💕 10 💕

5.5K 246 34
                                    

காலையில் பள்ளிக்கு வரும்போது ரஞ்சனுக்கு குட்மார்னிங் உடன் ஒரு புன்னகை என இயல்பாக தான் எல்லா நாட்களும் நகர்ந்தது.

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்துவிடுவது பிரபாவின் வழக்கம்.. அப்படித்தான் அன்றும் வீட்டுக்கு வந்திருந்தான் பிரபா.

ஆனால் எதிர்பாராத விதமாக கார் ஒன்று வீட்டு முன் வந்து நின்றது. திலீபனும் மேகலாவும் காரில் இருந்து இறங்க.. அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாக வரவேற்றனர் பிரபாவும் சுசீலாவும்.

“என்ன டீச்சர்.. இவ்ளோ தூரம்.. சொல்லி இருந்தா நானே வந்திருப்பேனே..” என்றான் பிரபா.

“ஏன் நாங்க உன் வீட்டுக்கு வரக்கூடாதா..” என கேட்டார் மேகலா.

“அய்யோ.. அப்டிலாம் இல்லை டீச்சர்..” என புன்னகையோடு சொன்ன பிரபாவுக்கு.. என்ன விஷயமாக வந்திருக்கிறார்கள் என நேரடியாக கேட்க தயக்கமாக இருந்தது.

சுசீலாவுக்கும் அதே தயக்கம் இருக்க.. அதை புரிந்து கொண்ட திலீபன் பேச்சை தொடங்கினார்.

“உமாவை எங்க பையன் ரஞ்சனுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கோம்..” என திலீபன் நேரடியாக விஷயத்தை சொல்ல.. முதலில் சுசீலாவும் பிரபாவும் அதிர்ச்சி அடைந்தனர்.

ரஞ்சனை ஏற்கனவே பிரபா நேரில் பார்த்திருக்கிறான்..உமாவுக்கு ரஞ்சன் பொருத்தமாக தான் இருப்பான் என பிரபா எண்ணி பார்த்தான்.

“ஆனால் பள்ளியே நடத்தும் அளவுக்கு வசதி வாய்ந்தவர்கள் ரஞ்சன் குடும்பத்தார்.. உமாவுக்கென சேர்த்து வைத்திருக்கும் நகைகள் நூற்றைம்பது கிராம் தான் இருக்கும்.. அவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்குமோ.. திடீரென கல்யாணம் என்றால்.. “ என பிரபாவும் சுசீலாவும் தவிப்புடன் யோசித்துக் கொண்டிருந்தனர்.

“திடீர்னு வந்து கல்யாண பேச்சு எடுக்கிறது உங்களுக்கு எப்டி இருக்கும்னு புரியுது.. உமாவை எங்க வீட்டில எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.. ரஞ்சனுக்கு பொருத்தமா இருப்பான்னு மனசில பட்டுச்சு.. அதான்..” என்றார் மேகலா.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..حيث تعيش القصص. اكتشف الآن