7

1.8K 82 0
                                    


அவர்களின் சந்தோஷத்தை கலைப்பது போல சாரதாம்மாவின் cell இசைக்க அதை எடுத்து பார்த்தவர் அது வீட்டில் இருந்து எனவும் "அய்யோ அத்தையை மறந்துட்டேனே அங்கே என்ன நடந்ததோ தெரியலையே?" ஒரு பதட்டத்தோடு callலை attend செய்ய அந்த பக்கம் சமையல் செய்யும் அமிர்தம் பாட்டி "சின்னம்மா நான்தான் அமிர்தம் பேசுறேன்" அவர் குரலில் ஏகத்துக்கு ஒரு பதட்டம் இருக்க "எ............ என்ன பாட்டி? அத்தைக்கு ஒன்னும் இல்லையே? அவங்க நல்லதான் இருக்காங்க?"

அமிர்தம் பாட்டியோ "அவுங்க நல்லதான் இருக்காங்க ஆனா............. நீங்க கொஞ்சம் சீக்கரம் வாங்கம்மா. ஆமா அந்த நிலா பொண்ணு எப்படி இருக்கு? அது பாவம் இங்கு வந்து மாட்டிக்கிச்சி இப்படி..... சரிம்மா நீங்க கொஞ்சம் சீக்கரம் வாங்க. அம்மா அப்புறம் ஒரு விஷயம் நீங்க மட்டும் வாங்க பிள்ளைகளை வேண்டாம்மா" .

"
என்னச்சி பாட்டி ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லையே"

"
தெரியவில்லைமா நீங்க தான் வந்து சொல்லணும்" அமிர்தம் பாட்டி கூறவும் வேகமாக சுகுணா அருகில் வந்த சாரதாம்மாள் அவரிடம் ஏதோ கூற சுகுணா பரத்தை அழைத்து "பரத் நீ நிக்கியை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு போ. காலையில் அவனை இங்கே கூட்டிட்டு வந்திரு சரியா"

"
முகுந்தன் நீ வீணா கூட hospitalல இரு அப்புறம் இவனை நம்ம கூட வர சொல்லு" என்று கார்த்திக்கை காட்டி சுகுணாவிடம் கூறிவிட்டு சாரதாம்மாள் முன்னே செல்ல வீணாவோ " அம்மா கற்புக்கு இங்கே பாதுகாப்பே இல்லை அதுனால நான் உங்க கூட வரேன்" முகுந்தனை பார்த்து ஒரு குறும்போடு கூற அதற்கு பதில் பரத் இடம் இருந்து வந்தது "முகுந்தன் கற்புக்கு தானா வீணா இது hospital கொஞ்சம் அடக்கி வாசி நாளைக்கு வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம் சரியாம்மா" நல்ல பிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு வீணாவை வம்பு பண்ண ("அடபாவிகளா! இது hospital என்னமோ tour வந்த மாதிரி என்ன ஆட்டம்) "பரத் அண்ணா நீ வாய் அதிகமா பேசுற அது நல்லதுக்கு இல்லை ஆமா................ எனக்கு மட்டும் கோபம் வந்திச்சி உனக்கு அந்த டாக்டர் மாதிரி ஒரு லூசை கட்டி வச்சிருவேன் ஜாக்கிரதை" வீணா மேலும் வம்பு செய்ய முகுந்தன் தான் வீணா கொஞ்சம் வாயை மூடு "நீங்க கிளம்புங்க பரத்" என்று அனைவரையும் ஒரு வழியாக அனுப்பி

குறிஞ்சி மலர்Where stories live. Discover now