ரொம்பவும் சந்தோஷமாக அறையை விட்டு வெளியே வந்தவன் அவர்களின் அருகில் சென்றான்.
ஆதிராவின் அம்மா முதலில் கிளம்பலாமா என்றவுடன் சக்திக்கு ஒன்றும் புரியவில்லை.பிறகு அவர் தெளிவாகக் கூறவும் தான் புரிந்துக் கொண்டான். இதை அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.என்ன செய்வதெனப் புரியாமல் நின்றவனிடம் நன்றி கூறி கிளம்புவதாக ராஜன் கூறவும் வேறு வழியில்லாம் புன்னகையுடன் தலையசைத்தான்.
உதடுகள் சிரித்தாலும் அவன் மனம்....
போகத ப்ளீஸ்.,..இதுதான் என் வீடு. இங்கயே இருக்கேனு சொல்லு...என அவளிடம் மன்றாடியது.
அவன் பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை ஸ்தம்பித்து நின்றவன்
இடிந்துப் போய் அமர்ந்தான்.கண்களிலிருந்து கண்ணீர் வழிய .,,அவளில்லாமல் இந்த வீட்டில் எப்படி இருக்கப் போகிறோம் என நினைத்தவனுக்கு அதற்கு மேல் சிந்திக்க மனம் இடம் தரவில்லை.
கண்களை இறுக மூடியவன் சோபாவில் சாய்ந்துக் கொண்டான். உடலும் மனமும் ஒரு சேர சோர்ந்துப் போனது அவனுக்கு.,..
எத்தனை ஆசை வைத்திருந்தான் இன்று தன்னவளிடம் தன் காதலைத் தெரிவிக்கப் போகிறொம் என்று.ஆனால் எல்லாம் ஒரு நொடியில் பாலாய் போனது.
ஆதிராவை அழைத்துக் கொண்டு குலதெய்வக் கோவிலுக்குச் சென்றவர்கள் அவளது பெயரில் அர்ச்சனை செய்தனர்.
வசந்தி ஆதிராவின் பெயர் ராசி நட்சத்திரத்தை சொல்லும் போது சக்தியின் நினைவு தான் வந்தது.
அழுகை வர உதட்டை இறுகக் கடித்துக் கொண்டு அதை கட்டுப் படுத்தினாள்.
சன்னதியில் அமர்ந்தப்பின் அவர்கள் ஆதிராவிடம் ஏதேதோ பேச அது எதுவும் அவள் காதில் விழவில்லை.
வசந்தி பேசிக் கொண்டே பூஜை தட்டிலிருந்தப் பூவை வைப்பதற்காக அவள் சூடியிருந்தப் பூவில் கை வைத்தார்.
அவரது தொடுதலில் உணர்வுப் பெற்றவள் அவரது கையைத் தட்டிவிட்டாள்.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்