"அதிகாலை நிலவே... அலங்காரச் சிலையே...
புதுராகம் நான் பாடவா...இசைத்தேவன் இசையில்... புதுப்பாடல் துவங்கு... எனையாளும் கவியே... உயிரே...
அதிகாலை கதிரே... அலங்காரச் சுடரே...
புதுராகம் நீ பாடவா...""ஹலோ... ப்ளூ சுடிதார்! உன்னைத்தான், ஹேய்..." என்று கைத்தட்டி யாரோ உரக்க அழைக்கும் சத்தம் கேட்டது.
மெய்மறந்து ஜானகியின் குரலில் லயித்திருந்தவளை அந்த குரல் கலைத்தது.
அலுவலகம் முடிந்து ஒரு காதில் இயர்போனை மாட்டிக் கொண்டும், மறுகாதால் சாலையை கவனித்து கொண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தவள், அவன் குரலில் குனிந்து தன்னையே பார்த்துக் கொண்டாள்.
'நான் தான் ப்ளூ சுடி போட்டிருக்கிறேன், அப்பொழுது... அவன் என்னை தான் அழைக்கின்றானா?' என்று புருவம் சுளித்தபடி திரும்பி அவனை பார்த்தாள்.
ரோட்டின் மறுபுறம் நின்றிருந்தான் அவன்.
அவள் தன் புறம் திரும்பியதும், வேகமாக கைகளை ஆட்டியவன் உரக்கப் பேசினான்.
"ஹேய்... உனக்கு முன்னால் ஒரு பெரியவர் ஆட்டோவில் ஏற போகிறார் பார்... சீக்கிரம் அவரை கூப்பிடு. ப்ளீஸ்... ரொம்ப ரொம்ப எமர்ஜென்ஸி!" என்று சாலையை கடந்து வர இருபுறமும் பார்வையிட்டுக் கொண்டே அவசரமாகச் சொன்னான்.
அவன் குறிப்பிட்ட நபரை திரும்பி பார்த்த பிரக்யா திகைத்தாள். காரணம்... அவர் டிரைவரிடம் பேரம் பேசி முடித்து ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தார்.
'ஐயோ... இப்பொழுது அவரை எப்படி தடுத்து நிறுத்துவது? அருகில் செல்வதற்குள் ஆட்டோ கிளம்பி விடுமே!' என்று டென்ஷனில் விரல்களை சொடுக்கெடுத்தாள்.
அவள் அப்படியே அசையாமல் நிற்கவும், "ஏய்... சீக்கிரம் கூப்பிடு, அவர் பெயர் கணபதி!" என்று கத்தினான் அவன்.
ரோட்டில் ஹெவி டிராபிக், இருக்கின்ற வாகன நெருக்கடியில் அவனால் உடனே கடந்து வர இயலவில்லை.
YOU ARE READING
சிறுகதைகள் தொகுப்பு
Randomஎன் சிறுகதைகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் தொகுப்பு. சிறுகதைகள் தான் என்றாலும் என் மனதில் அக்கதை தொடர்பாக தோன்றும் கற்பனைகளை பொறுத்து சற்று விரிவாக தருகிறேன்.