ரஞ்சன் தன் பழைய நினைவுகளை பற்றிய பேசிய போது.. அந்த குரல் உமாவிற்கு ஏதோ ஈர்ப்பை தந்தது. அது மனதை விட்டு அகலமறுக்க.. அதையே நினைத்தபடி நின்றிருந்தாள் உமா.
“நாளைக்கு பார்க்கலாம்..” என ரஞ்சன் கிளம்பும் போது சொன்னதற்கு கூட.. வெறுமனே தலையை மட்டும் அசைத்தாள்.
“நாளைக்கு பார்க்கலாம்னு சொல்லிட்டு போறாரு.. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஸ்கூல் லீவுல்ல..” என மஞ்சு கேட்க.. சில நொடிகள் எதுவும் புரியாமல் நின்றிருந்தாள் உமா.
“ஹே.. என்னடி நடக்குது இங்க..” என மஞ்சு இழுக்க.. “அ.. அது.. நாளைக்கு மேகலா டீச்சர் வீட்டில ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாருக்கும் டின்னர்.. அதைத்தான் சொல்லிட்டு போறாரு..” என்றாள் உமா ரஞ்சன் சொன்னதை புரிந்து கொண்டு.
“ஓ.. நான் உங்க இரண்டு பேருக்கும் மட்டும் ஏதோ ஸ்பெஷல் மீட்டிங்கோனு நினைச்சிட்டேன்..” என மஞ்சு கேலியாக சொல்ல.. செல்லமாக இரண்டு அடி வைத்தாள் உமா.
மஞ்சுவின் குழந்தையோடு சில நிமிடங்கள் விளையாடி விட்டு.. வீட்டுக்கு கிளம்பினாள் உமா.
அன்று கடையில் இருந்து பிரபா திரும்பி வந்ததும் இரவு உணவை சாப்பிட அமர்ந்த வேளையில் உமா.. மேகலா டீச்சர் வீட்டில் டின்னர் என்பதை சொன்னாள்.
பிரபா தானே அழைத்துச் செல்வதாக சொல்ல.. சரியென்றாள் உமாவும்.
ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல.. துணி துவைக்க.. மதியுடன் அரட்டை அடிக்க.. அம்மாவுக்கு உதவ.. என உமாவின் பொழுது நகர்ந்தது.
ரஞ்சனின் வீட்டில் டின்னருக்கு தேவையான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த ஏற்பாடுகளை மேற்பார்வை இட்டபடியே.. நண்பர்களுடன் அலைபேசியில் உரையாடியபடி பொழுதை நகர்த்தினான் ரஞ்சன்.
இரவு ஏழு மணிக்கு சற்று முன்பாகவே ரஞ்சனின் வீட்டுக்கு ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். ரஞ்சனும் குடும்பத்தில் மற்றவர்களும் அவர்களை உபசரித்துக் கொண்டிருந்தனர்.