வருண் மதிக்கு முதுகை காண்பித்தபடி கடலலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க அவளோ அங்கு அசையாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.
வருண் அவளை உலுக்கி கத்தியதில் முதலில் பயந்தவள் பின்பு அவன் வார்த்தைகளை உள்வாங்கினாள்.அதுவும் அவன் கடைசியாக தன் பாதுகாப்பிற்காக பின் தொடர்ந்தேன் என்றுக் கூறியது அவள் மனதில் ஆழமாகப் பதிந்தது.மீண்டும் மீண்டும் அந்த சொற்களே நினைவிற்கு வர யாருக்கும் என்மேல வராத அக்கறை இவருக்கு மட்டும் ஏன் வருது என தனக்குள் குழப்பிக்கொண்டிருந்தாள்.
திரும்பி அவனைப் பார்த்தாள் தன்னையும் மீறி சிறு புன்னகை மலர அவனருகில் சென்றாள்.
அவன் வலது புறத்தில் சென்று நின்றவள்
அய்யோ அவர் என்மேல இருக்குற அக்கறைல தான கேட்டாரு. நான் தான் லூசு மாதிரி தப்பா நினைச்சி அழுதுட்டேன்.அவர் மட்டும் இன்னக்கி வரலனா என்னோட நிலைம ச்ச....சரி சாரி கேட்டுட்டு தேங்க்ஸ் சொல்லிடுவோமென கையை பிசைந்தபடி அவன் புறம் திரும்பினாள்.
பக்கத்தில் அவள் வந்து நின்றதும் திரும்பிப் பார்த்தான்.
அவன் கண்களைப் பார்த்துப் பேச முடியாமல் குனிந்தபடி சா என அவள் ஆரம்பிக்க அதுவரை அவளையும் பிசைந்து கொண்டிருக்கும் அவளது கையையும் அவளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவன்
என்ன ஹாஸ்டல்ல விட்ருங்க அதைத் தான சொல்லப்போற வாமா வந்து வண்டில ஏறு உன்ன உங்க ஹாஸ்டல்ல விட்டரேன் என கடகடவெனப் பேசி அவள் சொல்லவருவதைக் காதில் வாங்காமல் காரில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.ஹாங்.,. இல்ல நான் என நிமிர்ந்துப் பார்க்க வருண் அங்கு இல்லை.
என்ன இவரு சொல்ல வரத சொல்லவிடாமல் அவர் பாட்டுக்கு பேசிட்டு கார்ல உக்காந்துக்கிட்டாரு.என புலம்பியவள் அங்கேயே சில நிமிடங்கள் நிற்க கீங்ங்ங்ங்,,..என வருண் அடித்த ஹாரனில் அடுத்த நொடி காரில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
மிகவும் முயற்சி செய்து தைரியத்தை வரவழைத்துப் பேச வந்தாள். அறியாமல் வருண் அதை நலுவவிட்டான்.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்