19

1.6K 89 2
                                    


மலர் 19


நிலாவையே விழுங்குவது போல பார்த்தவன் ஒரு நொடியில்
அவளை இறுக அனைத்து இதழோடு இதழ் சேர்க்க ஆழி பேர்அலையில் சிக்கியது போல உணர்ந்தாள் நிலா.

அவனிடம் இருந்து விலக சொல்லி பெண்புத்தி கட்டளை பிறப்பிக்க ஆனால் பெண்மனமோ "சும்மா அடங்கு" என்று புத்தியை அடக்க இவர்களுக்குள் நடந்த போரட்டத்தில் புத்தி ஜெய்க்க கைகள் கார்த்திக்கை தானாக ஒரு தள்ளு தள்ள முதலில் தடுமாறிய கார்த்திக் பிறகு சமாளித்துக்கொண்டு அவள் முகம் பார்க்காமல் "sorry" என்று ஒரு வார்த்தையோடு திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டான்.

பயந்த குழந்தை போல் ஓடும் அந்த ஆறடி மனிதனை பார்க்க பார்க்க சிரிப்பாக வந்தது. ஏதோ பேய் துரத்துவது போல வெளியே ஓடிவந்தவன் நேராக முகுந்தன் மேல மோதிக்கொள்ள "என்னடா பேயை பார்த்த மாதிரி ஓடிவர"

"
ஆமா அழகான மோகினி பேய்" என்று கூறிவிட்டு கனவில் நடப்பவன் போல் நடந்து செல்பவனை விசித்திரமான பார்த்தார்கள் முகுந்தனும் வீணாவும்.

"dai
நந்து இவனுக்கு என்னாச்சி ஏன் இப்படி மந்திரித்து விட்ட மாதிரி போறான்" வீணா கேட்க "தெரியல ஆனா ஏதோ இருக்கு" என்றுவிட்டு வீணாவை நெருங்க "dai உனக்கு கொழுப்பு கூடி போச்சி முதல
நிலாகிட்ட சொல்லி உப்பு காரத்தை குறைக்க சொல்லுறேன் அப்புறம் எல்லாம் சரியா போயிரும்" என்று கூறி அவனை தள்ளி விட்டு சிரித்துக்கொண்டே ஓட அதை ஒரு ஜோடி கண்கள் தீ பொறி பறக்க பார்த்துக்கொண்டு இருந்தனர். பாவம் அதை முகுந்தன் கவனிக்க தவறியது அவனது தலைவிதியே!!!

கார்த்திக் தன் அறையை நோக்கி செல்லும் போது "கார்த்திமா" என்று குரல் கேட்டு திரும்பியவன் அங்கு அவன் அன்னையை பார்த்தான். அவர் கண்ணில் இருந்த பயம் அவனை யோசிக்கவைத்தது.

"
என்னமா ஏதோ யோசனை போல?" அவர் கண்களில் இருந்த பயத்தை கவனிக்காதது போல கேட்க "இல்லைடா தம்பி நான் இப்போ அந்த சின்ன பெண்ணை பார்க்க வந்தேன் அப்போ .................."என சொல்லுவது என்று தெரியமால் அவர் தடுமாற

குறிஞ்சி மலர்Where stories live. Discover now