அத்தியாயம் 1(டெத் டைமர்)

195 4 0
                                    

ஏய்...... சாயா.... இன்னும் வராம என்னடி பண்ணுற..... நாம போறதுக்குள்ள அவனுங்க பார்ட்டி பண்ணி முடிச்சிருப்பானுங்க....  என்று நாலாவது முறையாக ஃபோனில் கத்திக் கொண்டிருந்தான் ரோகித்.....
ரோகித் இருபத்தோரு வயது ஆண்மகன்... சாயாவின் பாய் ஃப்ரண்டும் கூட.... இன்று உடன் பயிலும் மாணவன் ஒருவனின் பர்த் டே பார்ட்டி... அதை ஒரு பப்புக்கு போய் கொண்டாட போகிறார்கள்..... அதற்காக தான் சாயாவை பிக் அப் செய்ய வந்திருந்தான் ரோகித்.... சாயாவோ எட்டாவது ட்ரெஸை போட்டுப் பார்த்து, மூன்று இஞ்ச் அளவுக்கு மேக் அப் செய்து... அப்பாடா.... பிரம்மனுக்கு அவளை படைக்க கூட அத்தனை நேரம் பிடித்திருக்காது போலும்....
டொக்.... டொக்.... என்று ஹை ஹீல்ஸ் ஒலி எழுப்ப.... தாளம் தப்பாமல் காலடிகளை எடுத்து.. அலுங்காமல் குலுங்காமல் அடி வைத்து....  இதோ வந்து விட்டாள்....
பேப்.... ரொம்ப நேரமா வெயிட் பண்ணியா.... என்று அவனது கன்னம் உரசி.... அவனது கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தவள் அவனது பைக்கில் ஏறி அமர்ந்து அவனை கட்டிக் கொண்டாள்... இல்லை... இல்லை.. அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டாள்....
அவ்வளவு தான்..... அத்தனை நேரம் இருந்த சலிப்பை மறந்து.... இல்லாத இறக்கைகளை  விரித்து காற்றில் பறக்க தொடங்கி விட்டது ரோகித்தின் மனம்.... கூடவே அவனது பைக்கும் காற்றில் பறக்க... வெகு விரைவிலேயே பப்பும் வந்தது.... அந்த பப்பின் கீழ் தளத்தில் இருந்த ரெஸ்டாரண்டில் இருந்த ஒரு அறையில் நன்பர்கள் பட்டாளம் குழுமியிருக்க... அவர்களோடு வந்து ஐக்கியமாகி கொண்டனர் இருவரும்....
பெக்கார்ட்டி லெமன், ஸ்காட்ச் விஸ்கி, பீர் என வித விதமான சோம பானங்களுடன் பார்ட்டி ஆரம்பமாகியது.... டீன் ஏஜ் நண்பர்களின் பார்ட்டியில் மகிழ்ச்சிக்கா பஞ்சம் இருக்கும்..... குடித்து விட்டு ஒரு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும்... சாயாவும் ரோகித்துடன் நடனமாடிக் கொண்டே.. அவனது தோளில் சாய்ந்திருந்தாள்.... ரோகித்தும் குடித்திருந்தான்...... ஆனால் சாயாவுடன் இருக்கும் போது ஒரு நாளும் அவன் நிதானம் தப்பும் அளவுக்கு குடிக்க மாட்டான்....
காய்ஸ்..... இன்னைக்கு நம்ம ராக்கேஷ் மச்சியோட பர்த் டே.... இந்த டைம ஜாலியா ஸ்பெண்ட் பண்ண என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு.... செம ஃபன்னா இருக்கும்.... ட்ரை பண்ணலாமா.... என்று கேட்டான் ஜெரோம்... அவன் சாயாவின் நன்பர்களில் ஒருவன்.... கொஞ்சம் பயந்தாங்கோலி தான், ஆனால் அந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ள மாட்டான். வேதியல் துறையில் கை தேர்ந்த நிபுணன் அவன். 
