நூலக சன்னல் வழியே இரசிக்கிறேன் வான்வெளியின் அழகை (நீல பெருங்கடல் போல் உள்ளதால் )
பதறினேன் படபடவென அடிக்கும் பறவையின் இறக்கைச் சத்தம் கேட்டு....
சத்தம் இல்லாமல், இசையில்லாமல் ஆடுகின்றன மரத்தின் கிளைகள்
புத்துயிர் அளிக்கின்றன மரங்களில் மலர்ந்திருக்கும் வெள்ளைப் பூக்கள்....
மனம் குளிர்கின்றது தென்னை ஓலையின் பாடல் வரிகளால்....
பேனா மையோ சொல்கிறது படிப்பதில் கவனம் செலுத்து என்று...
YOU ARE READING
மனதின் உளறல் இது
Poetryஇதயத்தின் ஒலிஅலைகளை வடம் பிடித்து ஒளிபரப்ப விரும்புகின்றேன் எழுத்துக்களாய். ஓய்விருந்தால் அவற்றை ஒளிரச் செய்யுங்கள் உங்கள் உதடுகளால். அனைத்திற்கும் ஆசைப்படுங்கள். எண்ணம் போல் தான் வாழ்க்கை. உணர்தல் வேண்டுமா பாடல்கள் கேளுங்கள். அனுபவம் வேண்டுமா படங...