பெண்ணை பூ என்றான்.....
இல்லை!!!!
பூக்கள் மலரும் முன், புணரும் வண்டு உயிர்ப்பதில்லை....
ஆனால் இங்கோ???
மாண்டது மலர் அல்லவா??பெண்ணை தீ என்றான்...
இல்லை!!!
இளம் தீயை தீண்டியவன் தானே மாளவேண்டும்
ஆனால் இங்கோ??
மாண்டது தீ அல்லவா???இறைவா....
உன் படைப்பில் எத்தனை எத்தனை அற்புதங்கள்...
ஆனால் ஏன் பெண்ணுக்கு மலரின் தன்மையையும் தீயின் வெம்மையையும் தர மறந்தாய்???மறந்தாயோ? மறுத்தாயோ?