வாட் ஜெரோம்..... என்று கோராஸாக அவனைப் பார்க்க.... அனைவரது கண்களிலும் ஒரு சுவாரஸ்யம் மின்னியது....
காய்ஸ்...... இட்ஸ் அ ஆப்..... டெத் டைமர்...... ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்....  எல்லாரும் நம்ம ஃபோன்ல இத இன்ஸ்டால் பண்ணலாம்... யாருக்கு ஷார்ட் லைஃப் இருக்குதோ... அவங்க மத்தவங்க கொடுக்குற டாஸ்க்க செய்து முடிக்கனும்.... இப்படி எல்லாரும் பண்ணனும்..... என்று சொல்ல.... அந்த இளவட்டங்களின் உற்சாகம் இன்னும் அதிகமாகியது..... பயம் அறியாத இளம் கன்றுகள் அல்லாவா இவை..... ஆனால் ஜெரோம் கூட பயப்படவில்லை என்பது தான் இங்கு ஆச்சரிய்யப்பட வேண்டிய விடயம்.
ஹேய்... சூப்பர் சூப்பர்.... என்று அனைவரும் கோஷமிட..... அனைவரும் தங்களது ஃபோனை எடுத்து ஜெரோம் தங்களுக்கு வாட்ஸ்ஆப் செய்திருந்த லிங்கின் வழியாக அதை இன்ஸ்டால் செய்து அதை அனைவரும் ஒரே நேரத்தில் ஓப்பன் செய்ய.. அனைவரது விழிகளும் ஆர்வத்தால் மின்னியது.....
மாறாக சாயாவின் விழிகளோ... பயத்தால் பிதுங்கியது... காரணம் அவளுக்கு இன்னும் நான்கு மணி நேரம் தான் லைஃப் இருந்தது....
இது வெறும் கேம் தான் என்றாலும் அவள் மனம் திக்... திக்... திக்கென்று அடித்துக் கொண்டது....  யாரும் பார்க்காத நேரம்... தன் நெஞ்சை அழுந்த நீவிக் கொண்டாள்....
ஹேய்.. கமான் சாயா.... இது வெறும் கேம் தான்..... என்று ஜெரோம் கூறவே.... வெறுமனே சிரித்து வைத்தாள் சாயா.. அவளது அழகான சிரிப்பில் அவளது முகத்தில் தெரிந்த பயத்தின் ரேகைகள் எல்லாம் மறைந்து போயின... ரோகித்தும் அவளை தன் தோளோடு அணைத்து..... அவளது நெற்றியில் முத்தமிட்டவன்...
பேப்.... ஆர் யூ ஒகே.... என்று கேட்க.... சாயாவின் மனம் எப்போதும் போல் அவனது குரலில் பாகாய் கரைந்தது.. மேஜைக்குள் கீழ் அவனது கையை இறுக்கமாக  பற்றிய சாயா.....
எஸ்... பேப்.... என்று கூறி அழகாக சிரித்தாள்... தற்போது அவளது முகம் குடித்ததாலும் வெட்கத்தாலும் சற்று அதிகமாகவே சிவந்திருந்தது......
நண்பர்கள் அனைவரும் தாங்கள் விருப்ப பட்ட டாஸ்க்குகளை ஒரு பேப்பரில் எழுதி.... அதை ஒரு குடுவைக்குள் போட்டனர்.... முதல் முதலாக சாயா  அதில் ஒன்றை எடுத்து அதில் இருக்கும் டாஸ்க்கை செய்ய வேண்டும்.....
அனைவரும் தங்களது டாஸ்க்கை எழுதி குடுவைக்குள்  போட்டு விட்டு... ஆர்வமாக காத்திருந்தனர்..... சாயாவும் மனதிலிருந்த பீதியை வெளியே காட்டாமல்.,. அதில் ஒன்றை எடுத்தாள்...
