எங்கே எனது கவிதை - 4

345 49 43
                                    

"அச்சோ... இல்லை வேண்டாம் வேண்டாம், இதற்கு மேலும் என்னை எதுவும் திட்டி விடாதீர்கள் என்ன விவரம் என்பதை முழுவதுமாக சொல்லி விடுகிறேன். நான் உங்களை பற்றி விசாரித்தது என் பெரியம்மாவிற்காக தான்!" என்று ஹாசினி தெளிவாக எடுத்துரைத்தாலும், பாவம் ராமச்சந்திரன் தான் முன்னிலும் மோசமாக குழம்பி போனார்.

"ஏய் ஹாசினி... எதற்கு என்னை இப்படி போட்டு படுத்துகிறாய்? என்ன தான் பிரச்சினை உனக்கு?" என்றார் எரிச்சலுடன்.

"இது அவசரமாக பேசுகிற விஷயமும் இல்லை கோபத்தோடு இருக்கும் பொழுது தீர்மானிக்கிற விஷயமும் இல்லை. இதை பொறுமையாக தான் பேச வேண்டும், நான்... சரி ஒன்று செய்கிறேன். இது தொடர்பான விவரங்களை உங்கள் மெயில் ஐடிக்கு அனுப்புகிறேன். நீங்கள் கோபமெல்லாம் குறைந்து மனதில் அமைதி நிலவும் பொழுது படித்து பாருங்கள் ப்ளீஸ்... தயவுசெய்து தவறான கண்ணோட்டத்தில் தொடங்காமல் நல்ல விதமாக யோசித்து பாருங்கள். தாங்க் யூ சார்!" என ஓடி விட்டாள்.

பற்ற வைத்த சரவெடி கணக்காக படபடவென்று வெடித்து விட்டு ஓடியவளை மலைப்புடன் பார்த்த ராம், தந்தியில் வரும் செய்தி கணக்காக பெரியம்மா திருமணம் என கூறி சென்றவளின் எண்ணத்தை மெதுவாக ஊகித்தறிந்தார்.

இத்தனை வயதிற்கு மேல் தனக்கென்று ஒரு திருமணமா என மனதில் சலிப்புடன் எண்ணியவர், இது தொடர்பாக அவள் மீண்டும் பேசினால் ஒரே முடிவாக வேண்டாம் என்று மறுத்து விடலாம் என முடிவு செய்தார்.

மறுநாள் ராம்மை ஆவலுடன் எதிர்கொண்ட ஹாசினி, வழக்கம் போல் பாடத்தில் சந்தேகம் என்ற போர்வையில் அவருடைய அறையில் தனிமையில் சந்தித்து முடிவை வேண்டினாள்.

முதல் நாள் மறுத்து விடலாம் என தன் முடிவில் தெளிவாக இருந்தவர், ஹாசினி தன் பெரியம்மாவை குறித்து அனுப்பிய கட்டுரையில் சற்று குழம்பி போயிருந்தார்.

ஒரு வயதிற்கு மேல் ஆணோ பெண்ணோ தங்கள் மனதிலிருப்பதை பகிர்ந்து கொள்ளவும்,தங்கள் தனிமையை போக்கி கொள்ளவும் எந்த சார்புமின்றி தங்களுக்கு மட்டுமே என ஓர் உறவு இருப்பது அவசியம் என்று சமீப காலமாக தோன்றினாலும் திருமண வயதை தாண்டி விட்டதால் அதை பற்றி மேலே யோசிக்காமல் முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தார் அவர்.

சிறுகதைகள் தொகுப்புDonde viven las historias. Descúbrelo ahora