சங்கரன் தன் மீது உள்ள கோபத்தில் வீட்டினுள் அனுமதிக்கமாட்டாரோ என்ற பயத்தில் மதியிருக்க அப்பத்தாவோ எவ்வித சலனமும் இல்லாமல் நின்றிருந்தார்.
அப்பத்தாவின் புறம் பார்வையை திருப்பியவர்..,.
ஏன் ஆத்தா உனக்கு எதாச்சும் இருக்கா. புள்ள எவ்ளோ நாள் கழிச்சு வந்துருக்கு வெளிய நிக்க வச்சிப் பேசிட்டிருக்க என்றார் அதே முறைப்புடன்.
இதை சற்றும் மதி எதிர்ப்பார்க்கவில்லை குறைந்தபட்சம் தன் மீது கோபப்பட்டு பேசாமலாவது இருப்பார் அல்லது வீட்டினுள் நுழைய அனுமதித்திருக்க மாட்டார் என எண்ணி தான் வந்தாள்.
ஆனால் இப்பொழுது சங்கரன்
பேசியது அதற்கு நேர்மாறாய் இருந்தது.கால்கள் தரையிலிருப்பாதாக அவளுக்குத் தோன்றவில்லை.வீட்டினுள் நுழைந்த சங்கரனை கண்ணீரும் சிரிப்புமாக பின்னாலிருந்து அனைத்தவள் அவரது முதுகில் முகம் புதைத்தபடி .,.,
அப்பா உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா...
மெலிதாய் சிரித்தபடி தன் இளவரசியை முன்னால் இழுத்தவர் அவளது முகத்தைக் கையில் ஏந்தியபடி ..,.
எனக்கு என் பொண்ணு மேல எந்த கோபமும் இல்ல.
இல்லப்பா நான் என மதி ஆரம்பிக்க அவளைத் தடுத்தவர்...
அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ போய் குளிச்சிட்டு வா,,சாப்பிலாம் ,..அவ்ளோ தூரத்துலருந்து வந்துருக்க பயணம் ரொம்ப அலுப்பா இருந்துருக்கும் போ என அனுப்பி வைத்தார்.
செல்லத்தாயி தன் பேத்தி வந்த சந்தோஷத்தில் மதியழகிக்கு பிடித்தமான நெத்திலி கருவாட்டுக் குழம்பு வைத்துக் கொண்டிருந்தார்.
தன் தந்தையும் அப்பத்தாவும் கவனித்தக் கவனிப்பில் இந்த நான்கு மாதத்தில் தான் இல்லாமல் எப்படி துடித்துப் போயிருப்பார்கள் எனப் புரிந்துக் கொண்டாள்...
இருந்தாலும்
அன்று தன்னை சந்தித்தப்
போது தந்தைக்கு தன் மீது இருந்த கோபம் இன்று துளி அளவுக் கூட இல்லையே இது எப்படி சாத்தியமாகும் எனத் தன் மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டிருந்தாள்.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்