அத்தியாயம் 11

4.6K 200 17
                                    

ராதா மெலிதாய் வயிற்றில் கை வைத்தபடி லேசாய் சிரித்து கொண்டு தோளைக் குலுக்கினாள்.

"ராஸ்" என்றபடி உள்ளே குதித்து கொண்டு வந்தான் கிருஷ்ணா.

"கிச்சா" என்றபடி கட்டிலில் இருந்து குதித்து ஓடிஎ சென்று அவனை கட்டிக் கொண்டாள் ராதா.

"ஹே..ஈஸ் இட் ட்ரூ..ஐ லியலி டோண்ட் நோ ஹெவ் டு ரியாக்ட் ராஸ்" என்றான் புரியாத சந்தோஷத்துடன்.

அவனிடம் இருந்து விலகியவள், நெஞ்சில் ஒரு குத்து குத்தி "சேம் ஹியர் கிச்சா" என்றவள் தோளை குலுக்கிவிட்டு "பட் இட்ஸ் ட்ரூ, ஜஸ்ட் ஹேர்டு ஃப்ரம் லேப்" என்று மறுபடியும் அவனை இறுக கட்டிக் கொண்டாள்.

இருவருக்கும் ஏதோ சொல்லமுடியாத சந்தோஷம், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

இருவரும் கட்டிலில் அமரவும்,ராதா "டெல் மீ கிச்சா யூவாண் கேர்ள் ஆர் பாய்" என்றாள்.

"ராஸ்" என்று சிரித்தவன் "யூவார் டூ பாஸ்ட், ஐ ஸ்டில் டின்ட் கெட் செட்டில் ஃபார் திஸ் நியூ திங்" என்று தோளை குலுக்கியவன் சட்டென அவள் மடியில் படுத்து கொண்டான்.

"ஹேய் இப்ப எல்லாம் பாப்பா சத்தம் கேட்காது, நீ என்ன பண்ணுறே?" என்றாள் ராதா.

"ம்..இன்னும் எவ்வளவு நாளைக்கு இதெல்லாம் முடியும் இல்ல? அதான்" என்றவன் அவள் கையை பிடித்து தன் கன்னத்தில் வைத்து கொண்டான்.

தன் கையை அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டவள் "கொழுப்பெடுத்த கிச்சா, எப்ப பார்த்தாலும் இப்பிடி தான் பேசுவியா? டர்ட்டி டாக்" என்று சிணுங்கினாள்.

"அவனவன் கஷ்டம் அவனுக்கு" என்று சிரித்தபடி எழுந்தவன் "ம்..உன்ன மாதிரி ஏஞ்சலா இருந்தாலும் சரி என்ன மாதிரி ப்ரின்ஸா இருந்தாலும் சரி எனக்கு ஓகே" என்று இரு கண்களை சிமிட்டி சிரித்தான் கிருஷ்ணா.

"ரொம்ப தான் உனக்கு, என்னால உன்ன சமாளிக்கவே முடியல இதுல ப்ரின்ஸ் வேற..நம்மாள முடியாதுப்பா" என்று விளையாட்டாக கை எடுத்து கும்பிட்டாள்.

இதுவும் காதலா?!!!Where stories live. Discover now