எங்கே எனது கவிதை - 2

309 45 44
                                    

"ம்... இன்று ஏதோ புதுப்படம் ரிலீசாகிறது போலிருக்கிறது... நேற்றே அதற்கு போக வேண்டும் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள், அநேகமாக அதற்கு போயிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்!"

"நீங்கள் போகவில்லையா?"

" ப்ச்... இன்ட்ரஸ்ட் இல்லை..." என்று தோள்களை குலுக்கியபடி டீயை அருந்தினாள் சித்ரா.

"உங்களுக்கு வேறு எதில் இன்ட்ரெஸ்ட் இருக்கிறது?" என்று அமைதியாக கேட்டாள் ஹாசினி.

ம்... என்று சற்று நேரம் யோசித்தவள், "ப்ச்... அப்படி எதுவும் தோன்றவில்லை!" என்றாள் சலிப்புடன்.

"இதை நான் எதிர்ப்பார்த்தேன்!"

"எதை?" என்று சித்ரா புருவம் சுருக்கினாள்.

"உங்கள் சலிப்பை... ஏன் என்றால் உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்க்கையின் மீது சுவாரஸ்யம் இருக்கும். நீங்கள் தான் மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே... அப்புறம் எப்படி எதிலும் ஆர்வம் இருக்கும்? பார்ப்பவை எல்லாம் விரக்தியையும், சலிப்பையும் தான் தரும்!" என்றாள் நேரடியாக.

"ஹாசு..." என்று சித்ரா திகைப்பாய் பார்க்க.

"என்ன உண்மை திகைப்பை தருகிறதா? உங்களை சுற்றியுள்ளவர்கள் தாத்தா, பாட்டி, அம்மா, சித்தி என்று அனைவரும் தங்களின் சுயநலத்திற்காக உங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்!" என்றாள் காட்டமாக.

"அதில் அவர்கள் தவறு எங்கிருந்து வந்தது? எனக்கென்று யாருமில்லை என்பதால் எதிர்பார்க்கிறார்கள்!" என்றாள் அமைதியாக.

"ஓ... சரி, அந்த தனிமையை கொடுத்தது யார்?"

"என் ஜாதக தோஷம்!"

"மண்ணாங்கட்டி... ஏன் இப்படி ஏமாளியாக இருக்கிறீர்கள்? திருமணம் ஆன அனைவரும் என்ன சுத்த ஜாதகம் உள்ளவர்களா? என் அம்மா தன் பதினேழாவது வயதிலேயே என் அப்பாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார், உங்களுக்கும் அவங்களுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசம். சித்தியும் விவரமாக வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள், நீங்கள் மட்டும் தான் இப்படி... பாட்டி, தாத்தாவும் தங்கள் வசதிக்காக உங்களுக்கென்று எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டு விட்டார்கள்!" என்றாள் ஹாசினி கோபமாக.

சிறுகதைகள் தொகுப்புOnde histórias criam vida. Descubra agora