அத்தியாயம் 14 (போகாதீங்க)

18 0 0
                                    

திடிரென இந்திரஜித்திடம் ஏற்பட்ட மாற்றங்களை அனைவரும் பீதியில் உறைந்து போய் நின்றனர். சில நொடிகளுக்குள்ளாகவே அவனுள் இருந்த மரண ராட்சசன் விழித்து கொண்டதை தங்களது கண்ணால் பார்த்த பின்னும் இந்திரஜித் கூறியதை நம்பாமல் இருக்க முடியுமா என்ன?
"மச்சான் ஜோ, இவருக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் இருக்குடா. ஒருத்தர் இந்திரஜித், இன்னொருத்தர் தான் இந்த மரணம். நம்மளை கொல்ல ஸ்கெட்ச் போடுறது அந்த மரணம் தான்.  இந்திரஜித் அது கிட்டயிருந்து நம்மை காப்பாற்ற முயற்சி பண்றாரு. உண்மையான இந்திரஜித் ரொம்ப நல்லவருடா. இந்த ராட்சசன் தான் நம்மை கொல்ல நினைக்கிற கொலைகாரன்." என்று ஒரு வழியாய் நடந்துகொண்டிருக்கும் மர்மங்களின் விடை அறிந்துகொண்டான் ரோகித்.
"நடந்துட்டு இருக்கிற விஷயங்களை எல்லாம் என்னால புரிஞ்சுக்கவே முடியலடா. மண்டை வெடிச்சிடும் போல இருக்கு." என்று கூறியவனாக  ஒரு முலையில் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் சேண்டி. அவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
"மச்சான் அதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா, இவர் நம்மளை மட்டுமல்ல நம்மை மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களை அடைச்சு வச்சிருக்காரு. நம்மை எல்லாரையும் அந்த மரண ராட்சசன் கிட்ட இருந்து காப்பாற்றுவது போல, நிறைய பேரை காப்பாற்றி இருக்காரு." என்று கூறிய ஜெரோமின் விழிகள் மரண பீதியால் நிறைந்திருந்தது.
"எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. எப்படியாவது இங்கிருந்து உயிரோடு போயிட்டனும்." என்ற சாயாவுக்கு பயத்தில் அழுகையே வந்தது.
பயத்தில் அழுத சாயாவை சட்டென இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான் ரோகித்.
"பேபி, நான் உன்னோட இருக்கும் போது இந்த சைக்கோ மட்டுமில்ல, எப்பேற்பட்ட சைக்கோவும் உன்ன நெருங்க முடியாது. நான் நெருங்க விடமாட்டேன்." என்று கூறிய வார்த்தைகளில், சற்றே ஆறுதல் அடைந்தாள் சாயா.
"எனக்கு தெரியும் பேபி. நீ எப்போதும் எனக்காக இருப்ப. ஆனா நம்ம யாருக்கும் எதுவும் ஆகிட கூடாதுடா. அது தான் என்னோட கவலை." என்று கூறிய சாயாவை தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் ரோகித். 
இவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மரண ராட்சசனோ வெடித்து சிரித்தான். அவனது கோரமான சிரிப்பொலி சுவர்களில் பட்டு எதிரொலித்தது.
"தப்பிக்க போறீங்களா, அதுவும் என்கிட்ட இருந்து தப்பிக்க போறீங்களா" என்று கூறி மீண்டும் சாத்தானைப் போல் அவன் சிரிக்க, அவனது கண்களோ கோவைப்பழமாய் சிவந்து போயிருந்தது. மரண பயத்தை கொடுக்கும் கர்ண கொடூரமான அவனது சிரிப்பில் உறைந்து போய் நின்றனர் ஐவரும். 
"மச்சான் எவ்வளவு தான் வெளியில கெத்த மெயிண்டெயின் பண்ணினாலும், இவன் சிரிக்குறத கேட்டா உள்ளுக்குள்ள உதறல் எடுக்குதுடா" என்ற சேண்டி எச்சிலை விழுங்கினான்.
ஜோயலுக்கு தான் தன் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. 
"யோவ் மெண்டாலா உனக்கு? இல்ல பைத்தியம் புடிச்சிருக்கா? இதோ பார். எங்கள எதுக்கு கடத்திட்டு வந்த? அத சொல்லு முதல்ல" என்று பல்லிட்டுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினான் ஜோயல்.
ஜோயலின் வார்த்தைகளை கேட்ட அந்த மரண ராட்ச்சனின் விழிகளில் ஒரு வன்மம் தீயாய் தகித்தது.
