அத்தியாயம் 8 (நம்பிக்கை)

23 1 0
                                    

மதியம் நன்றாக சாப்பிட்ட சாயாவுக்கும் சேண்டிக்கும் நேரம் போகாமல் போகவே..... அந்த சந்தன நிற அறையின் ஒவ்வொரு மூலையிலும் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தனர் இருவரும்...... 

ஏய்.... சாயா... எனக்கு ஒரு சந்தேகம்... எந்த பக்கம் பார்த்தாலும் கதவுன்னு ஒன்னு கண்ணுக்கே தெரியல.... நம்ம வந்த பக்கமா பார்த்தா.... உண்மையிலேயே இந்த பக்கமா தான் வந்தோமான்னு கேட்குற அளவுக்கு க்ளீன் போல்ட்டா இருக்கு..... இதெல்லாத்தையும் யோசிச்சி... யோசிச்சி.... என் மூளை கரையும் ஓசை ஒன்று என் கபாலத்துக்குள்ள கேக்க ஆரம்பிச்சிட்டு.... என்று சேண்டி புலம்ப... சாயாவோ அவனத உளறகளை எல்லாம்..... பாதி காதில் வாங்கியும்.... பாதி வாங்காதவளாய் அந்த அறையின் சுவர்களை பார்த்து ஏதோ ஒன்றை ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள்.... 
நம்மள கடத்திட்டு வந்துருக்கான்..... காயப்படுத்துனாலும் அதற்கு ப்ராப்பர் ட்ரீட்மெண்ட்டும் தரான்.... நல்லா பார்த்துக்குறான்.... இவன் நல்லவனா.... இல்ல கெட்டவனா... அவனோட மோட்டிவ் தான் என்ன...... என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சாயா.... எத்தனை அதிகமாக யோசித்தாலும் அவளுக்கு தலைவலி தான் வந்ததே தவிர..... பதில் கிடைக்கவில்லை..... 
பார்த்து....  பார்த்து.... மூளை கரைஞ்சிட போகுது.... என்று கவுண்டர் கொடுத்த சேண்டி கட்டிலில் மல்லாக்க படுத்து சீலிங்கை பார்த்துக் கொண்டிருந்தான்..... 
ம்ச்....  வாய மூடுடா தண்ணி வண்டி..... என்று அவனை வசை பாடிய சாயா மீண்டும் கேமராவின் முன் போய் நின்றாள்..... 
மிஸ்டர். கிட்னாப்பர்.... நீங்க இப்பவும் எங்கள பார்த்துட்டு தான் இருக்கீங்களா..,... என்று சாயா கேட்க..... அவளுக்கு மௌனமே பதிலாய் கிடைத்தது...... 
ஹ்ம்.... அவரு போய்ட்டாரு போல.... என்று சோர்வடைந்தவளாக தொப்பென சோபாவில் விழுந்தாள் சாயா... அவள் கூறியதைக் கேட்ட சேண்டியோ அரக்க பறக்க எழுந்தான்....
என்னது அவரு போட்டாரா.... ஐயோ.... இன்னைக்கு நைட்டு நமக்கு சாப்ட எதாவது வேணுமே... அதற்குள்ள அவரு வந்துடுவாரா என்னன்னு தெரியலயே.... என்று சேண்டி கர்மமே கண்ணாய் தன் வாயையும் வயிற்றையும் காப்பாற்றும் வழியறியாதவனாய் திகைக்க... 
என்ன மாதிரியான ப்ராடக்ட் இவன்ன்னு தெரியலேயே... என்று மனதிற்குள் புலம்பித் தள்ளினாள் சாயா.... 
இவர்களது இந்த உரையாடல்களை காதில் வாங்கியவனாக தன் அறையில் அரை மயக்கத்தில் கிடந்தான் இந்திரஜித்....... தினம் தினம் அவனுக்கு வாழ்வா சாவா போராட்டம் தான்...... சில மணி நேரத்துக்கு முன் கூட... மரணத்தின் விளிம்பைத் தொட்டு விட்டு தான் வந்திருக்கிறான்..... அந்த பதட்டமும் பயமும் இன்னும் அவனை விட்டு விலக வில்லை தான்.... ஆனாலும் சாண்டியின் வார்த்தைகள் அவனது மன நிலையை மாற்றியது .......அந்த நிலையிலும் லேசாக புன்னகைத்தான் இந்திரஜித்.... 
