ம்ம்ம்

499 35 45
                                    

மிதுன்:

'I see you' என்று என் மொபைல் மெசேஜ் டோன் ஒலித்தது,  எடுத்துப்பார்த்தேன்..

" உன்னை கண்ட என் விழிகள் அசையவே மறுக்கின்றன.. வசிய கலை பயின்றவனா நீ.. "

என்று இருந்தது.. யார்டா இது புது நம்பரா இருக்கு.. என்று யோசித்துக்கொண்டே.. may i know who s this ? என்று அனுப்பினேன்..

பதில் வரவில்லை.. மாத்தி அனுப்பி இருப்பார்கள் என்று அதை மறந்து விட்டு என் வேலையை தொடர்ந்தேன் மும்முரமாக.. என்ன வேலை என்கிறீர்களா.. வேற என்ன..  முகநூல் தான்..

சில நாட்கள் கழித்து கல்லூரியில் நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டு இருந்தேன்.. என் மொபைல் வைப்பரேட் ஆக எடுத்துப்பார்த்தேன்..

" உன் விரலோடு என் விரல் கோர்த்து நடக்க ஆசை.. வரலாமா..உன்னவளாக ? "

" ச்ச யார் இவ.. மெஸேஜ் மட்டும் வந்துட்டே இருக்கு.. யார்னு சொல்லவும் மாட்ரா.. " மண்டையை போட்டு குழப்பிக்கொண்டு இருந்தேன்..

" என்ன மச்சான்.. ஏன் இப்படி கடுப்பா மூஞ்ச வச்சு இருக்க.. " என்றான் என் நண்பன் அரூப்

" இல்லடா கொஞ்ச நாளா எனக்கு ஒரு அன்னோன் நம்பர்ல இருந்து மெஸேஜ் வந்துட்டே இருக்கு.. யார்னு கேட்டா பதில் இல்லை.. ஆனா என்ன விரும்பர மாதிரி மெஸேஜஸ் வருது.. "

" பார்ரா.. சொல்லவே இல்ல.. உன் இரசிகையா? "என்று  கண்ணடித்தான்

" அட போடா வெண்ண.. அனுப்பறது மொதல்ல பொண்ணான்னே தெரில.. என் மூஞ்ச அப்டியே இரசிட்டாலும்.. நம்ப பசங்க தான் கலாய்கறாங்களோன்னு தோணுது" என்றேன்..

" அப்படியும் இருக்கலாம்.. இல்ல நிஜமாவே பொண்ணா கூட இருக்கலாம்.. ட்ரு காலர்ல போட்டு பாத்தியா.. இல்ல கால் பண்ணியா?"

"எல்லாம் பண்ணேன்.. ட்ரு காலர்ல பேர் காட்டல.. கால் பண்ணா எப்பவும் ஆஃப்ல தான் இருக்கு" என்றேன்..

" என் சி. எஸ் டிபார்ட்மெண்ட் ப்ரண்ட்கிட்ட ட்ரேஸ் பண்ணி தர சொல்லவா " என்று கேட்டான்.. 

" ம்ம்.. சரி மச்சி யார் எங்கன்னு ட்ரேஸ் பண்ணி தர சொல்லு.. " என்று அதை அப்படியே விட்டுவிட்டேன்..

மெஸேஜ்களும் வருவது நின்று போனது.. ஒருநாள் கல்லூரியின் மைதானத்தில் அமர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டு கண் மூடி அமர்ந்து இருந்தேன்..

என் தோளை யாரோ தொட.. திரும்பி பார்த்தேன்.. ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள்..
" ஹாய் "என்று சினேகமாக புன்னகைத்தாள்..

" ஹாய் .. நீங்க? " என்று இழுத்தேன்..
சிறிது நேரம் என் முகத்தை பார்த்து விட்டு பின் தலை கவிழ்த்து கொண்டாள்.. அவள் செயல் என்னை இரசிக்க வைத்தது..

சிறு புன்னகையோடு " என்ன பேச மாட்டரீங்க.. ? உங்க பேரென்ன.. நீங்களும் இந்த காலேஜ்ஜா? " என்று நான் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க.. அவள் இன்னும் மௌனமாகவே இருந்தாள்..

" ம்ம்ம்.. " என்று தலை மட்டும்  ஆட்டினாள்..

" உங்க பேர் சொல்லவே இல்லியே.. எந்த டிபார்ட்மென்ட் நீங்க..?"

" காதம்பரி.. E.C.E 3rd இயர் "

" ஓ.. நைஸ் மீட்டிங் யூ " என்று கை நீட்டினேன்..

என் கையை பார்த்தவள்.. நிமிர்ந்து என் கண்களை ஊடுருவினாள்.. பின் ஓடியே விட்டாள்...

" ஹலோ... " நான் கத்தினேன்.. அவள் திரும்பி பாராமல் கண்ணை விட்டு மறைந்தாள்..

" என்னடா இவ.. வந்தா.. என்ன மொறச்சி மொறச்சி பாத்தா.. ஓடிட்டா.. " எனக்குள்ளயே புலம்பினேன்..

காதம்பரி:
 
இரவு உணவு முடித்துக்கொண்டு படுக்கையில் விழுந்தேன்.. அவன் என்ன செய்துகொண்டு இருப்பான்..ம்ம்.. மெஸேஜ் அனுப்புவோம்.. கையில் மொபைலை எடுத்தேன்..

" உன் விரலோடு என் விரல் கோர்க்க முடியாமல்.. உன் நிழலாக என்றும் தொடர்வேன்.. உன்னவன்.. "

என் மொபைலில் இதை படித்தவுடன் எனக்கு ஒன்றுமே புரிபடவில்லை.. இது அவனாக இருக்குமா.. என்னை கண்டுகொண்டானா..

ஒருவித படபடப்பு.. சந்தோஷம்.. ஆனால் இதற்கு என்ன அர்த்தம்.. எப்பொழுது உறங்கினேன் என்று தெரியவில்லை..

காலையில் அவசரமாக கிளம்பி கல்லூரியை அடைந்தேன்.. கல்லூரி விடுமுறை என்றார்கள்.. மனதில் ஏக்கம் படற.. அவனை காண முடியாமல் திரும்பினேன்..

எதிரில்....

அவன்.. சிரித்த முகத்துடன்..

கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்..

சொல்லாதே யாரும் கேட்டால்Where stories live. Discover now