12

1.7K 85 1
                                    

மலர் 12 

வெளியே வந்த கார்த்திக் கொடி rose பந்தல் அருகில் அமர்ந்து வீணாவிடம் வழவழத்து கொண்டிருந்த நிலாவை தான் முதலில் பார்த்தான். வீணா ஏதோ கூற அதற்கு நிலா பத்திரம் காட்டி சிரிக்க அதில் கார்த்திக்கின் மனம் பேய் ஆட்டம் ஆடியது. ஏதோ உந்தலில் வேகமாக கீழே இறங்கி வந்தவன் நேராக இருவரிடமும் சென்றான்.

தன்னையே விழி விரிய பார்த்துக்கொண்டிருந்த நிலாவை பார்த்தவன் அவள் அருகில் சென்று "ஏன் டி என்னை அப்படியே பார்வையிலே மயக்கலாம்ன்னு பார்த்தியா? என்னாடி அப்படி ஒரு பார்வை என்னையே முழுங்குற மாதிரி. வேலைக்கார நாயே" என்று கூறியவன் அவள் எதிர் பார்க்க நேரம் அவளை ஓங்கி ஒரு அரைவிட அதில் தடுமாறி விழ போன நிலாவை பிடித்துக்கொண்டாள் வீணா.

நிலாவுக்கு அவமானம் பிடுங்கி தின்றது தன்னை யாரோ தீயிலிட்டு வாட்டுவது போல உணர்ந்தாள். எந்த ஆண்களையும் நிமிர்ந்து பார்க்காத நிலா கார்த்திக்கிடம் மட்டும் வசம் இழந்தாள். அவன் அவளை ஏதோவொரு
விதத்தில் பதிக்கிறான். அவனை பார்க்காத போது அமைதியாக இருக்கும் மனம் அவனை பார்த்தவுடன் மாற்றத்தை மறந்து விடும். அவன் பேசியதை நினைத்து உள்ளுக்குள் உடைந்தே போனாள்.

இதுவரை அவனிடம் பேசியதே இல்லை ஏன் ஒழுங்காக பார்த்தது கூட கிடையாது ஆனால் இது என்ன மாதிரியான உணர்வு என்று அவளுக்கு புரியவேல்லை. ஆனாலும் இன்று அவன் பேசியது அவளது உள்ளத்தில் கத்தி விட்டு திறுகுவது போல இருந்தது.

வீணாவின் முலம் வீட்டில் நடந்ததை பற்றி அறிந்த முகுந்தன் நேராக சென்ற இடம் கார்த்திக்கின் office room. தன் முன்னால் ருத்திரமூர்த்தியாக நின்றுகொண்டு இருந்த முகுந்தனை பார்த்த கார்த்திக்கு ஒன்றுமே புரியவில்லை அதுவும் அவன் ஒரு blank chequeயை எடுத்து அவன் முன் போடவும் கார்த்திக் மிகவும் குழம்பிவிட்டான்.

அவன் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்த முகுந்தன் "உன்னோட guesthouseசை use பண்ணதுக்கு வாடகை அப்புறம் இன்னும் ஒரு பத்து நாள் time குடு நிக்கிக்கு exam முடிந்த உடன் வீட்டை காலி பண்ணிறேன். இன்னும் ஒரு விஷயம் என் தங்கச்சியை நீ இனிமே கண்ணால கூட பார்க்க கூடாது".

குறிஞ்சி மலர்Where stories live. Discover now