3

1.9K 91 8
                                    

ஸ்ரீகார்த்திகேயன் (அதுதான் போன updateல அவனை பத்தி சொல்லிட்டியே இன்னும் என்னனு? நீங்க கேக்குறது தெரியுது கார்த்தி பத்தி பெருமையா சொல்லட்டி அவன் என்னை ஒரு வழி பண்ணிருவான் அதுனால தான் so கொஞ்சம் பொறுத்துக்கோங்க pls) பார்ப்பவர்களை இவனுக்கு உரம்போட்டு வளர்த்தாங்களோ என்று தோன்றும் உயரம், ஆளை உடுருவும் பார்வை ,சிரிக்க மறந்த உதடுகள், கற்சிலையோ என்று எண்ணவைக்கும் இறுகிய முகம். இன்று மேலும் இறுகியது போல இருந்தது வீணாவிக்கு. அவளது கண்கள் தான் தாயை தேடியது. (வேற எதுக்கு தான் அன்பு அண்ணனிடம் இருந்து காப்பாத்த தான் ஆனா மகன் car horn சத்தம் கேட்ட உடனே சாரதா அம்மா roomகுள்ள போய் கதவை அடைத்துக்கொண்டது பாவம் அவளுக்கு தெரியாது).

நிலாவிற்கு அந்த புதியவனை பார்த்தது ஏதோ ஒரு உணர்வு தோன்றியது அந்த உணர்வு புதிதாக இருக்க அதுவே அவளுக்கு ஒரு பயத்தையும் தந்தது. அவனையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் நிலா. அவளுக்கே அவள் செய்கை புதிதாக இருந்தது. வீணாவோ "நிலா நிலாஆஆஆஆஆ..................." என்ற உலுக்க "என்னப்பா நீ அவனை போய் அப்படி பார்க்குற அவன்தான் நான் சொன்ன சிடுமூஞ்சி. வாப்பா ஓடிருவோம் கையில் சிக்கினோம் ஒன்னு திட்டுவான் இல்லை advice பண்ணுவான்". என்று கூறிய வீணா வேகமாக ஓட ரெடியாக ஆனால் நிலவுக்கு கால்கள் நகரவும் மறுக்க அவன் முகத்தை பார்த்த வண்ணம் இருந்தாள்.

அப்பொழுது அருகில் வந்த ஸ்ரீகார்த்திகேயன்னின் பார்வை நிலாவை விட்டு நகரவே இல்லை (இன்னிமே கார்த்தின்னு கூப்பிடுவோம் சரியா) ஆனால் கேள்வி என்னும் அம்புகள் வீணாவை நோக்கி பறந்தன.

"
ஏங்க போன?"

"
கொடைக்கானலுக்கு"

"
ஏதுக்கு?"

"
சும்மா purchase"

"
தனியவா?"

"
இல்லை நந்து கூட" என்று கூறும்போதே கார்த்தி முறைத்த முறையில நந்து அத்தான் என்று மாறி போனது


"
இது வெண்ணிலா அம்மாவையும், பாட்டியையும் பரத்துக்க வந்திருக்காங்க"

"
இவளையுமா கூட்டிட்டு ஷாப்பிங் போனிங்க?"

"
ஆமா"

"
ஏதுக்கு?"

"
அவளுக்கு sweater வாங்கி கொடுக்க சொல்லி அம்மா சொன்னாங்க அதுதான்.........."

"
சரி ரொம்ப இழுக்காதே போய் முகுந்தனை வர சொல்லு" அவள் நகர தொடங்கும்போது "ம்ம் ஒரு நிமிஷம் அவனை மரியதையா பேசு"

"
சரிரிரிரிரி..............................." பல்லை கடித்துக்கொண்டு வீணா செல்ல

அதுவரை ஒரு அதிர்ச்சியோடு அவர்கள் உரையாடுவதை பார்க்க அப்பொழுது அவன் கவனம் தான் பக்கம் திரும்புவதை உணர்ந்த நிலாவுக்கு நடுக்கம் ஓட தொடங்கியது "இவன் தங்கச்சிகிட்டேயே அப்படி பேசுறான். என்கிட்ட எப்படி பேசுவானோ" என்று யோசிக்கும் போதே அவள் மீதான பார்வை அவன் விலக்கவே இல்லை என்பது அவளுக்கு உறைத்தது.

"
வா" ஒற்றை சொல்லாகா கூறி கார்த்தி முன்னே செல்ல அவனை பின்பற்றி சென்றவள் "அய்யோ இவன் சரியான சிடுமுச்சினு வீணா சொன்னாளே. இவன் பின்னாடி போறேமே இவன் என்ன கேட்பானோ பயமா இருக்கு, முகுண்ணாவை வேறு காணும்" யோசித்து கொண்ட வந்தவள் கவனம் இல்லாமல் அவன் மீது மோதிக்கொள்ள "சாரி சாரி சார் தெரியாம" என்று அவள் திணறும் போதே "பரவாயில்லை" ஒற்றை சொல்லோடு அலுவலக அறைக்குள் சென்றான்.

"
உன்னை பற்றி சொல்"

"
என் பெயர்................." என்று ஆரம்பிக்கும் போதே அதை தான் வீணா சொன்னாளே அப்புறம் (கார்த்தி ஓடி போய் 1st update படி) அவள் தன்னை பத்தி கூறி முடிக்கவும்

"
என்ன படிச்சிருக்க?"

"B.com
சார், நான் தான் university first சார்" என்று பெருமை பொங்க கூற போதும் என்பது போல செய்கை செய்தவன் "நீ போலாம்" என்று கூற

வேகமாக ஓட அவள் அழகிய குந்தலையும் அந்த குழந்தை முகத்தையும் ரசித்தவனின் உதடுகளில் ஒரு சிறு புன்னகை அவனையும் அறியமால் தோன்றியது.

மலரும்.................

குறிஞ்சி மலர்Where stories live. Discover now