18

1.7K 85 2
                                    


மலர் 18


உள்ளே வந்த முகுந்த தன் வீட்டு சோபாவில் வாழ்வேமாயம் கமல் போல் அமர்ந்திருந்த கார்த்திக்கை பார்க்க பார்க்க சிரிப்பாக வந்தது. ஏதோ அரவம் கேட்டு கண் விழித்த கார்த்தி அங்கு நின்று கொண்டுயிருந்த முகுந்தனை பார்த்தவன் "என்னடா?" என்று வினாவ "உன்னை பார்த்த சிப்பு சிப்பு வருது டா மாப்பிள்ளை!!!!!! எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!!!!!" முகுந்தன் விவேக்கையும் வடிவேலுவையும் கலந்து அடிக்க "உனக்கு ரொம்ப கொழுப்பா போச்சிடா" என்று விட்டு அடிக்க கை ஓங்கும் நேரம் நிலாவின் அறையில் இருந்து சுஜாவும் நிலாவும் வெளியே வரவும் சரியாக இருந்தது.

சுஜா கார்த்திக்கை முறைத்துக்கொண்டே "நிலா நான் கிளம்புறேன் அப்புறம் trips எப்படி மாத்தணும்னு சொன்னேல அது படி மாத்திரு நான் நாளைக்கு காலையில வரேன் சரியா?" விடை பெரும் பொருட்டு முகுந்தனை பார்த்து ஒரு தலை அசைப்பை தந்தவள் கார்த்திக்கின் மீது ஒரு தீ பார்வை செலுத்தி விட்டு வெளியே வர அதுவரை அமைதியாக இருந்த கார்த்திக் "dai முகுந்த் மழை வரும் போல இருக்கு கொடைக்கானல் வரை scootyல போக வேண்டாம் டா pls" கிட்ட தட்ட கெஞ்ச

"
முகுண்ணா நீங்க ஸ்கூட்டி எப்போ வாங்கினிங்க அதுவும் எனக்கு தெரியமா?" நக்கலாக நிலா வினவா கார்த்திக் அவளை உஷ்ணம்மாக ஒரு பார்வை பார்க்க "நான் chickenனா இருந்தான் இவன் பார்த்த பார்வைக்கு tandoorichicken ஆயிருப்பேன்." மனதில் சலித்துக்கொண்டவள் வாசல் பக்கம் பார்வை திருப்ப சுஜா break போட்டது போல் நின்றுகொண்டு இருந்தாள்.

வேகமாக அவள் அருகில் சென்று தோளில் கை வைக்க கண்ணில் துளிர்த்த கண்ணீரை துடித்துக்கொண்டு செல்லில் ரமேஷ்சை அழைத்து தன்னை அழைக்க வருமாறு கூறிவிட்டு தோட்டத்தில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்தவள் கண்களில் திரும்பவும் வைரமாய் கண்ணீர் துளி நிலா மிகவும் மெதுவாக சுஜா தோல் தொட நிலா மடியில் தலை கவிழ்ந்து ஒரு மூச்சி அழுது தீர்த்தாள்.

"
என்னமா?" நிலா ஆதுரமாக கேட்க ஆணையை உடைத்துக்கொண்டு வரும் வெள்ளம் போல் கண்ணீரில் கரைந்துபோனாள். சில நிமிட கண்ணிற்கு பிறகு "என்னை இப்படி பாசமா கேட்கவோ தப்பு செய்த அதட்டவோ யாரும் கிடையாது" விசும்பலுடேனே சுஜா கூற

குறிஞ்சி மலர்Where stories live. Discover now