அம்மா

8 2 0
                                    

என் அன்னை ஒரு தமிழ் மேதை
பள்ளி செல்லும் முன்னே
மெய்யை மழலை வடிவிலும்,
உயிரை எழுத்து வடிவிலும்,
உயிர்மெய்யை சொல் வடிவிலும்,
கற்றுத்தந்தவள் அவள் அன்றோ!!!

என் அன்னை ஒரு கணித மேதை
இன்பத்தை கூட்டிக் காட்டவும்,
துன்பத்தை கழித்துக் காட்டவும்,
பணிவை பெருக்கி காட்டவும்,
பிணியை வகுத்து காட்டவும்,
கற்றுத்தந்தவள் அவள் அன்றோ!!!

என் அன்னை ஒரு அறிவியல்  மேதை
மேகத்தைக் கொண்டு வானிலை கணிக்கவும்,
வியர்வையைக் கொண்டு வெப்பநிலை கணிக்கவும்,
முகத்தை கண்டு மனநிலை கணிக்கவும்,
கண்னை கண்டு உடல்நிலை கணிக்கவும்,
கற்றுத்தந்தவள் அவள் அன்றோ!!!

பேதை நானும் மேதை ஆனேன்.....
என் அன்னையால்!!!!!♡♡♡♡
----------------------

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

 மன அனல்கள்Where stories live. Discover now