1

3.4K 104 2
                                    

இருள்பிரியா காலை நேரத்தின் அழகை ரசித்தபடி அந்த பழைய பஸ்ஸில் இருந்து இறங்கினாள் வெண்ணிலா. வெண்ணிலா பெயருக்கு ஏற்றார் போல் முழுநிலவாக ஜொலிக்கத்தான் செய்தாள் வெளிர்மஞ்சள் நிறம் தரை தொட்டு விடும் அளவு குந்தல் கொஞ்சம் குழந்தை முகம் என்று பார்ப்பவர்களை அசரவைக்கும் அழகு. பஸ்ஸில் இருந்த வயதான conductor "என்னம்மா உன்னை கூப்பிட யாரும் வருவாங்களா? நீ யாரு வீட்டுக்கு வந்திருக்க? இந்த நேரத்துல இங்கே நிக்குறது நல்லது இல்லமா" என்று கூற

"தாத்தா நான் இங்கே இருக்குற குறுஞ்சி தோட்டத்துக்கு வேலைக்கு வந்திருக்கேன். ஏன் இத்தனை கேள்வி கேட்டுறீங்க பயமா இருக்கே" பயந்து நடுங்கிக்கொண்டே கலகலவென்று சிரித்தவள் "அதுவும் இல்லாம நான் ஏதுக்கும் பயப்பட மாட்டேன் (வேண்டாம் நிலா இன்னும் கொஞ்ச நாள்ள நீ ஒருத்தனை பார்த்து மிரள போற)" நிலா தைரியமாக கூற

"சரி பாப்பா பத்திரமா போமா இந்த ஒத்தையடி பாதையில போனா அடுக்கம் வந்திரும் ஜாக்கிரதையா போயிருவேல" என்று கூறியவர் ஒரு விசில்லுடன் அந்த பழைய பஸ் சென்று விட.
பார்த்து கொஞ்ச நேரத்தில் இந்த வயதான மனிதருக்கு தான் மேல் எவ்வுளவு அன்பு என்று நினைக்க நினைக்க அவளது மனம் சில பழைய நினைவுகள் அவளது கண்களில் கண்ணீரை பொங்க செய்தது. அடுக்கம் கொடைக்கானல் போகும் கிளை பாதையில் ஒரு அழகான மலை கிராமம். அதற்கு ஒரு இரண்டு முன்று km துரத்தில் குறுஞ்சிதோட்டம் இருந்தது.

மெதுவாக நடந்தவள் சூரியனின் கதிர்கள் பூமி பெண்ணை முத்தம்மிடம் போது அந்த குறுஞ்சி தோட்டத்தை அடைந்தவள் அங்கே இருந்த பெரிய அங்கிலேயர் காலத்து மாளிகையை பார்த்து மெய் மறந்து நின்றுவிட்டாள். வெண்ணிலா இங்கே அனுப்பட்டது இந்த வீட்டை மேற்பார்வை பார்க்கவும் இங்கு இருக்கும் இரு வயதான பெண்மணிகளை பார்த்துக்கொள்ளவும் தான். அவள் தன்னை மறந்து நிற்க்கும் போது "excuse me" என்று குரல் கேட்டு திரும்ப இங்கே நின்றவனை எங்கோ பார்த்த நியாபகம் வர அவனோ தன்னை முகுந்தன் என்று அறிமுகம் செய்துக்கொண்டான். "hello I am வெண்ணிலா" வாய் அறிமுகம் செய்தலோ மனமோ இன்னும் அவனை நியாப அடுக்கில் தேடி கொண்டிருந்தது. "உள்ள வாங்க miss. வெண்ணிலா நீங்க இவ்வுளவு சீக்கரம் வருவீங்கனு தெரியாது அதனால்தான் busstopக்கு வரலை சாரி ok ok பனியில நிக்கவேண்டாம் உள்ளே வாங்க" என்று அழைத்து சென்றான்.

உள்ளே சென்றவளை "miss. வெண்ணிலா" என்று அவன் இரண்டு முறை அழைக்க "ம்............sorry சொல்லுங்க எதோ நியாபகம்" என்று பதறியவளை கண்டு புன்னகைத்தவன் ஒன்னும் problem இல்லைங்க. "நீங்க அந்த ரூம்ல refresh பண்ணிக்கோங்க அத்தையை பத்துமணிக்கு தான் பார்க்க முடியும் so நல்ல rest எடுங்க" கூறிவிட்டு வேகமாக தான் காலை நடைக்கு சென்றுவிட்டான்.


குழப்பத்துடனே உறங்கியவளை பழைய கனவுகள் உலுக்க அலறிக்கொண்டு எழுந்தவள் மணியை பார்க்க அது பத்தை தொட்டிருந்தது. வேகமாக எழுந்தவள் குளித்து தான் நீண்ட குந்தலை உலரவைக்கும் போதே கதவு தட்டபடும் சத்தம் கேட்டு அவசரமாக கதவை திறந்தவளை நோக்கி புன்னகை செய்தார் ஒரு வயதான பெண்மணி. "நான் தான் சாரதா நீ என்னையும் என்னோட அத்தையும் தான் பார்த்துக்க வந்துருக்க. ஆமா நீ நல்ல சமைப்பியா அத்தைக்கு வாய்க்கு ருசியா வேணும்" என்று கேட்டவர் அப்போதுதான் அவளை கூர்ந்து கவனித்தவர் சிறிது நேர யோசனைக்கு பிறகு "நீ ரொம்ப அழகா இருக்கமா" என்று அவளுடைய நீள குந்தலை சிக்கு எடுக்க அப்போதுதான் அவள் தலைக்கு குளித்திருப்பது தெரிய "அய்யோ! என்னம்மா இன்னக்கிதான் வந்திருக்க அதுக்குள்ள தலைக்கு குளிச்சியா? சீதா................" இந்த குரலுக்கு பதிலாக ஒரு சின்ன பெண் வர அவளிடம் போய் "சாப்பாடு எடுத்து வை அப்படியே ஒரு பெரிய towel கொண்டுவா" கூறிவிட்டு திரும்பியவர் அவளிடம் அவளை பற்றி கேட்க தொடங்கினார். என் வெண்ணிலா அம்மா கன்னியாகுமரியில இருந்து வரேன் அம்மா அப்பா கிடையாது பாட்டிகிட்ட தான் வளர்ந்தேன் இப்பதான் இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் பாட்டியும் இறந்துபோங்க. HolyFaith school HM தான் உங்களை பற்றி சொல்லி இங்கே அனுப்பினாங்க" அதற்குள் towel வந்து விட நிலாவின் குந்தலை உலர்த்தியவர் "நீ போய் guesthouseல முகுந்தன் இருப்பான் கொஞ்சம் கிட்டிட்டு வாம்மா" கூறியவர்
நிலா திருதிருவென விளித்தவளை பார்த்து "என்னம்மா" என்று வினவா

"இல்லை மேடம் எனக்கு.................."

"ஓ உனக்கு guesthouse தெரியாதுல" அதற்கு வழி கூறிவிட்டு சென்றார்.

guesthousக்கு சென்றவள் கதவு லேசாக திறந்திருக்க உள்ளே சென்று ஒரு நிமிட யோசனைக்கு பிறகு "முகுண்ணா" என்று அழைக்க

அந்த குரலுக்கு வெளியே வந்தவன் நிலாவை பார்த்து திகைத்து போனான்.

மலரும்................................

Read more:   

குறிஞ்சி மலர்Where stories live. Discover now