அத்தியாயம் : 02

819 32 2
                                    

அவன் என் கையைப் பிடித்து நிறுத்தியும் நான் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை...அந்த நிலையிலேயே அவனுடனான வாக்குவாதத்தை தொடர்ந்தேன்...

"கைய விடு வருண்..."

"நான் இன்னும் பேசி முடிக்கலை நித்தியா..."

"இதான் நீ பேசுற இலட்சணமா..??கைய விடு முதல்ல..."

அவனிடமிருந்து கையை விடுவிக்க எவ்வளவு போராடியும் என்னால் அவனிடமிருந்து என் கைகளை விடுவித்துக் கொள்ள முடியவேயில்லை...

"நான் சொல்றதை முதல்ல கேளு நித்தியா...அப்புறமா உன் கையை விடுறதா...விட வேண்டாமான்னு நீயே சொல்லு...."

"நீ உன் இஸ்டத்துக்கு என்னவேணும்னாலும் பேசுவ...அதை நான் நின்னு கேட்டிட்டு இருக்கனுமா...?.."

"நான் பேசினதில எந்தத் தப்பும் இருக்கிறதா எனக்குத் தோனலை..."

இவ்வளவு நேரமும் இறங்கி வந்து கொண்டிருந்த அவன் குரல் மறுபடியும் உச்சத்தை தொட்டது...

"திமிரைப் பார்..."

"நீ எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோ நித்தியா...நீ வாய் வார்த்தைக்கு கூட என்னைவிட இன்னொன்றை பிடிக்குதுன்னு சொல்றதை என்னால ஏத்துக்க முடியல..."

அவனது குரலில் இருந்த எதுவோ ஒன்று அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது...அவனது இரு விழிகளும் என்னிடம் எதையோ சொல்வதற்காய் காத்துக் கொண்டிருந்தன...அவனது உதடுகள் அதைச் சொல்வதற்காய் துடித்துக் கொண்டிருந்தன...

அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்...சில விநாடிகளுக்கு எங்களிருவரையும் மௌனமே சூழ்ந்து கொண்டது...அந்த மௌனத்தை முதலில் நானே உடைத்தெறிந்தேன்...

"ஏன்...??.."என் குரல் கூட அவ்வளவு மென்மையாக ஒலிக்குமென்று அன்றுதான் நானும் தெரிந்து கொண்டேன்...

ஆனால் நான் கேட்டது அவனுக்குப் புரியவில்லை போலும்...அதனால் என் மீது புரியாத பார்வையொன்றைப் படரவிட்டான்...

"ஏன்...உன்னால ஏத்துக்க முடியல்ல...??..."

"ஏன்னு உனக்குத் தெரியாதா நித்தியா...??..."என்றவனின் பார்வை என் விழிகளை ஊடுருவிச் சென்றது...

நெஞ்சோடு கலந்திடுWhere stories live. Discover now