மதன் என ஆதிரா உச்சரித்த அடுத்த நொடி நிஷாவின் கண்ணில் கண்ணீர் குளமெனத் தேங்கியிருந்தது.
நிஷா எதுவும் பேசாமல் அப்படியே சிலைப்போல் அமர்ந்திருக்கவும் ஆதிரா பேசத் தொடங்கினாள்.
"நிஷா ப்ளீஸ் இப்படி எதுவும் பேசாம இருக்காத.இத நீ ஏத்துக்கிட்டுதான் ஆகனும் "...என நிஷாவைப் போட்டு உலுக்க ஆதிராவின் புறம் திரும்பிய நிஷாவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.அவள் தோளில் முகம் புதைத்தபடி அழத்தொடங்கினாள்.
"நா.நான் மதன விரும்ப ஆரம்பிச்சிட்டேன் ஆதிரா.நான் ஏமாத்துக்காரன விரும்பிட்டேன் "..என வெடித்து அழுதவளைக் கட்டி அனைத்தவளின் கண்களும் கலங்கிப் போனது.
இதுநாள் வரை காதலன் என்ற இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்காத நிஷா மதனை சந்தித்த நாளே அவனை அந்த இடத்தில் வைத்தாள்.அவனை மனதார விரும்பியவளுக்கு அவன் அயோக்கியன் எனத் தெரிந்ததும் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நிஷாவை சந்தித்தது ஓரிரு முறைதான் என்றாலும் பல நாள் பழகி வரும் தோழமையை அவளிடம் உணர்ந்தாள்.எப்பொழுதும் சிரித்தபடி கண்களை உருட்டி பேசுபவள் இப்பொழுது உடைந்து அழுவதைப் பார்த்தவளுக்கு மதனின் மேலிருந்த கோபம் இன்னும் அதிகமாகத்தான் ஆனது.
ஆதிராவின் மேல் சாய்தபடி அழுதுக் கொண்டிருந்தவள் சட்டென நிமர்ந்து கண்களை வேகவேகமாக துடைத்துக் கொண்டு ஒரு முடிவு எடுத்தாற்போல் எழுந்து நின்றாள்.
அதுவரை அழுததால் வீங்கியிருந்த கண்கள் இப்பொழுது மதன் மேல் உள்ள கோபத்தினால் சிவந்திருந்தது.
"இனிமே இத நான் பார்த்துக்றேன் ஆதிரா .நீ வீட்டுக்கு கிளம்பு"... என்றாள் அழுந்தியக் குரலில்.
"நிஷா நீ என்ன பன்னப் போற"...,என்க
"அவனுக்கு ரெண்டு போடு போட்டதான் அடங்குவான்.இப்படியே எல்லாரையும் ஏமாத்திட்டே இருந்தா என்னப்பன்றது. அதான் இதுக்கு ஒரு முடுவு கட்டப்போறேன் "...என்றவளின் குரலில் ஒரு ஆவேசம் தெரிந்தது.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்