கவலப்படாத சேண்டி..... உன் வாய்க்கும் வயிறுக்கும் நான் ஒரு குறையும் வைக்க மாட்டேண்டா  .......என்று சொல்லவேண்டும் போல் அவனுக்கு தோன்றியது...... ஆனால் சொல்ல தான் முடியவில்லை.....
வலித்த தொண்டையை நீவியவாறே எழுந்து அமர்ந்தவன்..... சில நேரம் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்..... தான் கம்பனிக்கு செல்ல வேண்டிய நேரம் தாண்டி இரண்டு மணி நேரம் ஆகியிருக்க.... வீட்டிலிருந்தே ஆஃபிஸ் வேலைகளை கவனிக்க துவங்கி விட்டான் இந்திரஜித்.... 
********************
இரவும் வந்தது.... சேண்டியின் வயிற்றை நிரப்ப உணவும் சரியாய் உணவும் வந்தது.... நன்றாக உண்ட சேண்டியின் கண்களில் தூக்கம் சொக்க... அப்படியே கட்டிலில் விழுந்தான்......
விழுந்தவுடன் கண்களை மூடியவனை தட்டி எழுப்பினாள் சாயா..... 
டேய் சோத்து மூட்ட சேண்டி..... என்று சற்று கோபமாக அழைத்த தோழியின் சத்தம் கேட்டு லேசாக கண் விழித்துப் பார்த்தான் சேண்டி... 
தூங்குறவனையும், திங்குறவனையும் தொந்தரவு பண்ண கூடாதுன்னு உனக்கு யாரும் சொல்லி தரலையாடி மேக் அப் மூஞ்சி..... என்று சலிப்பாக கேட்டான் சேண்டி.... 
க்கும்.... நீ பேசுவடா.... நீ பேசுவ.... உன்ன நம்பி.. உன் கூட ஒரு பொண்ணு இருக்காளே.... அவ சாப்ட்டாளா.. உறங்குனாளா.... கொய்யால.... நீயெல்லாம் எனக்கு ஃப்ரண்டான்னு டவுட் வருது...... என்று சாயா கடுப்பாக சொல்ல.... தன் மண்டையை சொரிந்தான் சேண்டி... 
நீ என்ன பப்பாவாடி...... நீ உறங்குறீயா.... தின்னுறீயான்னு எல்லாத்தையும் எவனாச்சும் கவனிக்கனுமா என்ன..... அதோ பாரு... உன்னோட சுண்டெலி சைஸ்க்கு அந்த சோபா பக்காவா மேட்ச் ஆகும்... போய் அதுல படுத்துக்கோ... கிடைக்குற இடத்துல படுத்து உறங்குவீயா.. அத விட்டுட்டு.. உறங்குற மனுஷனோட உயிர வாங்கிட்டு... ச்ச.... என்ன பொண்ணும்மா இதெல்லாம்.... என்று சலித்துக் கொண்டவன்.... மீண்டும் உறங்கி விட... மனதில் அவனை கார சாரமாய், நாராசமாய் நன்றாக திட்டி தீர்த்தவாறே சோபாவில் உறங்கிப் போனாள் சாயா..... 
அவளிடமிருந்து சீரான மூச்சுக் காற்று வெளிப்படவே.... அவள் நன்றாக உறங்கி விட்டாள் என்பதை அறிய முடிந்தது.... அவள் நன்றாய் உறங்கி விட்டாள் என்பதை அறிந்த பின்னரே.... அது வரை உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த சேண்டி கண்களை திறந்தான்... 
