காலையில் விழித்த நிலா மணியை பார்க்க அது நான்கு என்று கூறியது. அவளுக்கு ஏனோ ரொம்ப சுறுசுறுப்பாக இருந்தது. பல நாள்கள்க்கு பிறகு பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உணர்ந்தாள். வேகமாக குளித்தவள் ஜன்னலை திறந்து தோட்டத்தை பார்க்க அங்கு சூரிய காதலன் முத்தம்மிட பூமிமங்கை அழகாக சிவக்க தொடங்கினாள். அதை பார்த்த நிலாவுக்கு அங்கு செல்ல மனம் துடித்து உடனே அதை செயல்படுத்தியவள் தோட்டத்தில் தன்னை மறந்து கால் முளைத்த பட்டாம்பூச்சியாக சுற்றி திரிந்து கொண்டிருந்தாள்.
உறங்காமல் இரவெல்லாம் தான் அறையை அளந்துகொண்டிருந்தவன்
கார்த்தி. அவனால் பழையது எதுவுமே மறக்கமுடியவில்லை தன் தாயே தன்னை பார்க்க விரும்பவில்லை என்பது அவனுக்கு விழுந்த பெரிய அடியாக இருந்தது நேற்று இரவு வீணா நிக்கியிடம் பேசியதை கேட்டவன் மேலும் அதிர்ந்து போனான்.
"dai நிக்கி எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கல"
"ஏன் வீணா? நான்தான் உன்னை அண்ணின்னு கூப்பிடூறேனே அப்புறம் என்ன?"
"இல்ல நிக்கி நீ மட்டும் அப்படி நினைத்தால் போதுமா? உங்க அண்ணன் அப்புறம் அந்த சிடுமுஞ்சி, அம்மா" சிறு யோசனைக்கு பின் "பாட்டி" சத்தம் இல்லாமல் ஒரு பெருமூச்சை வெளியிட்டவள் "எனக்கு வேற பயமா இருக்கு டா நிக்கி எங்க நானும் கார்த்தி மாதிரி............................" அவள் பேசும் போதே கண்களில் நீர் பெருக அதை அடக்கும் பொருட்டு மூச்சை உள்ளே இழுத்தவள் மீண்டும் தொடர்ந்தாள் "எனக்கு பெரிய பெரிய ஆசையே கிடையாது. எனக்கு நந்துவை கல்யாணம் பண்ணிக்கணும் அப்புறம் அம்மாவை சந்தோஷமா வைத்திருக்கனும் ."
"ஏன் அத்தை சந்தோஷமாக தான இருக்கிறாங்க எப்பவுமே jolly பேசி சிரிச்சிகிட்டு....................." என்று இழுக்க
"இல்லை நிக்கி பார்க்க தான் அப்படி ஆனா ஓயாமல் ரூம்ல ஏதோ ஒரு போட்டோ பார்த்து அழுகுறாங்க. dai எனக்கு கார்த்தியை ரொம்ப பிடிக்கும் டா எல்லா அண்ணன் மாதிரி அவன் கூட என்கிட்ட பேச மாட்டானானு ஏக்கமா இருக்கு தெரியுமா? அந்த பத்மா தெரியுமாடா அவ அண்ணன் வாட்ச்மேன் ஆனாலும் அவளை எப்படி பார்த்து பாரு தெரியுமா?" மீண்டும் ஒரு ஏக்க பெருமூச்சி விட்டவள்"
"சரி டா நிக்கி நீ போய் தூங்கு இல்லாட்டி அந்த சிடுமூஞ்சி திரும்ப question பண்ண ஆரம்பிச்சிரும்" என்று கூறிவிட்டு தன் அறைக்கு வேகமாக சென்றவள்
அங்கு குலுங்கி அழுவதை காணும் போது அவனுக்கு ஏதோ ஒன்று உள்ளே உடையைந்தது.
சிறு வயதில் "காக்கிண்ணா காக்கிண்ணா" என்று அழைத்துக்கொண்டு பின்னாடியே சுற்றிய குட்டி வீணா கண்முன்னே வந்தாள். அன்று தோன்றிய கோபத்திற்கும் வெறிக்கும் வீணா தான் வடிகாலாக போனாள். "காக்கிண்ணா" கைகள் முழுத்தும் சாக்லேட்டை அப்பிக்கொண்டு வீணா வர அவளை ஓங்கி கார்த்தி தள்ள அங்கு இருந்த சுற்று சுவர் இல்லாத கிணற்றில் போய் விழுந்தாள். தலையில் பெரிய அடி அதில் இருந்து அவள் மீளவே ஒரு மாதம் ஆனது.
அதில் இருந்து கார்த்திக்கு தான் மேலே வெறுப்பு தான் குடும்பத்தில் இருந்து விலகியவன் hostelலுக்கு சென்று விட்டான். வாரத்துக்கு ஒரு முறை வந்தாலும் யாரிடமும் ஓட்டமட்டான். வீணா அதற்கு பிறகு அண்ணனிடம் நெருங்குவதே இல்லை.
இதை எல்லாம் யோசித்துக்கொண்டே பால்கனிக்கு வந்தவன் அங்கு தோட்டத்தில் அழகான மலர் போல் இருந்த நிலாவை கண்டவன் முகுந்தன் அவளை பற்றி சொன்னதை நினைத்தவன் "இந்த சின்ன பெண்ணுக்கு எவ்வுளவு தைரியமா?" என்று வியந்தவன் படுக்கையில் விழு அப்படியே உறங்கிவிட்டான்
தூங்கி எழுந்த கார்த்தி ரெடியாகி கீழே வர அங்கு சோபாவில் அமர்ந்து நந்துவை seriousசாக sight அடித்துக்கொண்டு இருந்த வீணா அருகில் போய் அமர்ந்த கார்த்தி "குட்டிமா" என்று அழைக்க வேகமாக திரும்பியவள் அவனை விநோதமாக பார்க்க அவள் முன் இரண்டு milkybarரை நிட்டி வங்கிக்கோ என்று கண் அசைவால் கூற ஒரு பயத்தோடு பெற்று கொள்ள "சீக்கிரம் ரெடியாகு icecream சாப்பிட போவோம்" என்று கூற வேகமாக வீணா எழுந்து நந்து நோக்கி ஓட சிறிது நேரத்தில் "ஐயோ" என்று அலறல் கேட்க கார்த்தி சென்று பார்க்கும் போது அங்கு முகுந்தன் கண்களில் நீரோடு நின்றுகொண்டிருந்தான்.
ஆனால் அங்கு வீணா இல்லை அவள் கால் முளைத்த பூவாக "அம்மா அம்மா மா................................ காக்கிண்ணன் எனக்கு chocolate கொடுத்துச்சி" என்று கத்திக்கொண்டே மாடியில் ஓடிக்கொண்டிருந்தாள். கார்த்திக்கு அவள் இன்னும் குழந்தை போல காக்கிண்ணன் என்று அழைத்து மிகவும் பிடித்தது. இதை இனிமே முழுவதுமாக அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தான்.
மலரும்............................
YOU ARE READING
குறிஞ்சி மலர்
General Fictionஉயிரை எடுத்துக் கொண்டு மறைந்து போனவள்....... குறிஞ்சி மலராக மலர்வாளா?????