அத்தியாயம் 32

5K 233 56
                                    

மகள்கள் தூங்கவும் தன் கையில் டைரியோடு ஓரமாய் கிடந்த ஒற்றை சேரில் தஞ்சம் அடைந்து, அவன் மார்க் செய்திருந்த இடத்திலிருந்து பிரித்தாள்.

' ஹாய் சக்க..ம்ச்..இல்ல நான் இல்லாததினால் , இப்போ இந்த டைரி உன் கையில் இருக்கு. ஸோ ஹாய் பொண்ணு ! எப்பிடி இருக்கே? ஒரு வேளை நான் தப்பா உன்னோட மெசேஜை ஆரம்பிச்சுட்டேனோ...ம்ஹூம்..சரி விடு..நீ எப்பிடி எந்த நிலைமையிலே இந்த வீட்டுக்கு கிச்சாவுக்கு பொண்டாட்டியா வந்திருப்பேன்னு எனக்கு ஒரு அளவுக்கு யூகிக்க முடியும். ஏன்னா..என் கிச்சாவோட உயிர் நான் தான்னு எனக்கு தெரியும், நிச்சியமா அவன் இஷ்டத்தோட நீ அவனை கல்யாணம் பண்ணுகிற வாய்ப்பு ரொம்ப கம்மி தான்.ம்..வேற என் பொண்ணு..ம்ஹூம்.. அவளுக்கு எனக்கு ஆராதனான்னு பேரு வைக்கணும் ரொம்ப ஆசை ! கிச்சா அவளுக்கு பேராவது ஒழுங்கா வச்சானானு எனக்கு தெரியலை..ம்ஹும்..அவன்..எனக்கு அவனை விட்டுட்டு போக ஒரு துளி கூட நினைப்பு இல்ல தெரியுமா! .ம்ச்.. ஆனா எனக்கு என்னமோ தோணுது நான் என் கிச்சா கூட வாழ மாட்டேன்னு..ம்ச்.. அவனால என்னை நினைக்காமே ஒரு நொடி கூட இருக்க முடியாது.கிறுக்கு ராஸ்கல்..ரொம்ப தவிச்சு போயிருவான். ம்ச்..........................................................................................' ஒரு நீண்ட இரண்டு வரி இடைவெளிக்கு பின் தொடர்திருந்தாள்.

'என் பொண்ணு கூட நான் இருக்க மாட்டேன்னு தோணுது, நீ இருக்கியா? ம்..ஒரு வேளை அவளால கூட உனக்கு இந்த கல்யாணம் நடந்திருக்குமோ...ம்ம்..ரைட் அது ஒரு பாஸிபிளிட்டி தான் இருக்கு..அப்பிடின்னா நீ அவளை நல்லா பார்த்துக்கிறீயா?ம்..கொஞ்சமாவது பார்த்துக்கோ ப்ளீஸ்... எங்களோட காதலுக்கு கிடைச்சா பெரிய கிஃப்ட் அவ ! கிச்சா, அவன்..ம்ஹூம்..என்ன சொல்லுறது அவனை பத்தி..அவன்..ஒரு கிறுக்கன்..ம்..கோபப்படாதே..இந்த டைரி ஒரு வேளை அவன் கிட்ட இருந்து உன் கைக்கு வந்திருந்தா..நீ நிச்சியமா நல்ல பொண்ணா தான் இருப்பே..அவனுக்கு எதையும் நேரடியா பேச தெரியாது..நம்ம தான் புரிஞ்சுக்கணும்..அவன் அப்பிடிதான்..ம்ச்..பணக்கார வீட்டு ஒரே பையன்..ம்ச்.. ஆனா தப்பானவன் இல்ல..ரொம்ப பிடிவாதமா இருப்பான்..என்னையும் அப்பிடி தான் கட்டிகிட்டான் தெரியுமா?! நிறைய நிறைய காதலிச்சோம்..ம்ச்ச்..என்னாலயும் அவனை விட்டுட்டு இருக்க முடியாது..ம்ச்.. உனக்கும் அவனுக்கும் நான் வந்து பொண்ணா பிறந்தா எனக்கு ராதான்னே பேரு வைக்கிறீயா?ம்ஹூம்..அவனோட மொத்த வீக்னஸூம் நான்..எல்லா விதத்திலும்..உனக்கு நான் சொல்லுறது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..ஒரு வேளை உன் இஷ்டமில்லாமே அவன் உன் கிட்ட வந்தா கூட கொஞ்சம் பொறுத்துக்கோ..ம்ச்..எனக்கு என்ன எழுதுறதுன்னு தெரியலை..என் கிச்சா நான் இல்லாமே ரொம்ப கஷ்ட பட்டிருப்பான். ம்ஹூம்..இனிமே அந்த கஷ்டம் அவனுக்கு வேண்டாம்..நீ அவனை நல்லா பார்த்துக்கோ..ம்ஹூம்..இல்ல அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்.உன் மேல கொஞ்சம் நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் தான் இந்த டைரி உன் கிட்ட வந்திருக்கும்.என் ஆராதனாவையும், கிச்சாவையும் நீ நல்லா பார்த்துக்கோ...நான் உன் பொண்ணா கூடவே இருந்து பார்ப்பேன்..என்னா..ஒகேவா??அப்புறம் அப்பா ,அம்மா..ம்ச்..நீ அப்பிடி கூப்பிடுறீயான்னு எனக்கு தெரியலை..ம்ச்..ஆனா நிச்சியம் அவங்க உன்ன பொண்ணா தான் பார்ப்பாங்க. இந்த வீடு ஒரு சொர்க்கம் தெரியுமா? இங்க யாரையும் காய படுத்திராதே..நீ காயப்படாமே பார்த்துக்க நான் இருப்பேன்..இனி என் கிச்சா கூட உன்ன நல்லா பார்த்துப்பான்.'

