14

1.6K 81 3
                                    

மலர் 14


சாரதாவின் "முகுந்த்" என்ற குரலுக்கு ஓடி வந்து நின்றான் ஒரு பதினாறுவயது சிறுவன் (நம்ம முகுந்த் தான் பா flashbackல சின்ன பையனா இருக்கான்) "dai முகுந்த் கார்த்தி எங்க? காலையில் இருந்து ஆளையே காணும்".

முகுந்தனோ "எனக்கு தெரியலை அத்தை நானும் அவனை தான் தேடிக்கிட்டு இருக்கேன் எனக்கு last இயர் question பேப்பர் தரேன்னு சொன்னான் அத்தை" என்றான் பதினோராம் வகுப்பு படிக்கும் முகுந்த்.

அப்பொழுது உள்ளே வந்த சுதாகரன் (கார்த்திக்கின் தந்தை) " என்னடா முகுந்த் யாரை தேடுறிங்க?" என்று கேட்டுக்கொண்டு உள்ளே வர "மாமா அந்த கார்த்திக்கை தான் தேடுறோம் எனக்கு question paper தரேன்னு சொன்னான் மாமா" அத்தையிடம் கூறியதை மாமாவிடமும் கூற

"
யாருக்கு யாரு டா மாமா பிச்சைக்கார நாயே" என்று கர்ஜனை கேட்டு எல்லோரும் திரும்பி பார்க்க பெண் சிங்கத்தின் சீற்றத்தோடு ரங்கநாயகி நின்றுக்கொண்டு இருந்தார்.

"
வேலைக்காரன் பெத்த பிள்ளைக்கு பணக்கார மாமன் தேவைபடுதோ
நான் எத்தனை முறை சொல்லிருக்கேன் மாமானு கூப்படாதன்னு சொல்லிருக்கேன்ல" என்று மேலும் கத்த

"
சாரி பாட்டி சாரி இன்னிமே அப்படி கூப்பிட மாட்டேன்" விட்டால் அழுது விடுபவன் போல அவன் கூற "ஏன்ம்மா அவனை அப்படி விரட்டுறீங்க பாவம் சின்ன பையன். அவன் என் நண்பனோட மகன் அதுவும் இல்லாம உங்க மருமகளோட அண்ணன் மகன் வேறு அதனால வார்த்தைகளை ஜாக்கிரதையாக உபயோகிக்கவும்" என்று சுதாகரன் மிரட்டவும்

"dai
நான் உன்னோட அம்மா அதை மறந்துராத" என்று ரங்கநாயகி சூடாக பதில் கொடுக்கவும். "ஓ..........!!! நீங்க என் அம்மாவை நான் கூட நீங்க இந்த ஊரோட சர்வாதிகாரி என்று நினைத்தேன்" சுதாகர் ஏளனமாக கூற

உண்மையிலேயே ரங்கநாயகி அங்கு ஒரு சர்வாதிகாரி ஆட்சி தான் நடத்திக்கொண்டிருந்தார். சுதாகரின் தந்தை இந்த ஊருக்கு நிறைய நல்லது செய்ய மக்கள் அவரை தெய்வமாக போற்றினர். அவர் நல்ல மனதை பார்த்த கடவுள் அவர் சீக்கிரம் தன்னிடம் அழைத்துக்கொண்டார். அதற்கு பிறகு ரங்கநாயகியின் ஆட்டம் கூடதொடங்கியது. சும்மாவே அங்காரம்,

பணபோதை எல்லாம் அவளை ஆட்டிபடைக்க அவர் அந்த ஊர் மக்களை ஆட்டிபடைக்க தொடங்கினார். சுதாகரன் வெளிநாட்டில் இருந்து படிப்பு முடிந்து வர வீட்டில் வேலை செய்யும் சுந்தரின் தங்கையை காதல் மணம்புரிந்தார்.

அதில் ரங்கநாயகிக்கு நிறைய வருத்தம் கோபம் இன்னும் etc., etc., அதனால் சாரதா அவர் படுத்தின பாடு சொல்லி மாளாது அவர் மட்டும் இல்லை அங்கு வேலை பார்த்த துரை கூட சாராதவை நெருங்க பார்த்தான். ஆனால் சாரதா வே அவனுக்கு நிறைய பதில் அடிகொடுக்க அது அவனுக்குள் ஒரு வெறுப்பை உண்டு பண்ணியது அவனுக்கு சுதாகரன் மேல் அளவிட முடியாத வெறி.

அந்த வெறியில் தான் துரை அவரை தாக்க பாய்ந்தோடி வர அவனை ஒரு கையால் கீழே தள்ளியவர் "இவன் தான் நீங்க சொன்ன வேலைக்கார நாய்" அவன் பக்கம் திரும்பியவர் "உன்னை பத்தி நான் கேள்வி படுவது எதுவுமே சரியில்லை ஒழுங்கா இருக்குற வழியை பாரு இல்லாட்டி கொன்னுடுவேன்"
மேலும் மிரட்டி வைத்தார்.

அது எரிகிற தீயில் எண்ணையாக வேலை செய்தது "இருடா உனக்கு ஒரு நாள் என் கையில் தான் சாவு" என்று மனதுக்குள் சூளுரைத்துகொண்டான் துரை.

இது ஏதுவுமே அறியாத இரண்டு இளம்மனங்கள் விளையாட்டில் முழ்கி இருந்தன. பதினேழு வயதான அந்த சிறுவனை "dai ஸ்ரீ ஒழுங்கா அதை கொடுடா இல்லை நான் உன்னை ஒரு அடி அடித்தேன் நீ தாங்கமாட்ட ஆமா....... நானே அம்மாவுக்கு தெரியாம ஒரே ஒரு கடலைமிட்டாய் எடுத்துட்டு வந்தேன் அதையும் இப்படி குரங்கு மாதிரி பிடுங்கி திங்குறியே இரு உன்னை முகுண்ணா கிட்ட சொல்லுறேன்" என்று அந்த சின்ன குறுஞ்சிமலர் மிரட்ட

"
ஏண்டி அவன் என்னை விட சின்ன பையன் அவனை பார்த்து நான் பயப்படமாட்டேன்" என்று ஸ்ரீ கேட்க

"
ஆமாம் டா நீ ரொம்ப பெரியை இவன் தான் போடா" என்று கூறி கொண்டே ஓடிவிட்டாள் குறுஞ்சிமலர்.

மலர்..........................

குறிஞ்சி மலர்Where stories live. Discover now