தூங்குறது எவ்வளவு சந்தோஷமான விஷயம்.... ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்குதுப்பா.... இந்த அழுமூஞ்சியை வச்சுட்டு நம்ம எங்க தூங்குறது... ராத்திரியோட ராத்திரியா இவள எவனாவது தூக்கிட்டு போயிட்டா.... என்  உயிர் நண்பன் ரோகித்துக்கு நான் என்ன பதில் சொல்வேன்...... என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியவன் கட்டிலில் எழுந்து அமர்ந்தான்... 
சேண்டியின் விழிகள்... சாயாவை திரும்பி பார்த்தது..... 
அந்த குட்டி சோபாவில் .....குழந்தை போல் சுருண்டு மடங்கி உறங்கிக் கொண்டிருந்தாள் சாயா.... அது சாதாரணமாகவே குட்டி சோபா தான் ....இருந்தாலும் அவளது உருவத்திற்கு அது பெரியதாக தான் இருந்தது... ஆனாலும் குட்டியாக பூனை போல் உடலை மடக்கி உறங்கிக்கொண்டிருந்தாள் அவள்.... 
வாய மூடி தூங்கும் போது மட்டும் தான் அமைதியா இருப்பா..... வாய திறந்தா அராத்தி தான்....  இவளையெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு என் உயிர் நண்பன் என்ன பாடு பட போறானோ...... இன்று புலம்பியவனின் இதழ்களில் குறும்பாய் எட்டிப்பார்த்தது ஒரு புன்னகை.... 
இரவு முழுவதும் தூக்க கூடாது என்பதற்காக வயிறுமுட்ட தண்ணியை குடித்தவன்..... அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் துவங்கினான்...... 
அவனது யோசனையை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது ஒரே ஒரு விஷயம் தான் இங்கு நடப்பது என்ன?...... என்று கேள்வி மட்டுமே அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது..... மாறி மாறி அதையே சிந்தித்துக் கொண்டிருந்தவன் சாயா கூறிய விஷயங்களை யோசித்து பார்த்தான்..... 
அன்னைக்கு பார்ட்டில தான் அவன் எங்கள பார்த்துருக்கான்... பார்த்தது மட்டும் இல்லாம ஸ்கெட்ச் போட்டு தூக்கவும் செய்திருக்கான்.... அப்படினா அந்த பார்ட்டில தான் ஏதோ நடந்து இருக்கணும்...... என்று தன் புருவத்தின் மத்தியை தன் விரலால் அழுத்திக்கொண்டு யோசித்தான் சேண்டி..... 
முதல்ல சாயா..... அதுக்கப்புறம் நான் ..... கடைசியா ரோகித்...... எந்த ஆர்டரில் இதை பண்ணுறான்னு தெரியலையே ஒரு வேளை அழகா இருக்கிற பசங்கள எல்லாம் முதல்ல கடத்தினானா..... அப்படிப் பார்த்தால் அவன் என்ன இரண்டாவது கடத்த வாய்ப்பே இல்லையே..... கடைசியா தான கடத்தனும்.... என்றவனாக அங்கிருந்த கண்ணாடியில்.... தன் முகத்தை பார்த்துக் கொண்டான் சேண்டி... 
க்கும்..... என் முகத்த என்னாலயே கண்ணாடியில் பார்க்க முடியல..... இதுல அவனுக்கு மட்டும் எப்படி முடியும்.... அவன் ரொம்ப ரசனைக்காரனா இருக்கான்..... கண்டிப்பா என்னோட கரிச்சட்டி மூஞ்சிய எல்லாம் அவனுக்கு பிடிக்காது...... சோ இந்த ஐடியா மண்ணு தான்.... வேற  என்னவாயிருக்கும்...... என்று யோசித்துப்  பார்தவனுக்கு திடீரென ஞாபகம் வந்தது அந்த நிகழ்வுகள்...... 
அன்னைக்கு ஏதோ ஒரு கேம் ஆடினோமே.... அடிச்ச சரக்குல எதுவும் தெளிவாக ஞாபகம் இல்லை..... ஆனால் இந்த சாயா இச்... இச்ன்னு ரோகித்த கிஸ் அடிச்சி..... சிங்கிள்ஸ் பசங்க மனச உடைச்சது மட்டும் நல்லா நியாபகம் இருக்கு....  கூடவே போனை வைத்து ஏதோ பண்ணோம்ல.... என்று மண்டையை சொரிந்தவனுக்கு...... எவ்வளவு முயன்றும் நேற்று என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள முடியவில்லை....
