கேளாயோ!

26 3 2
                                    

நீலக் கருங்குயிலே நித்தம் நிசப்தமாய் கேளாயோ 

இவளின்  பைரவி  இராகத்தை 

கரையும் காக்கையே சற்று விசாரமாய் கேளாயோ 

இவளின் கனிப்பான கரகோஷத்தை 

ஓடும் நதியே ஓயாமல் ஓசையிட்டு  கூறுவாயோ 

இவள் உன்னில் பார்க்கும் அவள் முக பிம்பத்தை 

ஆடும் மரக்கிளையே  சற்றும்  மெய்மறந்து   பார்ப்பாயோ  

உன்னைக் கவர்ந்து செல்லும் இப்பேரழகை 

ஓடும் அணிலே ஒளிந்து கொண்டு ரசிப்பாயோ 

உன்னை ரசிக்கும் இவளின்  ஓரப் பார்வையை 

அலையும் மனமே அயராமல் பின் தொடர்வாயோ 

இவளின்  கண் ஜாடைக்  கவிதைகளை..... 



நன் னன்னன  நன் னன்னன நன்ன  நன் நன்ன நன் நந்நன்னன.......

மனதின் உளறல் இதுWhere stories live. Discover now