அவள் போன இடத்திற்கே நானும் போக முடிவெடுத்தேன்.. அவளில்லா இவ்வுலகில் எனக்கு மட்டும் என்ன வேலை?
உடல் இரண்டெனினும் உயிர் ஒன்றல்லவோ..நாம் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று மீண்டும் அந்த நினைவுகளை கண்முன் நிறுத்தி ரசிக்கின்றேன்... கடல் காற்றில் அசைந்த உன் சிகை.. உன் நாண புன்னகை.. உன் ஒர விழி பார்வை.. இன்றும் என் உயிர் வரை சென்று என்னை சிலிர்க்க வைக்குதடி..
நீயில்லா ஒவ்வொரு நொடியும் ரணமாக மனதை தைக்கின்றதே.. இல்லை.. நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன்.. இதோ.. இன்னும் சில நொடி.. நானும் உன்னை வந்து சேர்வேனே...
இரயிலின் முன் ஒவ்வொரு அடியும் உன்னை நோக்கி தானடி.. உன் முகமே எங்கும்.. கடைசி நொடி உன்னை முத்தமிட்ட கணம் என் மனக்கண்ணில்... தூக்கி எறியப்படுகிறேன்.. உன் மடி சேர்ந்த நிம்மதி கண்மூடும் வேளையில்..
கண்விழித்து பார்க்கின்றேன்... ஆஆஆஆஆஆஆஆஆஆ.. ஐயோ...என்ன கொடுமை இது.. இரத்தமும் இல்லை!
உடம்பில் காயமும் இல்லை! எதிரே நீயும் இல்லை!இல்லை.. விட மாட்டேன்.. உன்னை சேரும் வரை விட மாட்டேன்.. தினம் அதே இடத்தில்.. அதே இரயிலின் முன் நான்...!!!!!!!!!!!!