வருணிடம் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தவன் பேச்சு வாக்கில் தன் சிறு வயது பற்றியும் பேச தன் தாயின் நினைவு வந்தது.அங்கு தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டவன் வீட்டிற்கு வந்து ஆதிரா உறங்கியப் பின் இரண்டு வருடங்களாக திறக்கப்படாத அறையில் அடைந்துக்கொண்டான்.
கட்டிலில் தன் அன்னையின் புடவையை விரித்து அதை அனைத்தபடி அழத் தொடங்கினான்.எவ்வளவு நேரம் அழுதான் என்று தெரியாது.சத்தம் கேட்டு ஆதிரா விழித்துவிட கூடாது என மொட்டைமாடிக்குச் சென்றான்.
.
.
.அவனிற்கு தன் உணர்வுகளை யாருடனும் பகிர்ந்துக் கொள்ள விருப்பம் இல்லை.
அவளின் வார்த்தை ஆறுதலாக இருந்தாலும் பரிதாபத்தை சம்பாதித்துக் கொண்டோமோ எனத் தோன்றியது.அதை அவன் விரும்பவில்லை.எப்பொழுதும் போல் காலையில் தன் ஆபிஸிற்கு கிளம்பியவன் ஆதிரா கிளம்பாமல் இருக்க.
"நீ ஹாஸ்பிட்டல் போலையா."... என வினவினான்.
"போல வீட்ல ஒரு வேலை இருக்கு அதான்."...என்றதும்...
"ஹோ .., நான் கிளம்புறேன் "...என்றவன் விடைப்பெற்றுக் கொண்டான்.
அவனை எவ்வாறு சரி செய்வது என யோசித்துக் கொண்டிருந்தாள்
திடீரென அவனிடம் முன் போல் இல்லாமல் சகஜமாகப் பழகினால் அது பரிதாபத்தினால் தான் என தவறாகப் புரிந்துக் கொள்வான். சற்று நிதானமாகத் தான் அடியெடுத்து வைக்கவேண்டும் என முடிவெடுத்தாள்.அந்த அறையை சுத்தம் செய்தவள் செல்வியின் போட்டோ ஒன்றை பூஜை அறையில் வைத்து மாலையிட்டு விளக்கேற்றினாள்.
சக்தியும்,செல்வியும் இருக்கின்ற போட்டோவை இன்னொரு பிரின்ட் எடுத்து அதை ஹாலில் மாட்டினாள்.ஆபிஸிற்குச் சென்றவன் எப்பொழுதும் போல வருணின் கிண்டல் கேலிகளை வாங்கிக்கொண்டு கணினியில் தலையை நுழைத்துக் கொண்டான்.
தன் போக்கில் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சட்டென ஆதிராவின் முகம் அவன் நினைவில் வந்துப் போனது.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்