தற்போது அவைகள் எல்லாம் அவனுக்கு நினைவுக்கு வர வேண்டுமென்றால்......  மீண்டும் அவன் சரக்கு அடிக்க வேண்டும்.... சரக்கடித்து இருக்கும் போது...... அவனுக்கு கிடைக்கும் நினைவுகள் எல்லாம் சரக்கு இறங்கியபின் மறந்துவிடும் .......அந்த நினைவுகளை மீட்க வேண்டுமானால் மீண்டும் சரக்கடிக்க வேண்டும்.... இப்போது ஒரு முழு பாட்டில் சரக்கு இருந்தால் மட்டுமே சேண்டியால்.... அன்று என்ன நடந்தது என்பதை நினைவு கூற முடியும்..... இல்லை என்றால்..... அதற்கு வேறு வழியும் உண்டு.... சாயா தூங்கிய எழுந்த பின்....  அன்று என்ன நடந்தது என்பதை தெள்ள தெளிவாக கூறினால் மட்டுமே...... இதை மேற்கொண்டு யோசித்து...... ஒரு விடையை பெற முடியும்.... என்று நினைத்தான் சேண்டி..... 
டேய் சேண்டி... மண்டையில இருந்து.... கால் நகம் வரைக்கும் உனக்கு மூளை தான்டா.... ஆனா என்ன சரக்கு அடிக்காம அந்த மூளை வேலை செய்யாது.... சரி... அது பரவாயில்லை..... என்று தோளைக் குலுக்கி கொண்டவன்...... தூங்கி விடக்கூடாது என்பதற்காக மீண்டும் மீண்டும் தண்ணீரை குடித்துக் கொண்டே இருந்தான்...... 
இதையெல்லாம் கேமிராவின் வழியாக பார்த்துக்கொண்டிருந்தான் இந்திரஜித்.... அவனது விழிகளில் சொல்ல முடியாத அளவுக்கு சோகத்தை சுமந்து கொண்டு இருந்தது..... 
இந்த உலகத்துக்கு நான் ஒரு பிஸ்னஸ் மேன்.... தோல்வியையே சந்திக்காத பிஸ்னஸ் கிங்... ஆனா எனக்கு மட்டும்தான் தெரியும் ..... நான் எவ்வளவு பெரிய கோழைன்னு..... உங்களுக்கு என்ன பெருசா அடையாளம் இல்ல,... கை நிறைய பணம் இல்ல.... நாலு பேர் மதிக்குற அளவுக்கு ஸ்டேட்டஸ் இல்ல...  ஆனா இவ்வளவு பெரிய ஸ்டேட்டஸ் என்கிட்ட இருந்தாலும்.... நீங்க சிரிக்குற மாதிரி என்னால சிரிக்க முடியல..... உங்க முகத்துல இருக்குற சந்தோஷம் எனக்கு கிடைக்கல..... இது தான் என் வாழ்க்கை... நரக வாழ்க்கை..... என்று கூறி இந்திரஜித்தின் கைகள் நடுங்கியது.... 
வேகமாக ஒரு ஓட்கா பாட்டிலை எடுத்தவன்.... அதை ராவாக தன் தொண்டைக்குள் இறக்கினான்.... பாதி பாட்டிலை காலி செய்த பின் தான் அவனது கை நடுக்கம் கட்டுபட்டது.... 
மெதுவாக மற்றொரு பாட்டிலை எடுத்தவன்..... அதை சேண்டி இருந்த அறைக்கு அனுப்பி வைத்தான்.... 
