மெல்ல வருணிடமிருந்து விலகியவள் அவன் முகம் பாராமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவளைத் தன்னொடு சேர்த்து அனைத்துக் கொண்டவன் குனிந்து அவளது காது மடலை இதழால் உரசியவாரே...
ஐ லவ் யூ,,.என்றான் ஹஸ்க்கி வாய்சில்.
குட்டி பிளாஷ்பேக் இருக்கு நாம அங்க போலாம் அவங்க கொஞ்ச நேரம் என்ஜாய் பன்னட்டும் ...
திருமணத்தைப் பற்றி பேசவும் அப்படியே ஸ்தம்பித்து நின்றவளிடம் ஒரு கவரை கொடுத்தவர்...
மாப்ள ஃபோட்டோ அவர பத்தின விவரம் இதுல இருக்குமா பாத்துக்கோ என ஒரு கவரை அவளிடம் கொடுத்துவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டார்.
என்புள்ள என்பேத்திக்கு இராஜாமாதிரி ஒரு மாப்பிள்ளைய பார்த்திருக்கான் என சங்கரனின் புகழைப் பாடியபடியே அப்பத்தா பாக்கு இடிக் மதியோ சற்றும் முன் இருந்த சந்தோஷம் மறைந்து இறுகி போய் நின்றிருந்தாள்.
இந்தாம்மா எம்புட்டு நேரம் இப்புடியே நிக்கப் போற அதை பிரிச்சுப் பாரு.ம்ஹீம் அந்த காலத்துல எங்க இந்த மாதிரி ஃபோட்டோலாம் இருந்துச்சி .நான்லாம் உன் தாத்தன கல்யாணத்தன்னக்கி தான் முதமுதல்ல பாத்தேன்.ம்ஹீம்,..
என அப்பத்தா தாத்தாவின் நினைவில் மூழ்க,மதியோ விருவிருவென அறைக்குள் நுழைந்து பெட்டில் விழுந்தவள் கதறி அழத் தொடங்கினாள்.
அழுது ஓய்ந்தவள் வருணைப் பற்றி அப்பாவிடம் பேச வேண்டும் என எழுந்திரிக்கும் பொழுது அந்த கவரிலிருந்த போட்டோ கீழே விழுந்தது.
புன்னகை மலர அதைகக் கையில் எடுத்தவளுக்கோ சந்தோஷந்தில் தலை கால் புரியவில்லை.
வாசகர்களே உங்களது கணிப்பு சரியே அது வருணின் புகைப்படம் தான்.
அன்று மதியழகியை சங்கரன் சந்தித்துச் சென்ற பிறகு வருண் மதியழகியின் பக்க நியாயத்தை எடுத்துக் கூறுவதற்காக அரசலூர் வந்திருந்தான்.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்