பவுர்ணமி இரவு

14 3 0
                                    

நிலவு தன் ஆசை காதலனின் காதலை முழுமையாய் சுகிக்கும் தினம்....
இந்த காதல் ஜோடிகளின்  காதலை எண்ணி கடல் அலைகள் மகிழ்ச்சியாய் ஆர்ப்பரிக்கும் நேரம்...
அந்த அலைகளின் ஸ்பரிசம் என் கால்களை மென்மையாய் நனைத்த வினாடி....
நம் கண்கள் நான்கும் சந்தித்து  கொண்டன....

நீ, என் நிலவு என்றாய்
விடியல் என்னை விரட்டிடும் என்றேன்...
நீ, என் வானம் என்றாய்
அது வெறும் பிம்பம் என்றேன்....
நீ, என் உயிர்த்துளி என்றாய்
பிரிந்தால் மடிவேன் என்றேன்.....

இன்று....... 600 பவுர்ணமிகளுக்கு பின்
அதே கடற்கரையில் நீயும் நானும்

 மன அனல்கள்Where stories live. Discover now