ஞாபகம் வருதே - 2

579 68 98
                                    

மனக்குழப்பம் தெளிந்து தீபிகா பிரகாஷிடம் நார்மலாக பேச ஆரம்பித்தாள்.

அவ்வப்பொழுது ஆன் டியுட்டி, அஃபிஷியல் ஒர்க் என்று மாதம் இருமுறை இடைப்பட்ட மூன்று மாதத்தில் ஏதாவது ஒரு சாக்கு சொல்லியபடி தீபிகாவை வந்து நேரில் பார்த்துச் சென்றான் பிரகாஷ்.

சூழ இருந்தோர் கேலியில் தீபிகாவிற்கு தான் வெட்கமாக போயிற்று. வருபவனும் அமைதியாக இல்லாமல் தன் இயல்பான பழக்கத்தால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டான்.

நாட்கள் வேகமாக பறந்து, திருமணம் முடிந்து இதோ ஹனிமூனுக்கு ஊட்டி வரை வந்து விட்டார்கள்.

முதல் நாள் முழுவதும் ஒருவர் கரத்தோடு மற்றவர் கோர்த்துக் கொண்டு ஊட்டியை சந்தோசமாக சுற்றி வந்தனர்.

மறுநாள் ரோஸ் கார்டனில் அமர்ந்து பேசி கொண்டிருந்த பொழுது... திடீரென்று பிரகாஷ், "ஹேய் தீபு.. உன்னிடம் ஒன்று சொல்ல மறந்து விட்டேனே..." என்றான் வேகமாக.

அவன் வேகம் கண்டு சிரித்தபடி, "என்ன?" என்று கேட்டாள் .

"ம்... நான் யு.ஜி படித்துக் கொண்டிருந்த பொழுது வனிதா என்று ஒரு பெண்ணை காதலித்தேன்!" என்றான் கூலாக.

அதுவரை இருந்த சந்தோசமெல்லாம் சட்டென்று வடிந்தது போல் இருந்தது தீபிகாவிற்கு.

அவள் மனம் வாடியது, அவனுக்கு தெரியாமல் வெளியில் அமைதி காத்தாள்.

அவனோ உற்சாகமாக தன் வழக்கமான சுயவரலாற்றை!!! சொல்வது போல் இதையும் சொல்லிக் கொண்டிருந்தான்.

"அவள் எங்கள் குவார்டர்ஸில் தான் இருந்தாள். என் பிரெண்டு அவள் பிரெண்டை காதலித்தான். அதனால் நாங்கள் இருவரும் அவர்கள் இருவரோடு துணைக்கு ஒன்றாக சுத்துவோம். அப்படிதான் எங்களுக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு ஆறு மாத காலம் நான்கு பேரும் ஒன்றாக சுற்றி திரிந்தோம். அதன் பிறகு அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்து நாங்கள் வேறு ஊருக்கு சென்று விட்டோம். நான் அந்த ஊரிலேயே பி.ஜி. ஜாயின் பண்ணிட்டேன். முதல் இரண்டு மாதம் வனிதாவிடம் மொபைலில் வாரம் இருமுறை பேசி கொண்டிருந்தேன். பிறகு திடீரென்று அவளுடைய நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை... நாட் இன் யூஸ் என்று வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... ஒரு மாதம் கழித்து என் நண்பனிடம் அவளைப் பற்றி விசாரித்தேன். அதற்கு அவன், அவள் உனக்கு வேண்டாம் மச்சான்! அவள் கேரக்டர் சரியில்லை... வேறு ஒருவனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்றான். சரியென்று நானும் விட்டு விட்டேன். அப்பொழுது முடிவு செய்தேன்... இனி என் வாழ்வில் திருமணம் என்றால் அது அப்பா அம்மா பார்க்கும் பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று!" என்றான் நீண்ட விளக்கமாக.

சிறுகதைகள் தொகுப்புDonde viven las historias. Descúbrelo ahora