"யோவ் ஏட்டு இந்த இடம் தானா?"
" ஆமா சார்.. இந்த இடம்னு தான் கன்ட்ரோல் ரூம்ல இருந்து வந்த கால்ல சொன்னாங்க.. "
"ம்ம்ம்.. சரி இறங்கு.. "
இருவரும் ஜீப்பை விட்டு இறங்கினர். அது ஒரு மூடப்பட்ட தொழிற்சாலை. அங்கங்கே துருபிடித்து..பொலிவிழந்து.. பழைய கதவு அவர்களை வரவேற்றது..
பெரிய பூட்டு கதவில் தொங்கிகொண்டு இருந்தது. அதை இழுத்து பார்க்க திறந்து கொண்டது.
" இங்க யாரும் இருக்கற மாதிரி தெர்லயேயா.. நீ உள்ள போய் பாரு " என்று ஏட்டை ஏவினார் இன்ஸ்..
இருள் பரவ.. குளிரும் சூழ்ந்தது.. ஒரு தம்மை பற்ற வைத்து ஊதலானார்... ஏட்டு சென்று பல நிமிடங்கள் ஆகியும் வராததால் இவரும் சென்று பார்த்தார்.. இப்பொழுது பூட்டு பூட்டி இருந்தது..
அதை பார்த்து அதிர்ந்தவர், பூட்டை நன்றாக இழுத்து பார்த்தார்.. ம்ஹம்.. திறக்கவே இல்லை.. " ஏதோ தப்பாப்படுதே.. " என்று மொபைலில் ஏட்டை அழைக்க.. ரிங் போய் கட்டானதே தவிர அழைப்பை எடுக்கவில்லை.
பின்புறம் சென்று பார்கலானார்.. ஜன்னல் ஒன்று ஆள் செல்லகூடிய அளவு இருந்தது. அது வழியே உள்ளே இறங்கினார்..
" ஏட்டு.. யோவ் முனுசாமிமிமிமிமி.... " என்று கத்தி கூப்பிட்டும் பதிலில்லை.. கட்டிடம் முழுவதும் அவர் குரல் எதிரொலித்தது...
" வந்த வேலைய விட்டு இவன தேடுறதே பொழப்பா போச்சே.. "
ஏட்டை தேடிக்கொண்டு கட்டிடத்தை அளந்தார்.. வந்த வேளையை மறந்து.. குளிர் ஏறிக்கொண்டே போனது. " இவன தேடி என்ன பண்ண போறோம்.. எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.. " என்று திரும்பி போக எத்தனித்தார்..