உங்க பக்கத்துல இருக்குறவங்களுக்கு 50 கிஸ்ஸஸ் கொடுக்கனும்..... என்ற டாஸ்க்கை.. அனைவருக்கும் கேட்குமாறு... சாயா வாசிக்க.... நண்பர்கள் எல்லோரும்
ஓஹோ.... என்று கோஷமிட்டனர்... காரணம் அவள் அருகில் அமர்ந்திருந்தது ரோகித் அல்லவா... அவனை முத்தமிட அவளுக்கு கசக்குமா என்ன.... சிவந்த கன்னங்களுடன்.. ரோகித்தை நெருங்கியவள்... அவனது போதையேறிய கண்களைப் பார்த்துக் கொண்டே.... தன் இதழ் தடங்களை அவனது முகத்தில் பதிக்க துவங்கினாள்.....
50 முத்தங்களை இலக்காக கொண்டு... அவளது முத்த ஓட்டம் வெற்றிகரமாக துவங்கியது...
கொடுத்தாள்.... கொடுத்தாள்... கொடுத்துக் கொண்டே இருந்தாள்... முத்தங்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்ட....
ஹேய்... ஹேய்... உங்க சேட்டைய ஆரம்பிச்சிடதீங்கப்பா.... இது பப்ளிக்... பப்ளிக்.... என்று அவர்களின் நன்பன்  ஒருவனான ஜோயல் கூறவும் தான்...
அந்த இரு காதல் பறவைகளும் தங்களது காதல் உலகத்திலிருந்து மீண்டது.... சாயாவும் தன் சிவந்த கன்னங்களோடு குனிந்து கொண்டாள்.....
சிங்கிள் பசங்கள பக்கத்துல வச்சி பண்ணுற வேலையா இது.... என்று குறைபட்டுக் கொண்டான் சிங்கிள் சேண்டி..... அவனுக்கு அவன் கவலை.....
அடுத்தடுத்த நபர்களுக்கான டாஸ்க்குகள் அனைத்தும் கொடுக்கப்பட்டு செய்து முடிக்கப்பட... அந்த இடமே சிரிப்பாலும் கேலி கிண்டலாலும் நிறைந்திருந்தது........ பார்ட்டி முடிந்து அனைவரும் தங்களது வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்..... அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சியான மனநிலையில் மறந்திருந்த ....டெத் டைமர் கேம்....  இப்போது  தான் சாயாவுக்கு நினைவு வந்தது.... அடுத்த நொடி.. அவளது தொண்டையில் ஏதோ அடைத்தது போல் ஒரு உணர்வு....
நோ.... நோ... இது ஒரு கேம்.... என்று தனக்கு தானே பல முறை கூறி.... தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தாள் சாயா....
வெகு நாளுக்குப் பின் குடித்ததாலும், இரவு வெகு நேரம் ஆனதாலும் சாயாவுக்கு கொஞ்சம் மயக்கமாகவே இருந்தது.... டெத் டைமரில் அவளுக்கு  இன்னும் இரண்டு மணி நேரங்கள் தான் மிச்சம் இருந்தது.... அது ஒரு கேம் என்று தன் மனதை ஒரு பாடாக சம்மாளிக்க தொடங்கினாள் சாயா...
பேப்... டைம் ஆச்சு..  வா வீட்டுக்கு போகலாம் என்று ரோகித் அழைக்க.... அவனது கண்களைப் பார்த்தாள் சாயா...  அவனும் குடித்திருந்தான்... அவனது நடையிலும் லேசான தடுமாற்றம் இருந்தது...... ஏனோ அவளுக்கு அந்த நேரம் டெத் டைமரின் ஞாபகம் வரவே.....
ரோகித்..... நான் கேப் புக் பண்ணி போறேன்.... நீ கிளம்பு.... என்று சொன்னாள் சாயா.....
பேப்.... இந்த நேரம் கேப்ல போறது சேஃப் இல்ல..... என்று ரோகித் சொல்ல... அவனது உதட்டில் தன் ஒற்றை விரலால் தடுத்தாள் சாயா....
