" டேய்.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ.. "
" ஆமான்டா.. இப்ப என்னங்கர.. "
" சரிடா.. அப்ப நான் சொல்லறத செய்ய முடியுமா உன்னால? "
" என்னடா சவாலா.. ? வாடா.. நீயா நானான்னு பாத்துருவோம்.. "
அன்பும் வினோத்தும் சண்டையிட்டு கொள்ள... ரேகா அதை பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்..
" ஹோய்... போதும்.. நிறுத்துங்கடா உங்க அலப்பரய.. ஷ்ஷ்ஷப்பா.. காது வலிக்குது.. "
" நல்லா தின்னுக்கிட்டு வேடிக்க பார்த்த புல்டௌஸர்.. நீ சொல்லாத அத... " அவள் மேல் பாய்ந்தான் வினோத்.
" அத ஒரு டைனோசர் சொல்லுது பாரு.. ச்சீ பே.. "
" அவ கெடக்குரா விடு.. நம்ம மேட்டருக்கு வாடா.. இப்ப என்ன பண்ணணும் சொல்லு.. நான் சவால்ல ஜெயிச்சா.. என்ன பெட்? " என்று வினோத்திடம் கேட்டான் அன்பு..
அவர்கள் இருவரையும் முறைத்துக்கொண்டு இருந்தாள் ரேகா.. (என்ன? நீங்க எல்லாம் என்ன முறைக்கிறது தெரியுது.. நான் மேட்டருக்கு வரேன்)
இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.. எப்பொழுதும் இவர்கள் இப்படி அடித்துக்கொள்வது வாடிக்கை தான்.. சவால் ,போட்டி என்று இவர்களுக்குள் எப்பொழுதும் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.. சரி இப்ப என்ன போட்டின்னு பாப்போம் வாங்க..
" டேய்.. நீ ஒரு நைட் மார்சுவரில பிணம் மாதிரி இருக்கனும்.. அதான் சவால்.. " என்றான் வினோத்..
"ஓ மை காட்.. டேய் இதெல்லாம் டூ மச் டா.. இதெல்லாம் வேண்டாம்..." என்றாள் ரேகா..
யோசனையில் ஆழ்ந்தான் அன்பு.. " என்னடா.. தயங்கற.. பயமா இருக்கா.. அப்ப நான் தான் ஜெயிச்சேன்னு ஒத்துக்க.. " என்றான் வினோத்..
" அப்படிலா ஒத்துக்க முடியாது.. நான் தயார்.. இத செய்ய.. " என்றான் அன்பு..
" ஏய் லுசாடா நீ.. அவன் தான் உலருரான்.. நீயும் சரின்னு சொல்லற.. " என்றாள் ரேகா..
" நீ சும்மா இரு.. " என்று இருவரும் ஒருசேர கூறினர்..
" என்னமோ போங்க.. எனக்கு இதெல்லாம் சரியா படல.. " என்றாள் ரேகா..
" எல்லாம் நாங்க பாத்துக்கரோம்.. நீ அடக்கி வாசி போதும்.. " என்றான் வினோத்..
அன்று இரவு மூவரும் அவர்கள் வீட்டருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர்.. பிணவறையை நெருங்கும் போது அன்பு சற்று மறைவாக ஒளிந்து கொண்டான்..
வினோத்தும் ரேகாவும் அட்டண்டரிடம் மொக்கை போட்டு அவரை தனியே அழைத்து சென்றனர்.. அன்பு உள்ளே சென்று காலியான ஒரு இடத்தில் படுத்து தான் கொண்டு வந்த வெள்ளை துணியை முழுதாக போர்த்தி படுத்துக்கொண்டான்..
சவால் தொடரும்... 😛