" ஹே அவனுக்கு ஒன்னும் ஆகாதுல.. எனக்கு பயமாவே இருக்கு டா.. "
" லூசு.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. சுடுகாட்டுலயே வச்சு சரக்கு போட்டு இருக்கோம்.. இதெல்லாம் மேட்டரே இல்லை.. "
" ஹ்ம்.. என்னமோ சொல்லற.. சரி காலைல பாப்போம்.. பை.. "
காலையில் அவனை பார்ப்போம் என்று அவர் அவர் வீட்டிற்கு சென்றனர் வினோத்தும் ரேகாவும்..
படுத்திருந்த அன்பிற்கு அந்த பிணவறை வாடை ஏதோ செய்தது..அந்த நாற்றத்தை பொருத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் அவனுக்கு போர் அடிக்க ஆரம்பித்தது..
மனதிலேயே குத்து பாடல்களை பாட ஆரம்பித்தான்.. அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்டது.. அமைதியாக மூச்சை உள்ளே இழுத்து கொண்டான். பேச்சு குரல்கள் கேட்டது..
" ஏம்பா என்ன கேஸ். "
" தற்கொலைன்ணா .. 45 வயசு...இன்னிக்கு காலைல தான் இறந்தாரு " என்று கண்ணீருடன் சொன்னான்..
" ஓஓஓ..அந்த ஆளா.. இன்னும் போஸ் மார்ட்டம் பண்ணல தம்பி.. நாளைக்கு தான் நீங்க பிணத்த வாங்க முடியும்.. "
" அண்ணா... நான் பாக்கனும்"
" அட சொன்னா கேக்க மாட்டியா.. போபா பேசாமா.. நாளைக்கு வா"
" ப்லீஸ் அண்ணா.. "
" சரி வா.. "
குளிர் அதிகமாக பரவியது போல் இருந்தது.. ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது.. த்ட்.. என்ற ஒலி கேட்டது..
" கெரகம் பிடிச்சவனுங்க .. நமக்குன்னு வந்து சேருதுங்க பாரு.. பிணத்த பார்த்து மயக்கம் போடறவன்லா என்னதுக்கு இங்க வரனும்.. "ஒலி மங்கி கொண்டே போனது.. பின் எந்த சத்தமும் இல்லை.. அன்பு மெல்ல துணியை விலக்கி பார்த்தான்.. அறை காலியாக இருந்தது.
பக்கவாட்டில் குளிரூட்டப்பட்ட பிண டிரே ஒன்று பாதி திறந்து இருந்தது.. "போய் பாக்கலாமா.." என்று யோசித்தான்..
" ம்ம்.. போய் தான் பாப்போமே.. " என்று எழுந்து அதனருகில் சென்றான்..