என பக்கம்பக்கமாய் வீட்டில் இருந்த ஒவ்வொருவரை பற்றியும் எழுதியிருந்தாள். எல்லோரை பற்றி எழுதி இருந்தாலும் ஊடே கிருஷ்ணாவை பற்றி அவளால் எழுதாமல் இருக்க முடியவில்லை..நந்தினிக்கு படிக்க படிக்க தொண்டை அடைத்தது. அழுகை முட்டியது. அழுகவும் செய்தாள்.எப்போது தூங்கினாள் என்றே தெரியாமல் தூங்கியும் போனாள். திடுக்கிட்டு எழுந்தவள் விருக்விருக் என முழித்துவிட்டு மணியை பார்த்தாள். மணி 5ஐ காட்டியது. டைரியை கட்டிய எழுந்தவள் ,அந்த டைரியை ஒரு முறை ஆழமாய் பார்த்துவிட்டு சின்ன மகளை பார்த்தாள். குழந்தை உறக்கத்தில் சிரித்தாள். அந்த சிரிப்பு இன்று நந்தினிக்கு ஏதோ சொல்லி சென்றது. ஏதோ நினைத்தவள், கிருஷ்ணாவின் அறைக்கு சென்றாள், அந்த அதிகாலையிலும் அந்த அறையில் விளக்கெறிந்தது.துணிச்சலை சேர்த்துக் கொண்டு உள்ளே சென்றவள் கண்ணில் காலி அறை மட்டுமே தென்பட்டது. அங்கிருந்த ராதாவின் பெரிய படத்தின் முன் போய் நின்றவள்,டைரியை வைத்துவிட்டு கண் கொட்டாமல் ராதாவை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு "நீங்க இருந்திருக்கலாம்!" என்றபடி மறுபடியும் அவளை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தாள்.ஏனோ அந்த காலையிலும் கண்ணீர் அவள் கண்ணில் வழிந்தோடியது. மூக்கை உரிஞ்சியபடி திரும்பியவள் கண்ணில் சத்தம் காட்டாமல் அவளை பார்த்துக் கொண்டு பாத்ரூம் வாசலில் நின்றிருந்த கிருஷ்ணா பட்டான்.

"டைரி" என்றவள் ராதாவின் படத்தை நோக்கி கையை நீட்டினாள்.

"அதுக்குள்ள படிச்சிட்டீயா?" என்றான் கிருஷ்ணா முகத்தை துடைத்து கொண்டு ராதாவின் படத்தருகில் வந்தபடி.

"ம்.." என்றாள் அமைதியாக.

"ம்ஹூம்..என்ன புரிஞ்சுது?" என்றான் நக்கலாக அந்த வேளையிலும்.

"அவங்க மனசே இல்லாம தான் உங்களை விட்டு போயிருக்காங்கன்னு புரிஞ்சுது, அவங்களே உங்க கூட இருந்திருக்கலாம்னு தோணுச்சு, என் பசங்களையும் இந்த வீட்டில் இருக்க எல்லாரையும் நான் இன்னும் நிறையா நல்லா பார்த்துக்கணும் தோணுச்சு" என்றவள் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தவள் கதவருகே வரவும் நின்று "இனிமே நா..நான் உங்களை பாவான்னு கூப்பிடுறேனே...அத்தை அப்பிடி தான் கூப்பிட சொல்லிருக்காங்க" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

கிருஷ்ணா பதிலேதும் சொல்லாமல் ராதாவின் டைரியை தடவி பார்த்தான்.

இதுவும் காதலா?!!!Donde viven las historias. Descúbrelo ahora