"எல்லாரும் சாகனும். இந்த உலகத்துல எல்லாரும் மரணத்தை நினைச்சி நினைச்சி பயந்தே  சாகனும். வாழ ஆசைப்படுற இந்த உலகத்துக்கு மரணத்தை பிடிக்குறதே இல்ல. ஏன் இவங்களுக்கு என்னை பிடிக்கல? ஏன் என்னை நினைச்சி இவங்களுக்கு பயம் இல்லை? இந்திரஜித் மாதிரி எல்லாரும் என்னை நினைச்சி பயப்படனும். மரணம் வந்துடுமோன்னு ஒவ்வொரு நொடியும் பயந்து பயந்து வாழனும். அது தான் எனக்கு வேணும். மனிதர்களோட பயம் தான் என்னோட சக்தி. நான் வாழ மனிதர்களோட பயம் வேணும். மரணத்தை நினைச்சி பயப்படாதவங்களை எல்லாம் நான் சிறைப்படுத்துவேன். அவங்கள சித்ரவதை செய்வேன். அவங்க கண்ணுல எனக்கான பயத்தை நான் பார்க்குற வரைக்கும் அவங்க அணு அணுவா வதைப்பேன்." என்று கூறிய அந்த மரண ராட்ச்சனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்தது. அப்படியே மீண்டும் மயக்கமானான் இந்திரஜித்.
"போச்சுடா, மறுபடியும் மயங்கிட்டாரு" என்று ஐந்து பேரும் ஆளுக்கொரு பொஷிஷனில் அமர்ந்து விட்டனர். 
காலை போய் மதியமும் வந்தது. காலையிலேயே இந்திரஜித் இங்கு வந்து விட்டதால், காலையில் அவர்கள் இன்னும் சாப்பிடவில்லை. மதியமும் வந்துவிட பசியால் வயிறு சத்தமிட துவங்கியது.
"என்னோட வயிறு சாப்பாடு சாப்பாடுன்னு கூப்பாடு போடுதுடா மச்சான்" என்று புலம்பவே துவங்கி விட்டான் சேண்டி.
"ஏலேய், சேண்டி உன் வாழ்க்கையில சாப்பாடு தவிர முக்கியமான விஷயம் எதாவது இருக்காடா?" என்று சோர்ந்த குரலில் கேட்ட ஜெரோமுக்கு, பசியில் காது அடைத்தது.
"டேய் நன்பா, எனக்கு சாப்பாட்டை விட முக்கியமான விஷயம்ன்னா அது என் நன்பர் பெருமக்கள் தான். சாப்பாடுல்லாம் அதுக்கு அப்றம் தான்டா." கண்களை மூடியவாறே சுவரில் சாய்ந்து கொண்டான் சேண்டி. 
நன்பர்களின் குறும்பு பேச்சுகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகித்தோ, மெலிதாய் சிரித்துக் கொண்டான். 
இந்திரஜித் மயங்கியிருக்கும் அந்த நேரத்தை பயன்படுத்தி எதாவது செய்யலாமே என்ற திட்டத்தை தன் மனதில் கொண்டவனாய் எழுந்து நின்றான் ரோகித். அவன் எழுந்ததுமே அனைவரும் அவனை கேள்வியாய் பார்க்க, ரோகித்தின் பார்வையோ அந்த மரண ராட்ச்சன் திறந்து கொண்டு உள்ளே வந்த கதவில் தான் நிலைத்திருந்தது. மேலும் அந்த கதவு இன்னும் திறந்திருந்தது.
"காய்ஸ். சும்மா உட்கார்ந்துட்டு இருந்தா ஒரு வேலையும் நடக்காது. எனக்கும் சும்மா இருந்து போர் அடிக்குது. கமான் காய்ஸ், சும்மா எங்கேயாச்சும் போய் சுத்தி பார்த்துட்டு வரலாம்." என்று கூறிய ரோகித் யாருடைய பதிலையும் எதிர்பாராதவனாய் திறந்திருந்த கதவின் வழியாய்  செல்ல, அனைவரும் அவனை பின்தொடர்ந்து சென்றனர்.
அந்த கதவினுள் நுழைந்ததும் ஒரு படிக்கட்டு மேலே செல்ல, அதன் வழியாய் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக கொஞ்சம் கலக்கத்துடன் ஏறினான் ரோகித். அவனை பின்தொடர்ந்து சென்றனர் அனைவரும்.