பேப் இட்ஸ் கெட்டிங் லேட்.... நீ வீட்டுக்கு போ... ஆண்டி தேடுவாங்க.... என்று சொல்லி சம்மாளித்தவள் அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்... அவனும் அரை மனதாக தனது பைக்கில் ஏறினான்.....
பேப்..... என்று மீண்டும் ஒரு முறை ரோகித் அழைக்கவே..... என்ன என்பது போல் ஒற்றை புருவத்தை தூக்கினாள் சாயா.....
வீட்டுக்கு போய் எனக்கு கால் பண்ணு.... மறந்துடாத...... என்று  ரோகித் அக்கறையாக கூற... வழக்கம் போல அவனது அக்கறையில் நெகிழ்ந்த சாயா.... அழகாக புன்னகைத்துக் கொண்டே சரி என்பது போல் தலையை அசைத்தாள்....
கேப் வரும் வரை காத்திருந்து... அவளை கேப்பில் ஏற்றி விட்ட பின்னரே தன் வீட்டுக்கு சென்றான் ரோகித்...... கண்ணியமான காதலன்... கடமை தவறாத காவலன்... தன் ஹெல்மேட்டை அணிந்து கொண்டு.... தன் இயந்திர குதிரையில்  வீட்டை நோக்கி பறக்க தொடங்கினான் ரோகித்....
கேப்பில் ஏறிய சாயா....  கவனமாக சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு அமர்ந்தாள்... ஒரு பெருமூச்செறிந்தவாறே  கண்களை மூடி சீட்டில் சாய்ந்தாள்..... இன்னும் மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டு தான் இருந்தது..... அந்த டெத் டைமர் விளையாட்டை விளையாடிருக்கவே கூடாதோ.... தவறு செய்து விட்டோமோ.... வீணாக இதை விளையாடி...  தனது நிம்மதியை தானே கெடுத்து விட்டோமோ.... என்று கூட ஒரு மனம் அரற்றியது....
கண்ணை மூடி இருந்தவளுக்கு..... பாதி வழியில் ஃபோன் ரிங்காகும் சத்தம் கேட்டது... ஆனாலும் அவள் கண்களை திறக்கவில்லை.... காரணம் ரிங்காகியது அவளுடைய ஃபோன் இல்லை.... அந்த ட்ரைவரின் ஃபோன்... ஒரு கையால் காரை ஓடிய படியே.... மறுகையால் அவர் அதை அட்டெண்ட் செய்து பேச.... ஏற்கனவே மனதில் இருந்த மரண பயத்தில் அவளுக்கு... அந்த ட்ரைவர் மேல் கோபமாக வந்தது.....
ஹலோ சார்..... கொஞ்சம் அந்த ஃபோனை கீழே வச்சிட்டு ஓட்டுங்க.... இல்ல... முக்கியமான காலா இருந்தா.... எங்கேயாவது காரை நிறுத்திட்டு பேசுங்க..... ட்ரைவிங்ல பேசுறது சேஃப் இல்ல.... என்று  சற்று அதட்டலாக கூறினாள் சாயா....
சாரி.... மேடம்... என்று ஃபோனை கட் செய்து விட்டு காரை ஓட்டினார் அந்த ட்ரைவர்.... அவள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் அந்த மர்மமான மரண பயத்தை பற்றி அவர் அறிவாரா என்ன...?
சாயா.... மீண்டும் தன் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டாள்.....
சில நிமிடங்களுக்குள்ளாகவே.... சாலையில் சீரான வாகத்தில் பயணித்துக் கொண்டிருந்த
காரில் ஒரு கனரக வாகனம் மோத..... பல முறை உருண்டு கார் நொறுங்கி.... அதில் அவள் உள்ளேயே நசுங்கி இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் சாயா..... உயிருக்கு போராடிய நிலையில்.....
மரணம் வரும்....
அன்புடன்....
எபின் ரைடர்....

மரணம் வரும் நேரம் எது?Tempat cerita menjadi hidup. Temukan sekarang