இன்னும் கொஞ்சம்...

7.5K 272 145
                                    

அந்த ஹாஸ்பிட்டலில் விஐபி சூட் ரூம் ஃப்ளோரில் ரிசெப்ஷனில் டென்சனாய் "கௌதம், ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே? நந்து வில் பீ ஆல்ரைட்ல?" என்றான் கிருஷ்ணா.

சிரித்து கொண்ட கௌதம் "கிருஷ்ணா ப்ளீஸ், இட்ஸ் நாட் ஹர் ஃபர்ஸ்ட் டைம்.ஷி வில் பீ ஆல்ரைட். அவளே போல்டா இருக்கா, நீங்க ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க..கூல்" என்றான் கௌதம்.

"இல்ல கொஞ்சம் அப்நார்மல்னு சொன்னாங்க இல்ல அதான்..ஐயம் ஸோ ஸ்கேர்ட் டு பீ ஹியர்..ராஸ்..அப்புறம் நந்து..ம்ச்..அப்ப வீ வேர் நாட் இன் டேர்ம்ஸ்...ம்ச்..ம்ஹூம்" என்றபடி டென்சன் மாறாமல் எழுந்தான் கிருஷ்ணா.

அங்கிருந்த ரூமில் இருந்து சந்திரா வெளியே வந்தாள், கொள்ளாத சிரிப்புடன். "கிருஷ்ணா..டாக்டர் நின்னே பிலிஸ்தானு"

"என்னாச்சு எதாவது பிரச்சனையா?" என்றான் கிருஷ்ணா பதட்டதுடன்.

"ம்ச்.. ஏன்டி கிருஷ்ணா எதுக்கு இவ்வளவு பதட்டம், அன்னி குட் நியூஸே.உன்ன என்னனு கேட்க பிட்டா ஒச்சிந்தி..ஒக்கடு காது ரெண்டு" என்றாள்.

சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு அந்த செய்தி புரிவதற்கு, மெலிதாய் சிரித்தவன் "நந்து ஓகேவா?" என்றான்.

"ம்ச்..மூணு பேரும் நல்லா இருக்காங்க , நீ முதல்ல கீழே போ கிருஷ்ணா" என்று அவனை பிடித்து தள்ளாத குறையாக கீழே அனுப்பினாள் சந்திரா.

கிருஷ்ணா லேபர் ரூமை நெருங்கும் அவனையும் அறியாமல் உடல் சிலிர்த்தது.அவனை கண்டதும் வேணி கொள்ளாத சிரிப்புடன் "ரெண்டும் பசங்க பங்காரம்" என்று அவன் கையை குலுக்கினாள்.சிரித்து கொண்டவன் கண்களால் கதவு திறக்குமா என கதவை பார்த்திருந்தான். கதவு திறந்தது நர்ஸ் ஒரு பேப்பரோடு வந்து அவனிடம் "ஒரு சைன் வேணும் சார்" என்றாள்.

"எதுக்கு?" என்றபடி எக்கி கதவு இடைவெளியில் நந்தினியை பார்த்தான். மெதுவாய் கண்விழித்து அவனை பார்த்து சிரித்தாள்.

"ம்..அதி நேனு செப்தானு..நுவ்வு முந்தி சைன் செய்யு?" என்றாள் வேணி.

இதுவும் காதலா?!!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