.... அவளது அழுகையும், ஆக்ரோஷமான தொனியும் அந்த அறையின் மூலை முடுக்குகளிலெல்லாம் பட்டு எதிரொலித்தது.... 
இதையெல்லாம் அந்த மர்ம மனிதன் கேட்க வேண்டுமென்று அவள் பேசவில்லை...... ஆனால் இதையெல்லாம்  சிசிடிவி மூலம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மர்ம மனிதனோ சாயாவை பார்த்து இகழ்ச்சியாக தன் உதட்டை வளைத்தான்.....
உன்னோட கண்ணீர்..... உன்னோட கதறல்.... இதையெல்லாம் பார்த்த பின்ன......உன்னோட மரணத்த விட ......உன் காதலனோ மரணத்தை தான் நான் அதிகமா விரும்புறேன்... என்று குரூரமாக கூறிய அந்த மர்ம மனிதனின் குரல் சாயா இந்த அறையில் எங்கும் அசரீரியாய் எதிரொலிக்க..... அதிர்ந்து போனவளாய் அந்த அறையை சுற்றி பார்த்தாள் சாயா....
ஏய் .....யாரு நீ.... என்.... என் முன்னால வா.... எ....... எதுக்குடா எங்கள கடத்துற.... என்று கேட்ட சாயாவுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை ...... வெகுநேரம் தண்ணீர் குடிக்கவில்லை என்பதால் .....அவளுக்கு தொண்டை அடைத்தது....... நாக்கு எல்லாம் ஏற்கனவே வறண்டு போயிருந்தது..... நெற்றிக் காயம் தந்த தலைவலியும், அதீத பயமும் சேர்ந்து அவளுக்கு மயக்கம் வருவது போலிருந்தது.....  தெம்பில்லாமல் நிற்க சில நொடிகள் கழித்து .......அவளது கேள்விகளுக்கு பதில் வந்தது அந்த மானிட்டரிலிருந்து.....
நான் உன்னோட மரணம்..... என்ற அதே குரல்.... குரூரம் நிறைந்த அதே குரல்...... அந்த அறையின்  நாலாப்புறமும் எதிரொலிக்க..... மெதுவாய் அந்த மானிட்டரை ஏறிட்டுப் பார்த்தாள் சாயா....
அங்கே அந்த மர்ம மனிதன்.... பெரிய திரையில் முகமூடி அணிந்தவனாய் நின்றிருக்க... அவன்  தோளில் இரத்த களறியாய் கிடந்தான் ரோகித்.....
தான் கண்ட காட்சி பொய்யாய் தான் இருக்கும்.. என்று பைத்தியம் போல் நினைத்துக் கொண்ட சாயா..... இடைவிடாமல் மாறி மாறி...... உளறினாள்...
இல்ல... இல்ல.... நீ பொய் சொல்லுற.... நான் பார்க்குறது உண்மை இல்ல.... அது என் ரோகித் இல்ல..... என்று அந்த அறையை விட்டு ஓடியவள்... தான் வந்த கதவை மாறி மாறி கைகளால் அடிக்க... சட்டென அந்த கதவு திறந்தது..... அப்போது இருந்த பீதியில் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள் சாயா....
வேகமாக வந்து தரையில் விழுந்தவள்.... தன் நெஞ்சை பிடித்துக் பிடித்துக் கொண்டு வேகமாக மூச்செடுத்தாள்......
சில நொடிகளுக்குப் பின் நிமிர்ந்து பார்த்தவள் என் முன் மர்மமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்த அறை.....
அதைக் கண்ட சாயா தன்னையும் அறியாமல் ஒரு அடி பின்னால் ஊர்ந்து சென்றாள்.....
காரணம் தற்போது அவள் வந்திருந்தது.... ஏற்கனவே அவள் இருந்த நீல நிற அறை அல்ல..... இது சிகப்பு நிற அறை......
தன்னை சுற்றி அனைத்தும் மர்மமாய் நடப்பதை கண்ட சாயாவுக்கோ....... உடலெல்லாம் ஜன்னி கண்டது போல் நடுங்கியது....
அவள் பார்த்திருக்கும்போதே.... திடீரென ஒரு உருவம் அவள் முன் வந்து குதிக்க ....தன் புறங்கையால் வாயை மூடியவாறே வீல் என்று கத்தினாள் சாயா.....
மரணம் வரும்....
அன்புடன்....
எபின் ரைடர்.....

 

மரணம் வரும் நேரம் எது?Donde viven las historias. Descúbrelo ahora