படிக்கட்டுகள் முடிவடைய, ஒரு அலமாரியின் உள்ளிருந்து வெளியே வந்தவர்களை வரவேற்றது  ஒரு அழகான மாஸ்டர் பெட் ரூம். அதின் நளினமும் அலங்காரமும் அனைவரின் கண்களையும் கொள்ளை கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். 
"டேய் மச்சான். என்ன தான் அந்த ஆளு சைக்கோவா இருந்தாலும், ரசனைக்காரருடா" என்றனாய் அந்த அறையின் அலங்காரங்களையும், அதற்கு சொந்தக்காரனையும் புகழ்ந்து தள்ளினான் ஜோயல்.
"இங்க இருந்து வெளியே போக முடியுமான்னு பார்க்கலாம். எப்படியும் வெளியே பாதுகாப்பு பலமா இருக்கும்." என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவனாய் ஜன்னல் பக்கமாகப் போய் பார்த்தான் ரோகித்.
அவனது கண்கள் கண்ட காட்சியில் அவனையும் அறியாமல், அவனது வாய் முனுமுனுத்தது.
"வாவ். இந்த சீன் சூப்பரா இருக்குடா" என்று அந்த இயற்கையில் அழகில் இலயித்தவனாய் ரோகித் கூற மற்றவர்களும் வந்து அந்த கண்கொள்ளா காட்சியை கண்டனர்.
அந்த மாளிகையின் உச்சியில் அமைந்திருந்த அறையிலிருந்து பார்க்கும் போது, பழம் பெருமை வாய்ந்த மரங்கள் எல்லாம் அவர்களுக்கு கீழாக இருந்தது. அடர்ந்த மரக்கிளைகள் கீழே நடப்பது அனைத்தையும் கச்சிதமாய் மறைத்திருந்தது. 
"டேய் மச்சான் இவ்வளவு நாள் சுவரையே பார்த்துட்டு இருந்து, நம்ம வாழ்க்கையில நாலு வாரத்தை வீணாக்கிருக்கோம் மச்சான்." என்று கூறிய சேண்டியின் விழிகள் இயற்கையின் எழிலை விட்டு அகலவே இல்லை.
"சரியா சொன்னடா சேண்டி. அந்த சைக்கோ பய, அந்த இடத்துல நம்மள அடைச்சி போடாம, இந்த மாதிரி சூப்பரான இடத்துல நம்மள அடைச்சி வச்சிருந்தான்னு வச்சிக்கோயேன். நானெல்லாம் நிரந்தரமா இங்கேயே டாரா போட்ருவேண்டா. என்ன அழகு? எத்தனை அழகு? இதையெல்லாம் ரசிக்க ஆயிரம் கண்ணு போதாதுடா." என்ற ஜோயலின் விழிகள் இயற்கையில் எழிலில் சொக்கிப் போய் கிடந்தன.
"இப்போவும் ஒன்னு கெட்டு போகலாடா. வெளியே போய் என்ன பண்ண போறோம். பேசாம இங்கேயே இருந்துடலாம். இந்திரஜித் ஒரு பாதி மிருகமா இருந்தாலும் மறு பாதி மனுஷனா தானே இருக்காரு. அவர ஈஸியா சம்மாளிச்சிடலாம்டா." என்று ஜெரோம் கூற, அவனைவரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
"ஹேய் ஜெரோம். இத நீயா சொல்லுற. எனக்கு தெரிஞ்சி நீ அந்த இந்திரஜித்தோட வெறியாட்டத்தைப் பார்த்து இரண்டு தடவை உன்னோட பேண்டுலயே உச்சா போனவன் தானா நீ. நீயே இப்படி பேசுறத என்னால நம்பவே முடியலடா!" என்று தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சாயா கூற, அனைவரும் ஜெரோமை கேலியாக பார்த்தனர்.
அனைவரும் தன்னை கேலியாய் பார்ப்பதை கண்ட ஜெரோம் தன் மூக்கு விடைக்க சாயாவை முறைத்தான். 
"நீயெல்லாம் ஒரு தோழியா? ஷிட். என் மானத்தை வாங்க வேறு யாரும் வர வேண்டாம். நீங்களே போதும்டா. என் ஒட்டு மொத்த மானத்தையும் கப்பலேத்த." என்று குழந்தை போல் முகத்தை தூக்கிக் கொண்டு அமர்ந்தான் ஜெரோம். 
