19

97 10 13
                                    

வலியை தரும்
உந்தன் நினைவுகளை
தூக்கி எரிய
ஆசைப்படுகிறேன்
உன் நினைவுகளை
அழித்து எரித்து விட
ஆசைப்படுகிறேன்
ஆனால்
வலியை தாங்கும்
வல்லமையை,
உன் நினைவுகள்
எனக்குத் தந்ததை
எண்ணும் போது
எங்கனம் அதை
தூக்கி எரிவேன்??
அழித்து எரித்துவிடுவேன்??

உன் நினைவுகளுக்கான
சக்தி மாயமாய்
மறைந்து விட்டதா
என்னுள்?
உன் நினைவுகளால்
நான் அனுபவிக்கும்
வேதனைக்குத்தான்
சக்தி அதிமாகிவிட்டதா
என்னுள்?

இன்று நான் படும்
வேதனையை - அன்று
நான் அறிய பெற்றிருந்தால்
நான்
என் இதயக்கல்வெட்டில்
உன் நினைவுகளை
அழகாய் செதுக்கி
பொக்கிஷப்படுத்தி
வைத்திருக்க மாட்டேனே..
நீயும் அழியாச்
சிற்பமாய் மாறி
இருக்க மாட்டாயே..
என்னை
சித்திவதை செய்யும்
ஒரு ஆயுதமாக
உன் நினைவுகளும்
மாறி இருக்க மாட்டாதே..

இதயத்தின் உணர்வலைகள்...Where stories live. Discover now