அத்தியாயம் : 03

689 31 2
                                    

அன்றும் இதே போல்தான் இதே கடற்கரையில் அமர்ந்திருந்தேன்...அன்று மட்டுமல்ல,என்று அவன் இந்தக் கடற்கரையில் வைத்து அவனது காதலைச் சொன்னானோ...அதிலிருந்து இந்தக் கடலையும் நான் நேசிக்க ஆரம்பித்து விட்டேன்...

அதுவரை காலமும் அலைகளோடு விளையாடுவதில் மட்டுமே கழிந்த என் காலங்கள்,அவன் காதல் துளிகள் அதில் கலந்ததிலிருந்து அவனைப் போலவே இக் கடலும் என் மனதிற்கு நெருக்கமாகிக் கொண்டது...

இக் கடலை என் மனம் அதிகம் தேடுவதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது....அவன் காதலைச் சொல்லி நான் மறுத்த அந்த நொடியிலிருந்து அவன் என் முன்னே பெரிதாக வருவதில்லை...ஆனாலும் நான் அறியாமல் என்னை அவன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தான்...அன்று அவன் சொன்னது போல,என் நிழல் போலே என் பின்னே வந்து கொண்டிருந்தான்...

சில நேரம் அவன் காலடிகள்,சில நேரம் அவனின் பார்வைகள் என்று என்னை அவனது காதலால் தீண்டிக் கொண்டேயிருந்தான் ...ஆனால் மறந்தும் என் முன்னே அவன் வந்ததில்லை...அதனாலேயே என் மனம் அவனை அதிகமாய் தேடத் தொடங்கியது...

அந்த நேரங்களில் எல்லாம் என் மனம் நாடுவது இந்தக் கடற்கரையினைத்தான்....என் இத்தனை கால அவனுக்கான காத்திருப்பில் என்னோடு இணைந்து இக் கடலும் அவனுக்காய் காத்துக் கொண்டிருக்கின்றது...

அவன் என்னிடம் காதல் சொல்லி அன்றோடு முழுதாக இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது...மணலில் அமர்ந்தவாறே கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்...கண்களுக்குள் அவன் மட்டுமே என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்..

திடீரென்று அவனே என் முன் வந்து நிற்பது போன்ற பிரம்மை எனக்குள்...ஆனால் அது என் பிரம்மை இல்லை,அவன் நிஜமாகவே என் முன்னேதான் நிற்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு ஓர் விநாடி கூட அவசியமாகவில்லை...

இந்த இரு மாதங்களாய் என் முன்னே வராமல் என்னைத் தவிக்க விட்டவன்,கைகளிரண்டையும் ஜீன்ஸ் பாக்கட்டில் விட்டவாறு,என் விழிகளை அவனது விழிகளால் ஊடுருவியவன் என் அருகே வந்து அமர்ந்து கொண்டான்...

நெஞ்சோடு கலந்திடுWhere stories live. Discover now