20

1.5K 81 0
                                    


மலர் 20

ரங்கநாயகிக்கு கோபம் அடங்க மறுத்து "இது என்ன வீடா இல்லை அநாதை இல்லம்மா கண்டவளையும் உள்ளே கொண்டு வராங்க" அவர் புலம்பிகொண்டிருக்கும் போது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் "யாரும் உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கிறது இல்லை. அவங்க அவங்க அவுங்க இஷ்டத்துக்கு முடிவு எடுக்குறாங்க. நம்ம அந்த வேலைக்கார பொண்ணு வரகூடாதுனு தான் அந்த குடும்பத்தையே ஒன்னும் இல்லாம பண்ணினோம் ஆனா இப்போ அந்த வேலைக்கார குடும்பம் முழுசும் உள்ளே வந்திரும் போல இருக்கு அம்மா. முகுந்தனும் வீணாவும் போடுற ஆட்டம் தாங்க முடியலை அதுக்கு அந்த கார்த்திக்கும் உங்க மருமகளும் உடந்தை" என்று கூறும் போது மருமகளில் ஒரு அழுத்தம் கொடுத்து கூற

ஏற்கனவே கள் குடித்த குரங்கு போல இருந்த ரங்கநாயகி இப்பொழுது பைத்தியம் பிடித்த குரங்காக மாற அதன் கையில் கிடைத்த பூமாலையாக சிக்கி கொண்டது கார்த்திக், நிலா மற்றும் முகுந்தன், வீணாவின் வாழ்க்கை.

"
ஏய் சாரதா சாரதா............." என்று பல்லை கடித்துக்கொண்டு கத்தவும் பயந்து ஓடி வந்த சாரதாவை பார்க்க பார்க்க துரைக்கு மனம் நிறைந்தது பல நாள் கனவு நிறைவுற்றது போல ஒரு பரபரப்பு ஆனால் இன்னொரு மனம் இன்னும் நிறைய இருக்கு அதுக்குள் சந்தோஷ படாதே என்று கூற முக பாவனையை மாற்றிக்கொண்டான்.

சாரதாவுக்கு பயம் பற்றிக்கொண்டது பழைய ரங்கநாயகியாக நின்றுகொண்டு இருப்பவரை பார்க்க பார்க்க உடம்பில் உள்ள ரத்தம் எல்லாம் வடிந்து விடுவது போல இருந்தது இதில் மேலும் அவர் சொன்ன செய்தியை கேட்ட சாரதாவுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது விழ போனவரை கார்த்திக் தான் விழாமல் பிடித்துக்கொண்டவன் ரங்கநாயகியை ஒரு தீ பார்வை பார்த்துவிட்டு சாராதவை படுக்க அழைத்து சென்றான்.

சாராதாவை கட்டிலில் படுக்க வைத்தவன் மெதுவாக அவரை சமாதானம் செய்ய தொடங்கினான். ஆனால் அவர் சொன்ன விஷயத்தை கேட்டவனுக்கு தலை சுற்றி விட்டது இதை எப்படி சாமளிப்பது என்று யோசிக்க தொடங்கினான்.

ரங்கநாயகி கூறியது இது தான் "இங்க பாரு சாரதா உன் பிள்ளைகள் இரண்டு பேருக்கும் இன்னும் பதினைந்து நாளில் கல்யாணம் மாப்பிள்ளையும், பொண்ணும் என் தம்பியோட பேரனும் பேத்தியும். இது உனக்கும் உன் பிள்ளைகளுக்கு ஒரு செய்திதான் புரியுதா?" இதை கேட்ட கார்த்திகே மலைப்பாக தான் இருந்தது.

குறிஞ்சி மலர்Where stories live. Discover now