சென்னையின் மிக பிரலமான அந்த சூப்பர்மார்க்கெட்டில் தனக்கு வேண்டிய பொருட்களை கவனமாக தேடிக்கொண்டிருந்தாள் நந்தினி. தன்னுடைய டிராலியை தள்ளிக்கொண்டு முன்னே செல்கையில் வேறு ஒருவருடைய டிராலியில் தெரியாமல் இடித்துவிட்டு பதற்றத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் அங்கே தன் உயிர் தோழி லலிதா வை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.
இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்த தோழிகள் அனைவரும் இவர்களை இரட்டையர்கள் என்றே அழைப்பர்.ஆனால் காலங்கள் செல்ல செல்ல இருவரும் தங்களின் தொடர்பை நீடிக்க முடியவில்லை. ஐந்து நெடிய ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தான் இருவரும் சந்திக்கின்றனர்.
லலிதா," நந்து எப்படி இருக்க ? நீ தானா இது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? உன்னை பார்த்து எவ்ளோ வருஷமாச்சு?" தொலைந்த நட்பு மீண்டும் கிடைத்த சந்தோஷம் முகத்தில் பிரதிபலிக்க கேட்ட தன் தோழியை அதே உற்சாகத்துடன் நோக்கிய நந்தினி, "நான் நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்க? உன்னோட கல்யாணத்துக்கு வர முடியலை .உன்னை பத்தி சொல்லு , இப்ப எங்க இருக்க?"
" பராவாயில்லைடா. நான் நல்லா இருக்கேன் , சந்தோஷமா இருக்கேன் .இப்ப மும்பை ல தான் தங்கிருக்கேன். லீவுக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்.ஒரு பையன் 3 வயசாகுது. நீ சொல்லுடா உன்னை பத்தி. உனக்கு கல்யாணமாயிடுச்சா ? உன்னவர் எப்படி இருக்காரு?" என்று கேலியுடன் வினவினாள் லலிதா.
துணிகொண்ட துடைத்தது போல் நந்தினியின் சிரிப்பு டக்கென்று நின்றது.தன் தோழி அறியா வண்ணம் தன் முகத்தை மறைத்தவள் அமைதியாக ," எனக்கும் அவருக்கும் கல்யாணமாகி 4 வருஷம் முடிஞ்சிருச்சு, 2 வயசுல ஒரு பொண்ணு இருக்கா,நாங்க இங்க சென்னைல தான் இருக்கோம். சரி எனக்கு லேட் ஆகிடுச்சு நான் அப்பறமா உன்கிட்ட மொபைல பேசுறேன். "
வேகவேகமாக செல்பேசி எண்களை மாற்றிக்கொண்டு அவ்விடம்விட்டு நகர்ந்த தன் தோழியை கண்ட லலிதாவிற்கு அவளது நிலைகண்டு குழப்பம் பிறந்தது.தன் தோழியை புரியாமல் பார்த்துக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
YOU ARE READING
ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)
Short Storyஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு. ...