நாட்கள் கடந்த பிறகும் என் மனதை அரிக்கும் சம்பவம்
பேருந்துநிலைய வளாகத்தில்
நான் நுழைந்த நேரத்தில்
சிறுவன் ஒருவன் என்னிடம் ஓடி வந்து
என் கண்களை நேராக நோக்கி
"அக்கா எனக்கு கண் தெரியாது பசிக்கிறது பிச்சை இடுங்கள்" என்றான்!!
நான் எதுவும் பேசாமல் அவனைக் கடந்து சென்று விட்டேன். நான் பேருந்தில் ஏறும் வரை என் பின்னால் வந்தான்...
இதில் யார் செய்தது குற்றம்? ?
பொய் சொல்லி பிச்சை கேட்ட சிறுவனின் குற்றமா?
பொய் சொல்ல தெரியாத சிறுவனை பொய் சொல்ல வைத்த வஞ்சகரின் குற்றமா?
அவன் சொல்லும் பொய்யையும் ஆதரித்து அவனுக்கு உதவும் சில நல்லவர்களின் குற்றமா?
யார் குற்றம்? என நான் சிந்திக்கும் சில வேளைகளில்ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று, என்னும் புறநானூறு வரிகள் என்னையே குற்றவாளி ஆக்கியது