சேண்டி அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க..... அவன் கண் முன்னாகவே லிஃப்ட்டில் வந்து இறங்கியது ஒரு வோட்கா பாட்டில்... அதைப் பார்த்த சேண்டியின் கண்கள் மின்ன.... மெதுவாக நெருங்கி சென்றவன்..... அதை தன் கையில் எடுத்து... தன் கன்னத்தோடு வைத்துக் கொண்டவன்... கேமராவை நோக்கி திரும்பினான்.... 
மிஸ்டர். கிட்னாப்பர்.... நீங்க ரொம்ப நல்லவரு.... மனசால தங்கமானவரு... உங்களோட தாராள மனசு நினைச்சா... எனக்கு புல்லரிக்குது.... சேம் டைம் நான் ஒன்னும் அவ்வளவு முட்டாள் இல்ல..... என்று சீரியஸாக கூறியவன்.... தான் எடுத்த இடத்திலேயே அந்த வோட்கா பாட்டிலை வைத்தான்.... 
இந்த வோட்காவை அடிச்சா... அரை நிமிஷத்துலயே  நான் மட்டையாகிருவேன்.... அப்புறம் அந்த மேக் அப் மூஞ்சி சாயாவை நீ தூக்கிட்டு போவ.... அப்புறம் எங்கடா என் ஆளுன்னு... என்ன விரட்டி விரட்டி அடிப்பான் என் ஃப்ரண்டு..... தேவையா இதெல்லாம் எனக்கு.... இந்த வம்பே வேண்டாம்.... நீங்க ரொம்ப நல்லவரு.. சோ என்ன ரொம்ப சோதிக்காம.... இந்த வோட்கா பாட்டிலை வாப்பஸ் வாங்கிடுங்க.... என்று  தீர்க்கமாய் கூறி விட்டு  கட்டிலில் போய் அமர்ந்து கொண்டான் சேண்டி... அவன் கூறுவதைக் கேட்ட இந்திரஜித்தின் மனம் நெகிழ்ந்தது.. 
சேண்டி கேட்டுக் கொண்டதன் படியே..... வோட்காவை திரும்ப பெற்று.... இரவு முழுவதும் அவன் குடிக்க ஜூஸ் மற்றும் ஸ்நாக்ஸ் போன்றவற்றை அனுப்பி வைத்தான் இந்திரஜித்... அதைக் கண்ட சேண்டிக்கு தான் ஆனந்தத்தில் தலை கால் புரியவில்லை... 
மிஸ்டர். கிட்னாப்பர்... நீங்க பண்ணுறதெல்லாம் பார்த்தா..... கூடிய சீக்கிரமே எனக்கு உங்க மேல காதல் வந்திடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.... தயவு செஞ்சு நீங்க ஒரு  ஆம்பளைன்னு மட்டும் சொல்லிடாதீங்க..... ப்ளீஸ்..... என்றவனாக அந்த உணவுப் பண்டங்களை எல்லாம் சாப்பிட தொடங்கினான் சேண்டி...... அதில் விஷம் கலந்து இருக்குமோ என்று அவனுக்கு பயம் கூட வரவில்லை...... 
சில நேரங்களில் கெட்டவர்களை கூட நல்லவர்களாக மாற்றும் சக்தி ..... அன்புக்கு மட்டுமல்ல..... நம்பிக்கைக்கும்  உண்டு..... என்பதை முழுமையாக நம்புபவன் இந்த சேண்டி..... அந்த எண்ணம் தான் தங்களை நன்றாய் பார்த்துக் கொள்ளும் கிட்னாப்பரை கூட நேசிக்க வைத்தது..... 
அந்த இரவில் ஜெரோம் மற்றும் ஜோயல் கண் விழித்து கத்திக் கொண்டிருக்க.... மாத்திரைகளின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ரோகித்.... 
****
ஏலேய்.... யாருல என்ன தூக்கிட்டு வந்தது..... எதுக்குல என்ன கயிறால கட்டி வைச்சிருகிங்க..... என்ன அவிழ்த்து விடுங்கல.....  எங்க வீட்டு ஆயா என்னைய தேடும்ல.... என்று கத்தி கத்தி அழுது கொண்டிருந்தான் ஜெரோம்....

மரணம் வரும் நேரம் எது?Where stories live. Discover now