"அச்சோ, மச்சான் நீ கவலப்படாதடா. உனக்கு நான் ஹக்கீஸ் வாங்கி தரேன்." என்று தன் ஒரு கையை ஜெரோமின் தோளிலும், மற்றொரு கையை தன் நெஞ்சிலுமாக வைத்து, வெகு தீவிரமான முகபாவனைகளோடு சேண்டி கூற, அனைவரும் வயிறு வலிக்க சிரித்தனர்.
அனைவரும் தன்னைப் பார்த்து சிரிப்பதைக் கண்ட ஜெரோம் மேலும் தன் முகத்தை திருப்பிக் கொண்டான். அவன் அவ்வாறு குழந்தை போல் கோபித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டு, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தன் நன்பர்களே ஆனாலும் தன்னை அவர்கள் கேலி செய்வதில் அவனுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. 
"டேய் என்ன பார்த்து எல்லாரும் சிரிக்குறீங்கடா. நல்லா சிரிங்கடா, நல்லா சிரிங்க. எனக்கும் ஒரு காலம் வரும்டா. அன்னைக்கு நீங்க எல்லாரும் நடுங்குவீங்க. ஆனா நான் தைரியமா நிற்பேன். அன்னைக்கு நான் உங்கள பார்த்து சிரிப்பேன்டா." என்று வீர வசனம் பேசிய ஜெரோம் மீண்டும் தனது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான். அவன் யாரிடமும் பேசவில்லை. முகத்தைத் தூக்கிக் கொண்டு, உர்ரென அமர்ந்திருந்தான். தான் கோபமாக இருப்பதை பிறருக்கு  வெளிப்படுத்தும் பொருட்டு அவன் செய்தவைகள் எல்லாம் அவனை குழந்தைபோல் எடுத்துக்காட்ட, அவனது கோபத்தை ரசித்து நின்றனர் அவனது தோழர்கள்.
"அட மச்சான், என்னடா இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகுற." என்று சேண்டி அவன் தோள் மீது கையை போட தட்டிவிட்டான் ஜெரோம்.
"டேய் என்னடா என் கையை தட்டி விடுற? அவ்ளோ தானடா நம்ம நட்பு. உன்ன நன்பனா நினைச்சி தானடா உரிமையா கேலி பண்ணினோம். ஆனா அந்த உரிமை உங்களுக்கு இல்லன்னு நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி எங்களுக்கு உணர்த்திட்டடா. எனி வே, நீ எங்கள நண்பனா நினைக்காவிட்டாலும்  நாங்க எல்லாரும் உன்ன எங்களோட நண்பனா தான் பார்க்கிறோம். நீ சந்தோஷமா இருடா மச்சான்." என்று உணர்ச்சி பொங்கக் கூறிய சேண்டி சோர்ந்த முகத்தோடு எழுந்திருக்க சட்டென அவனை பிடித்துக் கொண்டான் ஜெரோம்.
"ஏலேய் சேண்டி. உண்மையிலயே எனக்கு கோபம் வரலடா. நான் சும்மா தான் நடிச்சேன். நீ டென்ஷன் ஆகாதடா. இங்க பாரு நான் கோபப்படல." என்று தனது 32 பற்களையும் காட்டி சிரித்தான் ஜெரோம்.
"நன்பேன்டா" என்று தானும் மார்தட்டிக் கொண்டவனாய் ஜெரோமை அணைத்துக் கொண்டான் சேண்டி.
"அப்பாடா இந்த பயப்புள்ளைய சமாதனப்படுத்த என்னாமா ஆக்ட் பண்ண வேண்டியது இருக்கு!" என்று உள்ளுக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டான் சேண்டி. சேண்டியின் மைண்ட் வாய்ஸை உணர்ந்தவர்கள் போல் மற்றவர்கள் சிரிக்க, நல்ல வேளையாக அதை ஜெரோம் காணவில்லை.
நன்பர்கள் எல்லாம் உற்கமான மனநிலையில் இருக்க, தட்டு தடுமாறியவனாய் அந்த அலமாரியிலிருந்து வெளியே வந்து விழுந்தான் இந்திரஜித்.
"போகாதீங்க, போகாதீங்க" என்று முகம் வெளிறியவனாய் கத்திக் கொண்டே விழுந்த இந்திரஜித்தை அனைவரும் திகிலுடன் பார்க்க, இந்திரஜித்தோ எழுந்து நிற்க கூட வலுவற்றவனாய் தரையில் கிடந்தான்.
மரணம் வரும்
அன்புடன்
எபின் ரைடர்
 

மரணம் வரும் நேரம் எது?Where stories live. Discover now